எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 14 மார்ச், 2015

சென்னையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள்


போக்குவரத்து விதிகளை மீறுவதனால் ஏற்படும் சிரமங்களை மக்களிடம் எடுத்துக்கூற வருகின்றனர் திருநங்கைகள். சென்னையில் திருநங்கைகள் நவம்பர் 10ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை 50 டிராபிக் சிக்னல்களில் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர். தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக் விழிப்புணர்வு நிகழ்ச்சி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற உள்ளது. இதில் திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு சிக்னல்களிலும் 3 திருநங்கைகள் இருப்பார்கள். ரோட்டரி சங்கத்தில் இருந்து 7 பேர் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் கை தட்டி பிச்சை கேட்பவர்கள் என்ற நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. ஆனால் அவர்களின் கை தட்டல் ஒலி போக்குவரத்து விதிகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. சமீபத்தில் மும்பையில் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருநங்கைகள் கை தட்டி நடனம் ஆடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக