.சோரியாஸிஸ், மஸ்குலார் டிஸ்ட்ரோபி, மூளை வளர்ச்சி குறைபாடு மாதிரி பிரச்சனைகளுக்கு 100% குணம் கிடையாது, மருந்துகள் மூலம் அதை கட்டுக்குள் வைக்க மட்டுமே முடியும். ஆனால் இதை சரி செய்வதாக கூறி கல்லா கட்டுறது இப்போதைய செம பிஸினஸ் அதை எப்படிலாம் பண்றாங்கன்னு ஒரு இஞ்சக்ஷன் ரிபோர்ட்.
ஊருக்குள்ள இந்த மாதிரி பிரச்சனை உள்ள ஆட்கள் யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு ஃபீல்ட் சர்வே நடக்குது... அப்புறமா அவங்க கிட்ட தற்செயலா யாரோ ஒருத்தர் கடை தெருவிலோ அல்லது டீ கடையிலோ என்னங்க இப்படி இருக்கீங்கன்னு ஆரம்பிச்சு.. அங்க ஒரு டாக்டர் இருக்கார் எனக்கு இப்படி தான் இருந்துச்சு முழுசா சரியா போச்சுன்னு சொல்வார்... 'எதை தின்னா பித்தம் தெளியும்'ன்னு இருக்கிறவங்க இதை நம்பி போனா 'ரின் சோப்பு' தான் மொத்தமா உருவிருவானுங்க.
சித்த, ஆயுர்வேத மருத்துவர், யுனானி மருத்துவர்ன்னு குப்பானி வைத்தியம்ன்னு டீவில விளம்பரம் வரும். உலகத்துல தீர்க்க முடியாத வியாதி எல்லாம் தீர்க்கும் ரோசினி கீரை'ன்னு அறிமுகபடுத்துவாங்க ஆனால் அவங்களுக்கு வியாதி வந்தா மீனாக்ஷி மிஷன்ல போய் படுத்துக்குவாங்க.. இவங்க விளம்பரத்தை நம்பி போனா.. அடுத்து திருவோடு தான்.
ஆந்திரா வைத்தியர்ன்னு ஒரு க்ரூப் தெரியுது.. இவங்க ஊருக்கு வெளிய டென்ட் போட்டுக்குவாங்க, ஜிலேபிய பிச்சு போட்டா மாதிரி என்ன மொழின்னே தெரியாத எழுத்துல என்னென்னமோ எழுதியிருக்கும், இவங்க டார்கெட் ஆண்மை குறைவு / நரம்பு தளர்ச்சி தான் விபரமில்லாத விடலைல இருந்து மீண்டும் 20'க்கு ஏங்கும் 60 தான் இவங்க கன்னில சிக்குற க்ரூப், சிக்கிட்டா காற்று போன பலூன் தான் மிஞ்சும்.
வீட்டுக்கே வந்து நாடி பிடிச்சு ஜோசியமா வைத்தியமான்னு தெரியாம ஏதோ ஒன்னு பண்ணுற ஒரு க்ரூப் இருக்கு, இவங்க உங்களை நம்ப வைக்க அடிக்கிற ஒரு விசயம் 'எங்கிட்ட காசு குடுக்காதீங்க... நான் ஒரு மருந்து சொல்றேன் அதை உங்க ஊர்ல இருக்கிற சித்த மருந்து கடையில வாங்கிக்குங்க, எனக்கு 20 ரூ காணிக்கை மட்டும் போதும்'ன்னு, அப்படியே உருகி போய் ரொம்ப நல்லவருன்னுட்டு மருந்து வாங்க கடைக்கு போவீங்க.. அங்க கடைகாரன் கூட டீல் போட்டு சின்ன விபூதி டப்பாவை இவனே அடிச்ச மருந்து லேபிள் ஒட்டி 10,000 பில் போட்டு வைப்பான் நீங்களும் நம்ம்ம்ம்பி வாங்குவீங்க, அப்புறமா எல்லாம் வெம்பிடும்.
இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு அடுத்தடுத்து சொல்றேன்...
இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு அடுத்தடுத்து சொல்றேன்...
இதுக்கெல்லாம் என்ன தான்யா பண்றதுன்னு கேக்குறீங்களா... உள்ளூர்ல இருக்கிற ஒரு படிச்ச மருத்துவரை போய் பாருங்க, சந்தேகத்தோட கேள்வி கேளுங்க, உங்க வியாதியை பற்றி விளக்க சொல்லுங்க, 4 தடவை போனா தெளிவா தெரிஞ்சிடும், பெரிய அளவில பில் போட்டா என்ன காரணம்ன்னு கேளுங்க, மருந்து பெயர் கேளுங்க, 4 இடத்துல விசாரிச்சு வாங்குங்க, தலையில துண்டை போட்டுட்டு போய் எந்த வைத்தியமும் பாக்காதீங்க.. நேர்மையா ஆமா எனக்கு வியாதி இருக்கு என்ன இப்போன்னு நெஞ்சை தூக்கிட்டு போய் மருத்துவம் பாருங்க, மனுஷன்னா வியாதி வராமலா இருக்கும்??
முக்கியமா ரொம்ப கூட்டமா இருக்கிற மருத்துவரை முடிந்த அளவுக்கு தவிருங்க... புது மருத்துவர்கள் இன்னும் ஆர்வமா பொறுமையா பார்ப்பாங்க.. அதனால அவங்களையும் ஆலோசனை பண்ணுங்க. Keep Enjoying with your problems... After all we are human beings..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக