எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 5 மார்ச், 2015

சுக்கிரன் ஜாதகத்தில் எப்படி..மண வாழ்க்கை அப்படி


பொதுவாக களத்திரகாரகன் என சொல்லக்கூடிய சுக்கிரன் ,மேசம்,சிம்மம்,,தனுசு வீட்டில் இருக்கும்போது அசுவினி,மகம்,மூலம் என கேதுவின் சாரத்தில் நின்று விட்டால் அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கடும் சோதனையை தரக்கூடியதாக இருக்கிறது

இவர்கள் வெளிநாட்டில் தங்கி விட்டவர்களை மணப்பது நல்லது...அல்லது குறை இருப்பவர்களையோ விவாகரத்து ஆனவர்களையோ மணப்பதுதான் நல்லது..அல்லது இயற்கையாகவே அப்படி நிகழ்ந்து விடும்...

மேற்க்கண்ட அமைப்பில் திருமணம் செய்தவர்கள் பலர் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கின்றனர்...அல்லது கணவனும்,மனைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத அளவு பிசியாக வேறு ஊர்களில் தங்கி விடுகின்றனர்...வருடத்திற்கு ஒருமுறை சந்திப்பு என இருப்பார்கள் இப்படி இருந்தால் பிரச்சினை இல்லை

சுக்கிரன் சிம்மத்தில் அமர்ந்து கேது சாரத்தில் இருந்த பெண் ஒருவர் மிக அழகானவர் வசதியானவர்..மிக அறிவானவர்..ஆனால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஈகோ பிரச்சினையால் இருவரும் பிரிந்தனர்...

சுக்கிரன் ஜாதகத்தில் சனியுடன் சேர்ந்தாலும்,ராகுவுடன் சேர்ந்தாலும்,கேதுவுடன்,சூரியனுடன் சேர்ந்தாலும்,சந்திரனுடன் சேர்ந்தாலும் கவனமாக பொருத்தம் பார்த்து சேர்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக