எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 18 மார்ச், 2015

திதி சூன்ய ராசிகளும் கிரகங்களும்


          நமது ஜோதிட சாஸ்திரத்தில் திதிகள் மிக முக்கியமானவை . பஞ்சாங்கம் என்பது பஞ்ச அங்கங்களை கொண்டது . அவை வாரம் (நாள் ), திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகும். இந்த பஞ்ச அங்கங்களும் மனிதனின் ஜாதகத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.
            நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி 15 திதிகள் உள்ளன. பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த 15 திதிகளில் எதாவது ஒரு திதியில்தான் பிறந்தாக வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது. ஒவ்வொரு திதியில் பிறக்கும் மனிதருக்கும் அந்த திதியால் நன்மையான பலன்களும், சில கெடுபலன்களும் கலந்தே நடக்கும்.
            அதிலும் முக்கியமான ஒரு விசயமும் உண்டு. நீங்கள் பிறக்கும் திதியால் உங்கள் ஜாதகத்தில் சில இராசிகள் விஷ சூன்ய இராசிகளாக மாறும். இதன் பலனாக அந்த ராசியும் (இராசியின் காரகத்துவ பலன்களும் )அதில் உள்ள கிரகங்களும் ( கிரகங்களின் காரகத்துவ பலன்களும் ) விஷ சூன்ய பலன்களை ( அதன் கெடு பலன்களை ) தரும். அதன் விபரங்களை கீழே காணலாம்.

     திதிகள்                         விஷ சூன்ய இராசிகளும், கிரகங்களும் 

1.பிரதமை            -            மகர இராசி, வளர்பிறை சந்திரன்.
2.துவிதியை        -            தனுசு, மீன இராசி, வளர்பிறை சந்திரன்.
3.திருதியை         -            மகர இராசி, வளர்பிறை சந்திரன், சூரியன்.
4.சதுர்த்தி              -            கும்ப இராசி, வளர்பிறை சந்திரன்.
5.பஞ்சமி                -           மிதுனம், கன்னி இராசி, வளர்பிறை சந்திரன்.
6.சஷ்டி                   -           மேஷம், சிம்ம இராசி.
7.சப்தமி                  -           தனுசு, கடக இராசி.
8.அஷ்டமி              -           மிதுனம், கன்னி இராசி.
9.நவமி                     -          சிம்மம், விருட்சிக இராசி.
10.தசமி                   -           சூரியன்.
11.ஏகாதசி              -            தனுசு, மீன இராசி, தேய்பிறை சந்திரன்.
12.துவாதசி            -           மகர இராசி, தேய்பிறை சந்திரன்.
13.திரயோதசி        -          தேய்பிறை சந்திரன், சூரியன்.
14.சதுர்தசி               -        மிதுனம், கன்னி, தனுசு, மீன இராசி, தேய்பிறை சந்திரன்.
15.அமாவாசை  அல்லது பெளர்ணமி  - திதி சூன்யம் இல்லை.


   இவ்வகையில் திதி சூன்யம் பெற்ற இராசியில் உள்ள கிரகங்களும், திதி சூன்யம் பெற்ற கிரகங்களும் பிறந்த லக்னத்திற்க்கு 6, 8, 12 ல் இருந்தாலோ அல்லது சனி, செவ்வாய், ராகு, கேது சேர்க்கை அல்லது பகை மற்றும் நீச இராசியில் இருந்தால் திதி சூன்ய கிரகத்திற்கு விலக்கு ஆகும். இந்த அமைப்புகள் இல்லையென்றால் அதற்கு உண்டான சரியான பரிகாரங்களை செய்து சரிபடுத்தி கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக