ஹலோ... யாரு ஜப்பான் மேனேஜர் சால்பத்திரி கும்மாவா நீ ஒரு ரெண்டுங்கெட்டான்யா தமிழும் தெரியாது இங்கிலீஷும் புரியாது சரி உனக்கு தெரிஞ்ச ஜப்பான் பாஷையிலேயே திட்டித் தொலைக்கிறேன்....
ஈப்பலத்தா ஈசக்கண்ணா ஈப்பலத்தாவோ ஆசைக்கண்ணே வைரமல்லா ஆனமல்லாவோ அஸ்கலக்கா லக்கா அஸ்கலக்கா புட் த போன்...
உஜாங்கு மூக்குப் புள்ளி... ஊத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி... ஆ.. மோந்து... மோந்து... மோந்து... ஆல் த ஜூடோஸ் ஃபாலோ மீ யா... ஆல் தி ஜிலேபிஸ் ரவுண்டா இருக்கும் மைசூர்பாக் சதுரமா இருக்கும் தட்ஸால் ஆ... என்னததே.. கில்பான்ஸா.. ஆ.. போன்ற பிரத்யேக வார்த்தை பிரயோகங்கள் தேங்காய் அவர்களின் சிறப்பு.. அவரின் உச்சரிப்பில் இதெல்லாம் கேட்டாலே சிரிப்பு அள்ளும்!
தேங்காய் சீனிவாசனின் டயலாக் டெலிவரி அவர் ஒருவருக்கே உரித்தானது.. அதே அதே..காசே தான் கடவுளடா போலிச் சாமியார்.. தில்லு முல்லு ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி.. டிக் டிக் டிக் பத்திரிக்கை எடிட்டர்.. இப்படி இவருக்காகவே உருவான கேரக்டர்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனித்துவம் பெற்றவை.. பின்னாளில் வில்லனாகவும் வந்து கலக்கியிருப்பார்.!
தமிழ் சினிமாவில் மறக்கவியலாத ஒரு அருமையான கலைஞர்.. நடிகர் டணால் தங்கவேலு தான் இவரது குருநாதர்.. சந்திரபாபுவுக்குப் பின் சென்னைத் தமிழை அநாசயமாக பேசி நடித்த நடிகர் இவரே! இவரைப் பற்றிய இன்னொரு முக்கிய செய்தி.... மக்கள் திலகம், புரட்சி நடிகர்... பொன்மனச்செம்மல்..
என்றெல்லாம் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட "வாத்தியார்" என்னும் பட்டப் பெயர் வைத்தது இவர் தான்.. ஆனாலும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்.. இவரது சில நடிப்பு சிவாஜியை பிரதிபலிக்கும்.. அவரது நினைவு நாள் இன்று.. உடலால் மறைந்தாலும் நீங்கள் ரசிகர்கள் நினைவில் என்றும் வாழ்கிறீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக