எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஆரஞ்சு கலர் கேரட்டுக்கு பதிலா இனி கருப்பு கலர் கேரட் சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?... இதுதான் அந்த ரகசியம்...

கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நமக்குத் தெரியும். அதில் நாம் வழக்கமாகச் சாப்பிடும் ஆரஞ்சு நிற கேரட்டைத் தவிர வேறு என்ன கலரில் கிடைக்கும். குறிப்பாக கருப்பு நிற கேரட்டில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாக

வியாழன், 12 டிசம்பர், 2019

இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிங்க... ஏராள நன்மைகளை அள்ளித்தருமாம்!

சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி இரவில் வெல்லத்தை சுடுநீரில் கலந்து குடிப்பதனால் உடலில் பல நோய்களுக்கு தீர்வு தருகின்றது.

அந்தவகையில் தற்போது இரவில் வெல்லத்தை சுடுநீரில் கலந்து குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


வயிற்றுப் பிரச்னைகளான வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், 2 துண்டு வெல்லத்தை சாப்பிட்டு 1 டம்ளர் சுடுநீரை இரவு தூங்கும் முன் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், செரிமான நொதிகளின் அளவு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெறும். வெல்லம் மன இறுக்கத்தை எதிர்க்கும் பொருளாக செயல்படும்.

இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் சந்தோஷமான ஹார்மோன்கள் மேம்படுத்தப்படும்.
வெல்லத்தில் இனிப்பு குறைவு மற்றும் சர்க்கரை குறைவு என்பதால் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட்டால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தான், வாய் துர்நாற்றம் வீசும். இதற்கு வெல்லத்துடன் சிறிது ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கும்.
வெல்லம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால் சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். கற்கள் அளவில் மிகவும் சிறியதானால், எளிதில் சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.

காலையில் பேரிச்சை சாப்பிடுவதால் இந்த 4 நோய்களையும் வேரிலிருந்து அகற்ற முடியும்

வணக்கம் நண்பர்களே, திராட்சை உலர்த்திய பிறகு அதை கிஸ்ஸாமிஸ் என்று அழைக்கிறோம், பேரிச்சை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் பல மாற்றங்களை நீங்கள் காணலாம் மற்றும் பேரிச்சை இரண்டும் சூடாக இருந்தால், குளிர்காலத்தில் அவற்றை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். வெற்று வயிற்றில் பேரிச்சை சாப்பிடுவதன் நன்மைகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் -



1. குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் 3-4 பேரிச்சைவெதுவெதுப்பான நீரில் கழுவி கர்னல்களை அகற்றுவார்கள். பசுவின் சூடான பாலுடன் அவற்றை வேகவைக்கவும். காலை மற்றும் மாலை வேளைகளில் வேகவைத்த பால் குடிக்கவும். குறைந்த இரத்த அழுத்தம் சில நாட்களில் விடுபடும்.


2. மூன்று பேரிச்சை சாப்பிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும். பேரிச்சை பனை ஊறுகாயை உணவோடு சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படாது, வாயின் சுவையும் நன்றாக இருக்கும். தேதிகளில் ஊறுகாய் தயாரிக்கும் முறை சற்று கடினம்.

3. நெய்யில் வறுக்கப்பட்ட பேரிச்சை ஒரு நாளைக்கு 2-3 முறை எடுத்துக்கொள்வது இருமல், தும்மல், சளி மற்றும் சளிக்கு நிவாரணம் அளிக்கிறது.

4. பாலுடன் உட்கொள்ளும்போது, ​​அது உடலை வலிமையாக்குகிறது. உங்கள் உடல் பலவீனமாக இருந்தால், நீங்கள் பாலில் பேரிச்சை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்கும், மேலும் உங்கள் உடலும் வலிமையாகிவிடும்.உடல்நலம் தொடர்பான சமீபத்திய செய்திகளைப் பெற எங்களைப் பின்தொடரவும். இடுகையைப் போலவே, அதைப் பகிரவும், கருத்து தெரிவிப்பதன் மூலம் உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

டான்சிலுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?

சிறு குழந்தைகளுக்கு (Tonsils, Adenoids) எனத் தொண்டையில் இருக்கிற உறுப்புகள் பெரிதாக வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் தொற்றுக் கிருமிகள். பல நேரங்களில் இது அறிகுறிகளைக் காட்டுவது இல்லை. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமமும், ஒரு சிலருக்கு உணவை விழுங்குவதில் சிரமமும், தொண்டை வலியும், காது வலியும் வரும். குறட்டையும் ஏற்படலாம். டான்சில், அடினாய்டு என்பவை நிணநீர் தொகுப்பு. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் உருவாக்குகின்றன. பாக்டீரியாவோ, வைரஸோ தொண்டையின் வழியாக உடலுக்குள் செல்லாமல் துவாரபாலகர்களைப் போல இவை பாதுகாக்கின்றன. தொண்டையின் உள்ளே இரண்டு பகுதிகளில் டான்சில்ஸ் என்னும் உறுப்பு உள்ளது. அடினாய்டு என்ற உறுப்பு சற்று மேற்புறமாக, பின்னால்

நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்


சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு

திங்கள், 9 டிசம்பர், 2019

மூங்கில் அரிசி பயன்கள்மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!



மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும்.

தினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது.

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்:-
இந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இங்கு மூங்கில் அரிசி பயன்கள் (bamboo rice benefits in tamil) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

சனி, 19 மே, 2018

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 8 உணவுகள்!


கீரை: கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் மீண்டும் சூடுப்படுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது , புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

முட்டை: முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேக வைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக்

திங்கள், 26 மார்ச், 2018

உங்களுக்குத் தெரியுமா? வெந்தயம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்...

Did you know that eating Dill will reduce body weight ...

வெந்தயத்தில் கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை

வறுத்த இறைச்சி சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்




If you eat fried meat, high blood pressure will occur





If you eat fried meat, high blood pressure will occur

கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சியை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் வறுத்த இறைச்சியை சாப்பிடும் நபர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரத்துறை படிப்பு மேற்கொண்ட 17,104 ஆண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முதல்கட்டமாக அவர்களின் சாப்பாடு மற்றும் சமையல் முறைகள்

ஞாயிறு, 25 மார்ச், 2018

லேட் நைட் தூங்குறீங்களா? இத படிங்க முதல்ல..!

மாறி வரும் வாழ்க்கை முறையால் இந்திய மக்களுடைய உறங்கும் நேரம் குறைந்து வருவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறக்கத்தின் தேவை என்ன? உறக்கம் குறைவதால் என்னென்ன பாதிப்புகள் என்பதை உலக உறக்க தினமான இன்று விரிவாக பார்க்கலாம்.

மனித வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கம்தான். நாம் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க உதவுவது, இரவில் நாம் மேற்கொள்ளும் ஆழமான தூக்கம்தான். சரியான தூக்கம் இல்லாமல் யாரும் சிறப்பாக செயல்பட முடியாது. நமது வேலைப்பாடு, உடல்நிலை, சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து நமது தூக்கத்தின் தன்மை மாறுபடுகிறது. சிறந்த தூக்கத்துக்கு, தூக்கத்தின் நேரம் மிக முக்கியம். தூக்கம் தடைபட்டு பின்னர் அதிக நேரம் தூங்கினாலும், தடையில்லாமல் இருந்தாலும்

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக

 
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர்
குடித்தாலும் தாகம் அடங்காது.
அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால்
தாகம் அடங்கிவிடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல்
சுறுசுறுப்பாகும்.
கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இயற்கை மருந்து

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

பெண்களின் முன் அழகிற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்கு என்ற வித்தியாசமான பெயரைகொண்ட இந்த தாவரம், 6 அடி உயரம் வரை வளரக்கூடிய கொடி வகையை சேர்ந்தது. அடர்பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளை கொண்டிருக்கும். 




தண்டில் முட்கள் வளர்ந்திருக்கும். இதன் கிழங்கு கொத்தாக காணப்படும். அதிக தசை பகுதியை கொண்டது. நீர்த்தன்மையும் நிறைந்திருக்கும். இந்த கிழங்கில் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 

பெண்களுக்கு இந்த கிழங்கு

பொடுகு பிரச்சனையை விரைவில் விரட்ட ஆறு அற்புத டிப்ஸ்; பக்க விளைவு இல்லாத இயற்கை வழி...

பொடுகு

பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.
இதனைப் போக்க வெங்காயச் சாறு இப்படி உபயோகப்படுத்தினாலே போதும். பொடுகை போக்கலாம். இதோ டிப்ஸ் உபயோகித்து பயன் பெறுங்கள்.

1.. புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு:
புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை

யாரும் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீங்க...!

நாம் உண்ணும் போது ஒரு சில உணவுகளை,மற்றொரு உணவுடன் சேர்த்து சாப்பிட கூடாது.

அவ்வாறு எந்தெந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடகூடாது என தெரியுமா...?

திங்கள், 14 நவம்பர், 2016

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் இதனை செய்து பயன்பெறலாம்.

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

* ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதை மிதமாக சூடுபடுத்தவும்.

* மிதமாக சூடேறிய எண்ணெயில் தேவையான அளவு மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடங்கள் சூடாக்கி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

* சூடு ஆறிய எண்ணையை இரு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூச வேண்டும்.

* இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.

* இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

குறிப்பு : இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது. சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது



என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.

அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.

மிளகு தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

எலுமிச்சை தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா தண்ணீர்

இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.


உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. 

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். 

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. 

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். 

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். 

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும். 

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். 

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். 

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். 

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.



.1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.


உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.


தமது எடையை அடிக்கடி பார்த்து அதற்குத் தகுந்தவாரி உணவுப் பழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி எடை விபரம் கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உயரம்
(செ.மீ)
ஆண்
(கிலோ)
பெண்
(கிலோ)
உயரம்
(இன்ச்)
ஆண்
(எல்.பி)
பெண்
(எல்.பி.)
147-45-5958-100-131
150-45-6059-101-134
152-46-6260-103-137
15555-6647-6361123-145105-140
15756-6749-6562125-148108-144
16057-6850-6763127-151111-148
16258-7051-6964129-155114-152
16559-7253-7065131-159117-156
16760-7454-7266133-163120-160
17061-7555-7467135-167123-164
17262-7757-7568137-171126-167
17563-7958-7769139-175129-170
17764-8160-7870141-179132-173
18065-8361-8071144-183135-176
18266-85-72147-187-
18267-87-73150-192-
18768-89-74153-197-
19069-91-75157-202-

உணவுப் பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும்.



நான் சொல்வதை கேளுங்கள். லாஜிக் பேசாதீர்கள்.
வெறுமனே நான் சொல்வதை ஒரு அடிமைப் போல் கேளுங்கள்.

இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள். 
ஒன்று உணவு, மற்றொன்று உடல்பயிற்சி.

உணவு

காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.
அதன்பின் மதியம்வரை வாயில் எதுவும் வைக்காதீர்கள்.

மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள்.
அதன்பின் இரவு வரை வாயில் எதுவும் வைக்காதிர்கள்.

இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சிம்பெலாக சாப்பிடுங்கள்.
அதன் பிறகு எதுவும் வேண்டாம்.

இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கணும். 

அடுத்து, குடிக்கும் பானம்.
வெறும் ஆறிய தண்ணீர்தான்.
ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்கணும்.

தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை நோ....நோ...நோ...

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்று  தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிட்டால் பரவாயில்லை.

அன்றாடம் நடைப் பயிற்சி செய்யுங்கள். 
வேண்டுமென்றே, அன்றாடம் நடந்து போங்கள்.
விருப்பப்பட்டு அன்றாடம் நடந்து போங்கள்.

மார்க்கெட் போகனுமா?
காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் பார்க் பண்ணி நடந்து போங்கள்.

வேறு எங்காவது போகனுமா?
கடையின் வாசலில் கார் பார்க் பண்ண இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள்.
தூரமாக பார்க் பண்ணி நடந்து செல்லுங்கள்.

படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், சும்மா ஏறி போங்கள்.
படி ஏற விரும்புங்கள்.

குப்பை போடணுமா?
வயிறு  அழுந்த குனிந்து குப்பை போடுங்கள்.

வீடு கூட்டணுமா?
வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.

மெனக்கெட்டு,
அக்கறை எடுத்து,
மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு,
வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள்.
எந்த செலவும் இல்லை. 

ஒரு மாதம் செய்து பாருங்கள்.
உடல் எடை வித்தியாசம் தெரியும்.

ஆனால், யாரும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்.
காரணம், அவை சவால் இல்லை.
பெருமைப் பட எதுவும் இல்லை.
காசு செலவு இல்லை.

மாறாக,
சுய கட்டுப்பாடு அவசியம்.
வாயை கட்டணும்.
மெனெக்கெட்டு நடக்கணும்.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

உடல் எடை குறைக்க மருந்து விற்பவர்கள் எதையும் விற்பார்கள். அவர்கள், பழைய கால மருத்துவம், நவீன மருத்துவம் என்ற பெயரில் எதையாவது நம் தலையில்  கட்டுவார்கள். முடிந்தால், மலத்தை  பாடம் பண்ணி, இது இயற்கை வைத்தியம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள். எல்லாம்  ஒரே பிசினஸ் மயம்தான்.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள்,  பாடம் செய்யப்பட்ட மலத்தையும் கூட மருந்தாக எடுக்க தயார் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு எப்படியாவது எடை குறைந்தால் சரி. எதை சாப்பிடுகிறோம் என்று கவலையில்லை.

மருந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்றால், உலகில் ஒரு பணக்கார குண்டு நபர்களை கூட நாம் பார்க்க இயலாது. எல்லாரும் அதிக பணம் கொடுத்து, விலையுயர்ந்த மருந்து சாப்பிட்டு, சிலிம்மாகத்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை

சனி, 12 நவம்பர், 2016

கர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை.
.
மார்பகங்களில் தினவு ஏற்படுதல், முதுகு வலி, உச்சபட்சமான வாச னை உணர்வு மற்றும் கர்பத்திற்கு இன்னும் பல ஆரம்ப அறிகுறிகள் உள்ளன. இதோடு வேறு வித்தியாசமான கர்ப அறிகுறிகள்கூட கண்டறியலாம். அதிலு ம் உறவுகொண்டு ஒரு ஜோடி வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் மாதவிடாய் சுழற்சி நடைபெற வில்லை. ஆகவே இப்போது கர்பமாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள அவலாக இரு ப்போம். ஆனால் மாத விடாய் சுழற்சி தள் ளிப் போனால் மட்டும் கர்பமாக இருக்கிறோம் என்று முடிவு செய்து விட முடியாது.இருப்பினும், மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போவதுட ன், ஒருசில அறிகுறிகளும் தென்பட்டா ல், கர்பமாக இருப்பதை உறுதிசெய்து கொள் ளலாம். அதிலும் கீழே குறிப்பிட் டுள்ள 17 அறிகுறிகள் தென்பட்டால், கர் பம் அடைந்திருப்பதை சுலபமாக அறிந் து கொள்ள முடியும். அந்த அறிகுறிக ளைப் பார்ப்போமா!!!
.
1. மூச்சு திணறல்
.
மாடிப்படி ஏறும்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்படுகிறதா? அப்படியானால் அது கர்பமாக இரு ப்பதால் இருக்கலாம். வளரும் கரு விற்கு ஆக்சிஜன் தேவை என்ப தால், சுவாசத்திற்கு ஒரு சிறிய குறுகிய இடைவெளி ஏற்படலாம். ஏன் இந்த நிலைமையானது கர்ப காலம் வரையிலும் தொடரலாம். ஏனெனில் வளர்ந்து வரும் குழந் தை, தாயின் நுரையீரல் மற்றும் உதரவிதானம்மீது அழுத்தம் கொடு க்க ஆரம்பிப்பதன் விளைவாக ஏற்படுகிறது.
.
2. மார்பகங்களில் ஏற்படும் தளர்வு
.
உள்ளாடையை அணியும் போது லேசான சித்திரவதை ஏற்படுவதை போல் உணர்வது அல்லது மார்பகங்கள் கொஞ்சம் பெரியதாக உள்ளது போன்ற உண ர்வு அல்லது மென்மையான மற்றும் கனத்த மார் பகங்களின் உணர்வு, மார்பக காம்பு கரு மையடைதல் மற்றும் மார்பு நரம்புகள் விறை ப்படைதல் முதலியன கர்பமாக இருப்பதற்கு ஒரு முதல் அறிகுறியாக இருக்க முடியும். எனவே இந்த அசௌகரியத் தை தவிர்ப்பதற்கு, படுக்கைக்கு செல்லும் முன் மிகவும் எளிதான உள்ளாடையை அணியலாம்.
.
3. சோர்வு
.
புத்தகத்தில் ஒரு பக்கத்தை படித்து முடிப்பத ற்கு முன்னதாகவே, தூக்கம் வந்து விட்டது என்றால் அல்லது திடீரென்று சோர்வடைந் தாலோ, அது உடலில் அதிகரிக்கும் ஹார்மோ ன்கள் காரணமாக இருக்கலாம். பல பெண்க ளுக்கு சோர்வு முதல் மூன்று மாதங்கள் தொ டர்ந்து இருக்கும். ஆனால் பின்னர் இது விட்டு விட்டு வரும்.
.
4. குமட்டல்
.
அநேக கர்பிணி பெண்களுக்கு கருவானது 6 வாரங்கள் சேர்ந்து இருக்கும் போது குமட்டல் ஏற்படு கிறது. ஆனால் சிலருக்கு காலை சுகவீனம் (துரதிர்ஷ்டவசமாக காலை, மதியம் மற்றும் இரவு ஏற்படலாம்) ஏற்படுவதை உணர முடியும். இது இரண்டாவது மூன்று மாத கால கட்டத்தில் நுழையும்போது பெரும்பாலும் குறைய வேண்டும். இடை யிடையே வயிறு நிரம்பக் கூடிய நொறு க்கு தீனி மற்றும் இஞ்சி மிட்டாய் போன் றவற்றை சாப்பிட வேண்டும்.
.
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
.
திடீரென்று சிறுநீர் கழிக்காமல் இரவு முழுவதும் தூங்க முடியவில் லை என்றால், கர்பம் ஏற்பட்டிருப்ப தற்கு ஒரு அடை யாளமாக இரு க்கலாம். கர்ப காலத்தில் உடலான து கூடுதல் திரவங்களை உற்பத்தி செய்வதன் மூலமாக, சிறுநீர்ப்பைக்கு அதிக வேலை இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
.
6. தலைவலி
.
கர்பமாக இருப்பதன் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று, ஹார்மோன் மாற்றங்கள் விளைவாக ஏற்படும் தலைவலியாகும்.
.
7. பின் முதுகு வலி
.
முதுகு வலி இல்லாத போது, பின் முதுகு லேசாக தளர்வாக காணப் பட்டால், அது தசைநார்கள் தளர்ந்து வருவதன் காரணமாக ஏற்படு கிறது. சொல்லப்போனால் இந்த வலியானது கர்ப காலம் முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏனென் றால், கர்பத்தின் போது எடை அதிகரிப்பதால், ஈர்ப்பு மையம் விலகுவதன் காரணமாக இது ஏற் படுகிறது.
.
8. தசைப்பிடிப்பு
.
இது மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறி யா? அல்லது கர்ப்பமா? என்பதைச் சொல்ல கடினமாக இருக்கிறது. ஆனால் சுரண்டுவதை உணர்கிறீர்கள் என்றால், அது குழந்தை வளர்வ தற்கு தயாராக கருப்பை நீட்சி அடைகிறது என்று அர்த்தம்.
.
9. பசி அல்லது உணவு தாகம்
.
திடீரென்று, வயிறு போதுமான சிட்ரஸ் பெறமுடியாத நிலை அடையும்போது அல் லது வயிற்றில் அஜீரண கோளாறு முதலி யவை புதியதாக தோன்றும் பட்சத்தில் கர்பமாக இருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.
.
10. மலச்சிக்கல் மற்றும் வீக்கம்
.
கடந்த வாரம் தான் ஜீன்ஸ் பொருத்த மாக இருந்தது. ஆனால் இப்போது சற்று இறுக்கமாக மற்றும் உடல் பெரியதாக காணப்பட்டால் அது செரி மான அமைப்பு குறைவடைவதன் காரணமாக ஏற் படுகிறது. இது கர்ப்பத்தின் காரணமாக, கூடுதல் புரோஜெஸ்டி ரோன் உருவா வதன் மூலமாக ஏற்படு கிறது.
.
11. ஊசலாடும் மனம்
.
அடிக்கடி மனதில் சந்தோஷம், கஷ்டம் போன்ற மாற்றங்களை உணர்கிறீர்கள் என்றால், உடல் நலம், புதிய ஹார்மோன் களை அனுசரிக்க ஆரம்பித்து விட்டது என்று பொருள்.
.
12. அதிகரிக்கும் உடலின் அடிப்பகுதி
.
வெப்பநிலை தீவிரமாக கர்ப்பிணியாக முயற்சி செய்கிறீர்கள் என் றால், உடலின் அடிப்பகுதியின் வெப்ப நிலையை கருத்தரிப்புக்கு சாத்தியமாக உயர்த்தி கொண்டிருக்கிறீர்கள். இரண்டு வாரங் கள் வரை பொதுவாக இந்த வெப்பநிலை யானது கருத்தரிப்பதற்கு சாத்தியமாக உயர்ந்து கொண்டு இருக்கும். அதன் பிறகும் இந்த உயர்ந்த வெப்ப நிலையானது காணப்பட்டால், கருவுற்றிருப்பது உறுதி செய் யப்படுகிறது.
.
13. சூப்பர் வாசனை
.
குப்பையை அன்றாடம் வெளியேற்றும் கடமையில் இருந்து தவறி விட்டீர்கள் என்றால், குப்பையும் வாந்தியெடுக்க தூண் டிவிடும். ஒரு சில வாசனைகள் தூண்டு தலாக இருந்தால் அல்லது வாசனைகளுக் கு உணர்வுகள் தூண்டப்படுவது அதிகமா னால், அதற்கு தங்க ளின் ஒவனில் ரொட்டி ஒன்று கிடைத்துவிட்டது என்று பொருள். அதாவது கர்பமாக இருப்பது உறுதியாகி விட்டது.
.
14. தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்
.
இது திரைப்படங்களில் பெரும்பாலா க காட்டப்படும் ஆரம்ப அறிகுறியா கும். ஆனால் உண்மையின் அடிப்ப டை என்னவென்றால், குறைந்த சர்க் கரை அளவு அல்லது இரத்த அழுத்தம் கூட ஒரு குழப்பமான அத்தியாயத் தை ஏற்படுத்தும். எனவே நன்கு சாப் பிட்டு, போதுமான நீரை எடுத்து கொ ள்ள வேண்டும். இதன் பின்னரும் தொ டர்ந்தால், கர்பம் தான்.
.
15. ஸ்பாட்டிங்
.
மாதவிடாய் வரவில்லையா? அல்லது அது சாதாரணமாக வருவதை விட லேசாக இரு ந்தது என்றால் மற்றும் எதிர்பார்க்கும் நாட்க ளை விட சற்று முன்பாகவே வந்துவிட்டது என்றால், இப்போது இருப்பது முட்டை கருவு றுதலின் போது ஏற்படக்கூடிய இரத்தபோ க்கு ஆகும். ஏனென்றால் கருவுற்ற முட்டை கருப்பையின் சுவர்களில் பொருந்தும் போ து, சற்று இரத்தப்போக்கு ஏற்படும்.
.
16 மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது
.
கர்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும் பாலும் மாத விலக்கின் (PMS) ஆரம்ப அறிகுறிக ளாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் இடை யே உள்ள வித்தியாசத்தை எப்படி சொல்வது? அதிகமாக சொல்லப்படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது.
.
17. நேர்மறையான கர்ப்ப சோதனை
.
அம்மா ஆகிவிட்டீர்களா இல்லையா என்று உறுதியாக அறிந்துகொ ள்ள முடியவில்லை என்றால், ப்பீ- ஸ்டிக் சோதனை (pee-stick test) செய் து கொள்ளும்வரை, அதை உறுதிசெ ய்து கொள்ள முடியாது. அந்த சோத னை முடிவு எதிர்மறையாக தங்களு க்கு கர்பம் இல்லை என்று தெரிய வந்தும் மாதவிடாய் தாமதமானால், ஒரு வேளை சற்று முன்னரே இந்த சோதனையை செய்துள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே சில நாட் கள் காத்திருந்து மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி!



கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..!

எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை! தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே! ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள்.

தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான். கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான். சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்!

பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே! கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம். உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள் மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர். வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்! கருத்தரித்திருப்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?

மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி. பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். முன்புபோல 40, 45 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறியுள்ளது. எந்த வயதில் கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்? இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம். அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும். கருவுறுதலுக்குக் கைகொடுக் கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த வயதில்தான். முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கரு தங்கும்?

மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள். அப்பொழுதுதான் சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும். மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து கருவாகும். இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் ‘அந்த’ நாள் என்பதை கண்டுபிடிக்கலாம். ஆணும் பெண்ணும் உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை.. ஓ.கே. அதன்பிறகு என்ன நடக்கிறது?
உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும். அவை அனைத்தும் பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில் வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான். உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும். இப்போது வெற்றி பெற்ற உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி ஆகிறாள். பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும். ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான். சினைமுட்டை யின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக் கிறது.. அதுவும்கூட உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே! கர்ப்பம் என்றதும் உடனே தலை காட்டும் மசக்கை எதனால் ஏற்படு கிறது? புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே.இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே!

இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை என்கிறோம். கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும்.

தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும். அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும். இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை.

புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.

இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும். இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது.

 கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு. அதிகமாக வாந்தி எடுத்தால், குழந்தை தலை நிறைய முடியோடு பிறக்கும் என்கிறார்களே.. உண்மையா? கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ.. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை.

வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல். துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தை களாகவும் இருக்கலாம்!

‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்! முத்துப்பிள்ளை கர்ப்பமா? அப்படியென்றால்? கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக் காமல் குட்டிக் குட்டி உருண்டை களாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம். ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்களே.. அது என்ன? எதனால் ஏற்படுகிறது?

 முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும் கரு, நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் இப்படியிருக்கும். ஆனால் சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள். ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது. நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும். அதுமட்டுமல்ல, இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் என்னாகும்?

முடிந்த வரை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டிய விஷயமிது. கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.

மசக்கைக்கு பின் வேறு ஏதாவது உடல்ரீதியாக பிரச்னை வருமா?

கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது.

 நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது. அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும். பழங்களில், பப்பாளியையும் அன்னாசியையும் தவிர்ப்பது நல்லது. இந்தப் பழங்களால் கரு கலைந்துவிடும் என்ற கருத்து விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், மருத்துவர்கள் இவற்றை பரிந்துரைப்பது இல்லை.

15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. அதில் பால்புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன. தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். பொதுவாக, எண்ணெய், அதிக மசாலா, காரம் இல்லாமல் உணவு இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது. சிலருக்கு இந்த சமயத்தில் கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ஆண் குழந்தை என்றால் சீக்கிரமே பிறந்துவிடும் என்கிறார்களே, உண்மையா?

‘பத்து மாத பந்தம்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் கருப்பை ஒரு கருவைச் சுமப்பது, மொத்தம் ஒன்பது மாதம் ஒரு வாரம்தான் (இதுகூட கரு உருவாவதற்கு முன்பு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கணக்குதான்). இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று எந்த வித்தியாசமும் கிடையாது. எந்தப் பாகுபாடும் இல்லாமல் இயற்கை இரு வகையான குழந்தைகளையும் சமமான நாட்கள்தான் தாயின் வயிற்றில் இருக்கச் செய்கிறது.

 ‘ட்ரைமெஸ்டர்’ என்கிறார்களே.. அதைப்பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.. பத்து மாதம் என்று பொதுவாக சொன்னாலும் கர்ப்ப காலம் மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் ட்ரைமெஸ்டர் (Trimester) என்கிறோம்.

முதல் மூன்று மாதங்கள் வரை 'முதல் ட்ரைமெஸ்டர்'. நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை 'இரண்டாவது ட்ரைமெஸ்டர்'.. ஏழாவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை ‘மூன்றாவது ட்ரைமெஸ்டர்!’

முதல் ட்ரைமெஸ்டரில் மசக்கையும், அதனால் உண்டாகும் சோர்வும்தான் முக்கியமான விஷயம். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் மசக்கை நின்றுவிடும். வெகு சிலருக்குத்தான் அது மேலும் தொடரும். முதல் ட்ரைமெஸ்டரில் டாக்டரிடம் செக்கப் செய்துகொண்டால், பொய் கர்ப்பம், முத்துப்பிள்ளை கர்ப்பம் போன்றவற்றை தடுத்துவிடலாம்.

முதல் ட்ரைமெஸ்டரில் கரு, கருப்பையில் அழுத்தமாக தங்கியிருக்காது என்பதால் அதிர்வுகள் கொஞ்சம் அதிகரித்தாலும் கரு கலைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த காலகட்டத்தில் வெகுதூரம் பயணம் செய்வது என்பது கூடவே கூடாது. சரி- இந்த ட்ரைமெஸ்டர் காலங்களில் கருவின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

முதல் மாதத்திலேயே கருவுக்கு நரம்பு மண்டலம் உருவாகத் தொடங்கி விடும். நாற்பது நாட்களுக்குள் முதுகுத் தண்டு, இதயம் ஆகியவை ஓரளவு உருவாகி, கருவுக்கான ரத்த ஓட்டமும் ஆரம்பித்துவிடுகிறது. கருவின் ரத்த ஓட்டத்தை தாயோடு இணைக்கும் ரத்தக் குழாயின் மற்றொரு பெயர்தான் தொப்புள்கொடி. இரண்டாவது மாதத்தில் கருவின் இதயம் மெதுவாகத் துடிக்கவே துவங்கிவிடும். கை, கால்களும் காதுகளும் வடிவம் பெறுவது இப்போதுதான். மூன்றாவது மாதம், முகத்தின் அங்கங்கள் முறையாக வளர ஆரம்பிக்கும்.

இரண்டாவது ட்ரைமெஸ்டர் தொடக்கத்தில் அதாவது, நான்காவது மாதத்தில் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும். வயிற்றின் தசைகளும் தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி விரிவடையும். (பிரசவத்துக்கு பிறகு, விரிவடைந்த தோல் மறுபடியும் சுருங்கிவிடும். இப்படி எலாஸ்டிக் போல சுருங்கி விரிவதால்தான் குழந்தை பெற்றுக் கொண்ட பெண் களுக்கு அடிவயிற்றில் வரிவரியாக கோடுகள் விழுகின்றன. கருவுற்ற நான்காம் மாதத்திலிருந்து விட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒன்றை அடிவயிறு முழுக்கத் தடவி, அரைமணி நேரம் ஊற விட்டு, பிறகு குளித்தால், வயிற்றில் வரிகள் விழாது. சமையலுக்கு உபயோகிக்கும் மஞ்சள்தூளை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து தடவினாலும் நல்ல பலன் இருக்கும்.

சில பெண்களுக்கு மார்பகம்கூட பெரிதாகி பிறகு சிறிதாகும். அதனால் மார்பகங்களிலும் இதேபோன்று வரிகள் விழலாம். அதற்கும் மேற்கூறிய ஆயில் மஸாஜ் பலனளிக்கும்) தொல்லைகள் அற்ற கர்ப்ப காலம் என்றால் அது இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான். மசக்கை நீங்கி, நன்றாக சாப்பிட முடியும்.

உற்சாகமாக சுழல வைக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாக சுரப்பதால் இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின் முகம் பளீரென்று புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்! குழந்தை ஆண், பெண் என்பதை தீர்மானிக்கும் பிரத்யேக உறுப்புகள் வளர ஆரம்பிப்பது இந்த நான்காம் மாதத்தில்தான்!

ஐந்தாவது மாதத்தில், கிட்டத்தட்ட அரை குழந்தையாகிவிட்ட கரு, அசைந்து தன்னைச் சுற்றியுள்ள பனிக்குட நீரில் சுகமாக நீச்சலடிக்க ஆரம்பிக்கும். ஐந்தாவது மாதத்திற்கு மேல் கருவின் அதாவது குழந்தையின் உருவ, உள் உறுப்புகள் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். புருவமுடி வளர்ச்சி முதற்கொண்டு முகம் முழுமையாக உருப்பெறும்.

ஆறாவது மாதத்தில் அந்த குழந்தைக்கு மட்டுமேயான தனித்தன்மையாக கை விரல்களில் ரேகைகள் அமையும். மூன்றாவது ட்ரைமெஸ்டரின் தொடக்கத்தில் அதாவது,

ஏழாம் மாதத்தில் வயிறு பெருத்து விடுவதால் சுலபமாக உட்கார்ந்து எழுந்துகொள்ள முடியாது. மூச்சு வாங்கும். படுத்து எழுவது சிரமமாகத் தோன்றும். இடுப்பு, முதுகில் அவ்வப்போது வலிப்பது போல் இருக்கும். நேரத்துக்கு சாப்பிட்டு, வாக்கிங் போய்வருவது நல்லது.

எட்டாவது மாதத்தில் லேசான அசதி இருக்கும்தான். ஆனால், கை கால் வலி, தலை சுற்றல், கண் இருட்டிக்கொண்டு வருவது மாதிரி பிரச்னைகள் இருந்தால், டாக்டரிடம் போகவேண்டும். ரத்தப்போக்கு இருந்தாலோ, நீர் இறங்கிக்கொண்டே இருப்பது போலிருந்தாலோ, வலி அதிகம் இருந்தாலோ உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது. மூன்றாவது ட்ரைமெஸ்டருக்கு முன்பே, அதாவது ஏழாவது மாதத்துக்கு முன்பே கருவிலிருக்கும் குழந்தை வெளியேறினால் அது ‘அபார்ஷன்’. ஏழு மாதத்துக்குப் பிறகு, தவிர்க்க முடியாத நிலையில் வெளியேறினால் அந்தக் குழந்தையை இன்குபேட்டர் மாதிரி இயந்திரங்களில் வைத்து காப்பாற்றலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் போன்ற நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் வர வாய்ப்பு அதிகம். குழந்தை வெளியே வர ஏதுவாக ஒன்பதாவது மாதத்தில், தலைப் பாகம் கீழே இருக்கும்படி பொசிஷன் மாறுகிறது!

 குழந்தையின் அசைவுகள் பற்றி..? ஐந்தாவது மாதத்திலேயே குழந்தையின் அசைவை நன்றாக உணரமுடியும். அப்போதிருந்து ஏழாவது மாதம் வரை பனிக்குட நீரில் விஸ்தாரமாக நீச்சலடிக்கும் குழந்தை, கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதால் பின்னாளில் இடநெருக்கடி ரணமாக சும்மா கை, கால்களை மட்டும் அசைக்கும். இதனால், ஐந்தாவது மாதத்தில் குழந்தை உதைத்ததற்கும் இப்போது உதைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சிலர் இதனை புரிந்து கொள்ளாமல், ‘குழந்தை அசைவு அவ்வளவாக இல்லை’ என்று கவலையோடு வருவார்கள். அதிலும் பிரசவ காலம் நெருங்க நெருங்க இந்தப் புகார்கள் அதிகரிக்கும்!

ஒன்பதாம் மாதத்தில் குழந்தையின் துடிப்பு குறைவாக இருக்கும். கடைசி மாதத்தில் ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தபட்சம் ஐந்து முறை துடித்தாலே போதும். அதுவும் இல்லை என்று தோன்றினால், சிறிதுநேரம் இடது புறமாக ஒருக்களித்துப் படுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.. அப்போதும் குறைவாக இருந்தால் டாக்டரிடம் செல்வது நல்லது. ஒருவேளை குழந்தையை தொப்புள் கொடி சுத்தியிருக்கலாம். கர்ப்ப காலத்தில் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளலாமா?

கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும். கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய. செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே. அதேபோல்,

ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள். இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காகத்தான் இந்த அட்வைஸ்! அப்படியானால் மற்ற ஐந்து மாதங்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா? எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம். கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது. அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.

கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்கப் படுத்தால் கருவை நஞ்சுக்கொடி சுற்றிக்கொள்ளும் என்கிறார்களே.. உண்மையா? எப்படி படுக்க வேண்டும்? மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல. மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும். இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ‘பி.பி’ இறங்கும். அதனால் தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? குழந்தைக்கு நிறம் தரும் சக்தியெல்லாம் குங்குமப் பூவிடம் இல்லை. இதுதான் உண்மை. சிலருக்கு பாலின் வாடை பிடிக்காது. மசக்கை சமயத்தில் அது இன்னும் அதிகமாக வயிற்றைப் புரட்டும். அதனால்தான் மாறுதலான மணம் மற்றும் சுவைக்காக குங்குமப்பூவை பாலில் கரைத்துக் குடிக்கும் பழக்கம் வந்தது. அதையும் குடிக்கமறுக்கும் பெண்களுக்கு என்ன செய்வது?

அதனால்தான் குழந்தையின் கலர் என்ற சொக்கவைக்கும் வார்த்தையைச் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் பரம்பரையாக வரும் மரபணுக்கள்தான்! சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான். சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே.. கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம்.

தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும். தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும்.

அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.

சாப்பாட்டில் மட்டுமல்ல குடிநீர் விஷயத் திலும் கவனம் தேவை. சுத்த மான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம்.

சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப் படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும். இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடைஅதிகரித்தால்..? அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

 மற்ற நாட்களை விட கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி பல்வேறு பிரச்னைகளைத் தரும். பிரசவத்திலும் சிக்கல் வரும். சில பெண்களுக்கு, எட்டாம், ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை கால்கள் வீங்கிவிடும். இவர்கள் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தாலும் உடல் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.

கர்ப்பம் உறுதியானதுமே டாக்டர்கள் பட்டை பட்டையாக இரும்புச் சத்து மாத்திரைகளை அள்ளிக் கொடுத்து தொடர்ந்து சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்கும் என்ற ஒரு பேச்சு பரவலாக இருக்கிறதே? கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று. அதை நம்பாதீர்கள்.

ரத்த விருத்திக்காகக் கொடுக் கப்படுவதுதான் இரும்புச் சத்து மாத்திரைகள். கர்ப்பிணிகள் அதிலும் குறிப்பாக இந்திய கர்ப்பிணிகள் ரத்தசோகை நோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஃபோலிக் (folic) ஆசிட் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் ரத்தசோகை நோயை இரும்புச் சத்து மாத்திரைகளை ஒழுங்காக சாப்பிடுவதன் மூலமே சரிப்படுத்தி விட முடியும். சரிவிகித உணவுகளைத் தவறாமல் சாப்பிடுபவர்களாக இருந்தாலும், மேற்கொண்டு டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

சிலருக்கு கருப்பையில் புண் வருகிறதே.. ஏன்? அதற்காகத்தான் கர்ப்பமான ஆறு முதல் எட்டாம் மாதத்திற்குள் டி.டி எனப்படும் ‘டெட்டனஸ் டாக்ஸாய்டு’ தடுப்பூசியை இரண்டு முறை கட்டாயம் போடச் சொல் கிறோம். பிரசவ சமயத்தில் தாய்க்கும், சேய்க்கும் கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க வும் இந்தத் தடுப்பூசி உதவும். இரண்டு தடுப்பூசியும் முடிந்தபின் அல்ட்ரா ஸ்கேனிங் செய்வது நல்லது.

பிரசவ நேரத்தில் வரும் எத்தனையோ பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு ஸ்கேனிங் மிக அவசியம். வயிற்றில் குழந்தை சரியான நிலையில் தான் இருக்கிறதா என்று சந்தேகமின்றித் தெரிந்துகொள்ளவும் இது பயன்படும். கருவுறுதலுக்கு முன் விசேஷ பராமரிப்பு எதுவும் தேவையா? கருத்தரிக்கும் பெண்ணின் உடல் நிலை சாதாரணமாக இருக்கும்பட்சத்தில், கருவுறுதலுக்கு முன் பிரத்யேகப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை. ஆனால், சர்க்கரை நோய், வலிப்பு, இதயநோய்,

ஆஸ்துமா போன்ற பிரச்னைகள். உள்ளவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடும் முன்பே, முழு உடல் பரிசோதனை செய்து, மருந்துகள் எடுத்துக் கொண்டு, உடலை கருத்தரிக்க ஏற்ற நிலையில் வைத்துக்கொண்ட பிறகே கருவுறுதல் நல்லது. இதனால் கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். அவற்றைப் பற்றிகொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போம். சர்க்கரை நோய்: சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை மகப்பேறு மருத்துவர் மட்டுமின்றி சர்க்கரை நோய் நிபுணரும் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்திலும் இன்சுலின் கண்டிப்பாக தேவைதான். மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் களும்கூட இன்சுலின் பயன்படுத்தினால் நல்லது. ஏன் மாத்திரை வேண்டாம் என்றால்.. அதனால் குழந்தைக்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மாத்திரையில் இருக்கும் வீரியம் தாயிடமிருந்து குழந்தைக்கும் போகும்.ஆனால், இன்சுலின் அப்படி குழந்தைக்குப் போகாது. வளர்ந்த பிறகு அதாவது டீன் ஏஜ் கால கட்டத்தில் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்களாக இருந்தால் ஊசி, மாத்திரை இரண்டையும் தவிர்த்துவிட்டு உணவு, உடற்பயிற்சி மூலமே சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். ஏற்கெனவே குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ள கர்ப்பிணிகள் ஐந்தாம் மாதத்தில் ‘குளுகோஸ் டாலரன்ஸ் பரிசோதனை’ செய்து சர்க்கரையின் அளவைத் தெரிந்து அதற்கேற்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்ததாக உயர் ரத்த அழுத்தம். ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம் (பி.பி) இருப்பவர் களுக்கு அதன் பாதிப்பு ஏழாவது மாதத்திலிருந்துதான் தெரியத் தொடங்கும்.

கால் வீக்கம் முக்கியமான அறிகுறி. அடிக்கடி தலைசுற்றி படபடப்பு வரும். சாதாரணகர்ப்பிணிகளைவிட இவர்களுக்கு அடிக்கடி ரத்த இதய நோய் சிறுவயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் கருத்தரிப்பதற்கு முன்போ அல்லது கர்ப்பம் உறுதியான உடனேயோ டாக்டரிடம் தனக்கு இதய நோய் இருப்பதையும், அதற்காக சாப்பிடும் மருந்துகளையும் பற்றி தெளிவாக சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் கூடுதல் கவனத்தோடு அந்தத் தாயையும், அவள் வயிற்றில் வளரும் சிசுவையும் எந்த ஆபத்தும் இன்றி காப்பாற்ற முடியும்.

இப்போதெல்லாம் இதய நோய் உள்ளவர்கள்தான் என்றில்லை.. பொதுவாக கர்ப்பிணிகள் அனைவரையுமே ஈ.ஸி.ஜி, கார்டியாக் எக்கோ போன்ற இதயம் தொடர்பான பிரச்னை களைத் துல்லியமாக அறிவிக்கும் சோதனை களைச் செய்யச் சொல்கிறோம். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, வருமுன் காக்கும் நல்ல விஷயமாகத்தான் இது இருக்கிறது. வலிப்பு வலிப்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால். சிறுவயதிலிருந்தோ அல்லது மணமான பிறகோ வலிப்பு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை எடுத்து முதலில் வலிப்பை குணப்படுத்திவிட்டு, பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்றுதான் பெரும்பாலும் நினைக் கின்றனர். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?

ஒரு முறை வலிப்பு வந்துவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் அது திரும்ப வரலாம். முழுக்க அதனை குணப்படுத்தி விட்டோம் என்று சொல்ல முடியாது. அதனால் வலிப்புக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டேதான் கர்ப்பம் ஆக வேண்டி இருக்கும்! குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வருமோ என்று வலிப்புக்கான மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தக்கூடாது. அது தாயின்உயிருக்கே உலை வைத்துவிடலாம். இவர்களுக்குப் பிரசவ சமயத்தில் டாக்டரின் அதீத கவனிப்பு தேவை. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் ‘பிரசவ வலி வரட்டும்.. பிறகு, மருத்துவ மனைக்கு போகலாம்’ என்று காத்திருக்காமல் பிரசவ தேதி இதுவாகத்தான் இருக்கும் என்று டாக்டர் குறிப்பிடும் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னமே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது. வலிப்பு நோய் உள்ளவர் கள் கருவுற்றதும் மருத்துவரிடம் வரும்போதே, தனக்கு அந்நோய் உள்ளது என்று கூறிவிடுவது நலம். அப்படி சொல்லாமல் விடும் பட்சத்தில், பிரசவ சமயத்தில் வலிப்பு வந்தால் அது பிரசவகால வலிப்பா, இல்லை எப்போதும் வரும் வலிப்பா எனத் தெரியாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் குழப்பம் ஏற்படும்.

 ஆஸ்துமா: இந்த பாதிப்பு உள்ளவர் களும் கர்ப்பகாலத்தில் சிறப்பு கவனத்தோடு கவனிக்கப்பட வேண்டியவர்கள். ஆஸ்துமா உள்ளவர்கள் பொதுவாக தங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானது என்று எதிலெல்லாம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்களோ அதிலெல்லாம் கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். திருவிழா போன்ற நெரிசல் மிகுந்த இடங்களிலும், தூசி நிறைந்த இடங்களிலும் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதையும்மீறி ஏதேனும் பாதித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனை யுடன் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக டி.பி. எனப்படும் காசநோய். இந்த நோயை வந்த வேகத்திலேயே விரட்டும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறிவிட்டது. ஆனாலும் டி.பி-யால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதற்கான மருந்து சாப்பிடும் சமயத்தில் கருத்தரிக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் டி.பிக்கான மருந்துகளின் வீரியம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையையும் பாதிக்கும்!

கர்ப்பகாலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற தொல்லைகளுக்கு வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? இதுபற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகிறதே.. பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் காய்ச்சல், தலைவலி என்று எந்த தொல்லை வந்தாலும் அதற்கான மருந்துகளை சாப்பிட மறுக்கிறார்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தில்! தானாக மருந்துக் கடைகளில் கேட்டு எதையாவது வாங்கி விழுங்குவதுதான் தவறே தவிர, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இல்லை. சொல்லப் போனால்,

அப்போது மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் விடுவதுதான் தவறு. தொந்தரவுகள் முற்றிவிடும். கர்ப்பகாலத்தில் என்ன பிரச்னை என்றாலும் உங்கள் உடல்நிலையை நன்கு பரிசோதித்த பிறகே மருத்துவர்கள் எந்த மாத்திரையும் கொடுப்பார்கள். காய்ச்சலை சரிப்படுத்த கர்ப்பிணி சாப்பிடும் மருந்தால் கருவுக்கு பாதிப்பு வராது. ஆனால், மருந்து சாப்பிடாமல் காய்ச்சலை வளரவிடும்போதுதான் அந்தக் காய்ச்சல் கிருமிகளால் கருவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.

இந்த நாளில் பிரசவம் நடைபெறும் என்று டாக்டர்கள் சொல்லியிருந்தாலும், மிகச்சரியாக இதோ இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதை கர்ப்பிணியே உணர்ந்து கொள்வது எப்போது?


பிரசவம் எப்போது நடக்கும் என்பதை எவ்வளவு அனுபவப்பட்ட டாக்டராலும் மிகத்துல்லியமாக சொல்ல முடியாது. கடைசி மாதவிலக்கு தேதியை மனதில் கொண்டு தோராயமாகத்தான் பிரசவ தேதி கணிக்கப்படுகிறது. ஆனாலும், பிரசவத்துக்கான அறிகுறியாக இயற்கையே மூன்று விதமாக எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது. பிரசவ வலி, ஷோ, பனிக் குடம் உடைவது ஆகியவைதான் அந்த மூன்று அறிகுறிகள்.

பிரசவ வலி என்பது மாதவிலக்கு சமயத்தில் வருவதுபோல் இருக்கும். இடுப்பின் மேலிருந்து கீழாக வலி எடுக்க ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு வலிக்கும்.ஹார்மோன் சுரப்பு விகித மாறுபாடுதான் இதற்குக் காரணம். கருப்பையில் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து தலை நன்றாக இறங்கியதும் ஹார்மோன் சுரப்பு அளவு மாறுபடும். உடனே வலி ஏற்பட்டு பிறகு கருப்பையின் கழுத்து மெள்ள விரிவடையும். பிறகு, கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து மெள்ள மெள்ள தலை, நெஞ்சு என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை வெளியே தள்ளப்படும். கருப்பை அளவுக்கு சுருங்கி விரியும் தன்மை உடலில் வேறு எந்த பாகத்திற்கும் இல்லை. பத்து நிமிடம், இருபதுநிமிடம் என்று விட்டு விட்டுத்தான் பிரசவவலி வரும். அப்படி வருவதுதான் தாய்க்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. வலி வராத அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கான ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வலி ஏற்பட்டவுடன் இந்த ரத்த ஓட்டம் தடைபட்டு விடுகிறது! சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பின் வழியாக வெளியேறுவதுதான் ‘ஷோ’ என்று சொல்லப்படுகிறது. கருப்பையின் கழுத்துப் பகுதி திறக்க ஆரம்பித் ததும் அங்கே இந்த திரவம் சுரக்கும்.

கருவிலிருக்கும் குழந்தை, கருப்பை வழியாக இறங்கத் தொடங்கியதுமே குழந்தையைச் சுற்றியிருக்கும் பலூன் போன்ற பனிக்குடத் தின் ஒரு பகுதியும் இறங்கும். சில சமயம் அந்த பலூன் பாகம் உடைந்துவிட்டால் உள்ளே இருக்கும் நீர், பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதை புரிந்துகொள்ளாமல் சில பெண்கள் தங்களுக்கு அதிகப்படியான சிறுநீர் வெளியேறுகிறது என்று தவறாக நினைக்கிறார்கள். வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பனிக்குடம் உடைந்ததுமே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் மொத்த பனிக்குட நீரும் வழிந்துவிடும். இது பிரசவத்தை சிக்கலாக்கி விடும். இந்தப் பனிக்குட நீர், இளநீர் மாதிரி இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். மாறாக, மஞ்சள் அல்லது பழுப்பு வண்ணத்தில் இருந்தால் உள்ளே குழந்தை மலம் கழித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியிருந்தால் இன்னும் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

வாரிசை வரவேற்க ஒரு தாய் உடலளவில் தயாராவது போல, மனதளவிலும் தயாராவது முக்கியம். அதிலும் பிரசவம் என்னும் அற்புதமான நிகழ்வை எதிர்கொள்ள சந்தோஷமும் ஆவலுமாகக் காத்திருத்தல் அவசியம். பிரசவத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதில் பாசிடிவ்வான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மனதைக் குழப்பிக்கொள்ளாமல் எப்போதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும்.

 நல்ல எண்ணங்களுடன் இருத்தல், நல்ல படங்களை பார்த்தல், இனிய இசை கேட்டல் போன்றவை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும். அழுமூஞ்சி சீரியல் களை இந்த சமயத்திலாவது பார்க்காமல் தவிர்க்கலாமே! புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.

பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம். கர்ப்ப காலம் முடிந்து, பேறுகாலம் வந்துவிட்டது என்றால், முதலில் வலி அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் வரும். பின்னர் அது அதிகரிக்கும். வலி என்றாலுமே, 45 நொடி மட்டுமே வலி இருக்கும். பிறகு சிறிது இடைவெளி விட்டுத்தான் அடுத்த வலி வரும். இரு வலிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில், மூச்சை நன்கு உள்ளிழுத்து வெளியே விட்டு ரிலாக்ஸ் செய்தால், கர்ப்பப்பை வாய் சுலபமாக திறந்து, பிரசவம் எளிதாக, சுகமாக நடைபெற உதவும்.

பிரசவ வலி ஆரம்பித்ததும் கருப்பையின் வாய் திறந்து குழந்தை வெளியே வர குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகும். அந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் கருப்பையின் வாய் திறக்கவில்லை என்றால், வலியை அதிகப்படுத்த ஆக்ஸிடோஸின் டிரிப் தரப்படும். அப்புறமும் வலி அதிகமாகவில்லை என்றால் டாக்டரே பனிக்குடத்தை உடைத்துவிட்டு பிரசவம் பார்ப்பார். கருப்பை வாய் திறந்து குழந்தையின் தலை தெரிந்தவுடன் குழந்தையை பத்திரமாக வெளியே கொண்டு வரும் வேலைகள் ஆரம்பமாகும். அந்த நேரத்தில், குழந்தை வெளியே வர இயலாத அளவுக்கு பெண்ணுறுப்பில் சிக்கல் இருப்பின் வஜினாவை லேசாகக் கத்தரித்து துளை விரிவாக்கப்படும். ‘எபிசியோட்டமி என்று சொல்லப்படும் இந்த காரியத்தை பெரும்பாலும் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்குத்தான் செய்வார்கள்.

குழந்தையின் தலை தெரிய ஆரம்பித்த அரைமணி நேரத்துக்குள் குழந்தை பிறந்துவிட வேண்டும். கர்ப்பிணி எந்த அளவுக்கு முக்கி முக்கிக் குழந்தையை வெளித்தள்ள முயற்சிக்கிறாரோ அந்த அளவுக்கு குழந்தை சீக்கிரமாகவும் சுலபமாக வும் வெளியே வரும். சவுக்கால் அடித்ததுபோலவும், உலகிலுள்ள அத்தனை வலிகளையும் ஒருசேர போட்டு அழுத்தியது போலவும் பிரசவ வலி கஷ்டப்படுத்தினாலும், அத்தனையும் தான்பெற்ற குழந்தையை முதன்முதலாக பார்க்கும் அந்த மந்திர நிமிடத்தில் மாயமாக மறைந்துவிடும்.

 ஆர். ஹெச். டைப் என்கிறார்களே.. அப்படியென்றால் என்ன? ரத்தத்தில் A, B, O, AB என நான்கு முக்கியமான வகைகள் உண்டு. இதுதவிர, ரத்தத்தில் Rh பாசிட்டிவ், Rh நெகட்டிவ் என்ற இருபிரிவுகளும் உண்டு. தில் Rh நெகட்டிவ் உள்ள தாய் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர். அம்மா Rh நெகட்டிவ்வாக இருந்து, அப்பா Rh பாசிட்டிவ்வாக இருந்து குழந்தை Rh பாசிட்டிவ்வாக உருவாகி டுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். பிரசவ நேரத்தில் அம்மாவின் ரத்தத்தில் அவருடைய ரத்தத்துடன் தொடர்பில்லாத ‘ஆன்டிபாடி’ உருவாகிறது. அதாவது குழந்தை கருப்பையில் விட்டுச் செல்கிற பாசிட்டிவ் ரத்தத்தால் இது உருவாகிறது. முதல் பிரசவத்தின்போதுதான் குழந்தை இப்படி ஒரு ‘ஆன்டிபாடி’யை விட்டுச் செல்வதால் அப்போது குழந்தைக்கோ அம்மாவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அந்த தாய் மீண்டும் கருவுறும்போது இரண்டாவது குழந்தைக்குத்தான் மிகப் பெரிய பாதிப்புகளை அது உண்டாக்குகிறது. இதைத் தவிர்க்க, முதல் குழந்தை பிறந்ததுமே குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்து அதன் வகையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதன் ரத்தம் பாசிட்டிவ் வகையாக இருக்கிற பட்சத்தில் இதற்கென்றே இருக்கிற விசேஷ ஊசியை 24 மணி நேரத்துக் குள் அந்த தாய்க்குப் போட்டால் இந்த ஆன்டிபாடி உருவாகி இரண்டாவது குழந்தைக்கு எதிரியாகாமல் தடுக்க முடியும். முதல் டிரைமெஸ்டரில் ரத்தப் பரிசோதனை செய்யும்போதே அம்மாவின் ரத்த வகையைத் தெரிந்து கொண்டால் இந்த விஷயத் தில் கவனத்துடன் இருக்க முடியும். Rh பாசிட்டிவ் அம்மாக்களுக்கு இந்தப் பிரச்னையெல்லாம் இல்லை. அதேபோல், தாய் Rh நெகட்டிவ்வாக இருப்பினும் குழந்தையும் Rh நெகட்டிவ்வாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை. இரண்டாம் முறை அம்மாவாக போகிறவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

முதல் பிரசவத்தில் அந்த அனுபவம் புதிது என்பதால் எப்படியிருக்குமோ என்ற பயம்தான் பிரதானமாக இருக்கும். அடுத்ததில் அந்த பயம் தெளிந்திருக்கும் என்பதால் அவ்வளவு டென்ஷன் இருக்காது. முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு (பெல்விஸ் சிறியதாக இருந்தால் வேறு வழியேஇல்லை. இரண்டாவது குழந்தை யையும் அறுவைசிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டும்). முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், ‘ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்’ செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச் சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும். பாதுகாப்பான பிரசவத்துக்கு அது உதவும். இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் முதல் குழந்தை. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், எங்கே தன் தாயின் கவனமும் பாசமும் மொத்த மாய் அந்தக் குழந்தைக்கே போய்விடுமோ என்ற ஏக்கம் முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும். அந்த சமயத்தில் தாயுடன் தந்தையும் அந்தக் குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்ட வேண்டும். `நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும். அது உன்னை அண்ணா/அக்கானு கூப்பிடுமே.. அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே’ என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், `பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம்.. சொல்லு கண்ணு’ என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை ஜோராக உங்களைவிட ஆர்வமாக தனது உடன்பிறப்பை வரவேற்கத் தயாராக இருக்கும்.

 9 மாதங்கள் வரை குறிப்பிடத் தகுந்த உடல் மாற்றங்களோ, பிரச்னைகளோ இல்லாதவரை, வழக்கமான தடுப்பூசி, ஸ்கேனிங் போன்றவை தொடரலாம். பிரசவத்துக்கு முந்தின நாள் வரை அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்த்த தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு!

 பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம். ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்.

கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும்.

 வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம்.

ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

 மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்ப ப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம். காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம்.

மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்து விடும்.

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை. சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்

 * கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

 * குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

 * மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

 * எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

 * அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

* கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

 * அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

 * சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

 * மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

 * கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

 * தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 * மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

 * அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

* இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்