எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 அக்டோபர், 2020

கிரிக்கெட் வீரர் முரளிதரனை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?


1. ஈழத்தில்  தமிழ்மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த நாளில் இறுதி கட்ட போரின் போது, போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்று கருத்து தெரிவித்தார் முத்தையா முரளிதரன்.

2. இனப்படுகொலை குறித்தான விசாரணைக்கு கோரிக்கைகள் எழுந்த போது, இங்கே அமைதி நிலவுகிறது. சர்வதேசம் இதனைக் குழப்ப வேண்டாம் என்று பேசினார் முரளி.

3. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது, விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியதுஎன கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் முத்தையா முரளிதரன் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

4. பிரிட்டர் பிரதமர் டேவிட் காமரோன் இலங்கை இனப்படுகொலை குறித்த பார்வையிட வந்த போது, காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கூடி அவரிடம் முறையிட்டனர். அப்போது, முப்பது தாய்மார்கள் கூடி போராடுவதால் இலங்கை அரசு தவறு செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது. யாரோ தூண்டிவிட்டு இயக்கும் நாடகம் என்று கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேசியதால் எதிர்ப்பு உண்டானது.

5. கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது’ என்று சிங்களத்தில் உரையாடியதால்  தமிழ் இளைஞர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்திட, முரளியைத் தாக்க முயன்றதாக அந்த இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

6. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு இலங்கையின் தங்கல்லை பகுதியில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து, தனது சொந்தப் பணத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் முத்தையா முரளிதரன்.

7. தனது நட்சத்திர அந்தஸ்தால் இலங்கையில் எப்போது தேர்தல் நடந்தாலும் ராஜபக்சே ஆதரவாளராக தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளார் முரளி.

ஆக தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை முத்தையா முரளிதரன்800 என்ற பெயரில் விஜய்சேதுபதியை வைத்து சினிமாவாக எடுக்க முயற்சிக்கும் போது எதிர்ப்பு வராமல் எப்படி இருக்கும்.

விஜய்சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது  அதை அவர் கெடுத்துக் கொள்ளக்கூடாது.. இது போன்ற படங்களை அவர் தவிர்க்க வேண்டும்..

வியாழன், 12 டிசம்பர், 2019

டிசம்பர் 31 வரை கெடு!வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ அதன் டெபிட் கார்டு பயனர்களை, வருகிற டிசம்பர் 31, 2019 க்குள் ஈ.எம்.வி-சிப் கார்டிற்கு (EMV-chip Card) மாறுமாறு கேட்டுக்கொள்கிறது.

ஒருவேளை நீங்கள் இந்த பரிந்துரைக்கு இணங்கவில்லை என்றால், எஸ்பிஐ வங்கி ஆனது அதன் அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை அட்டைகளையும் செயலிழக்கச் செய்யும், அதாவது டிஆக்டிவேட் செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் இந்த நடவடிக்கை? என்பது உட்பட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள் இதோ!

01. அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான காலக்கெடுவாக 2019 டிசம்பர் 31 ஐ எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது

02. இந்த நடவடிக்கையின் கீழ், எஸ்பிஐ கார்டுகளின் வேலிடிட்டி பீரியட் பொருட்படுத்தப்படாது. அதாவது எஸ்பிஐ கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடித்திருந்தாலும் கூட எஸ்பிஐ வங்கியானது மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகள் ஆனது டிஆக்டிவேட் செய்யும். இதன் பொருள் டிசம்பர் 31 க்கு அப்பால் காலாவதியாகும் அட்டைகள் கூட டிஆக்டிவேட் செய்யப்படும்.

03. மேக்னட் ஸ்ட்ரைப்ஸ் கார்டுகளின் வழியாக தொடர்ந்து நாடாகும் மோசடிகளைக் கருத்தில் கொண்டே அவைகள் டிஆக்டிவேட் செய்யப்படுகின்றன. ஈ.எம்.வி சிப் தொழில்நுட்பம் ஆனது டெபிட் கார்டு பேமண்ட்களுக்கான சமீபத்திய உலகளாவிய தரமாகும். இந்த தொழில்நுட்பத்தில் அட்டைதாரரின் தரவை சேமித்து பாதுகாக்கும் உட்பொதிக்கப்பட்ட நுண்செயலி சில்லுகள் உள்ளன. மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டர் வழியாக, எஸ்பிஐ கூறுகையில், "உத்தரவாத நம்பகத்தன்மை, ஆன்லைன் பேமண்ட்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் மோசடிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்." என்று ஈ.எம்.வி சிப் தொழில்நுட்பத்தை பற்றி குறிப்பிட்டுள்ளது.

04. ஈ.எம்.வி சிப் இல்லாத மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகள் மட்டுமே டிஆக்டிவேட் செய்யப்படும். அதாவது மேக்னட் ஸ்ட்ரைப் மற்றும் ஈ.எம்.வி சிப் ஆகிய இரண்டையும் கொண்ட எஸ்பிஐ டெபிட் கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று அர்த்தம். சிப் இல்லாத பழைய மேக்ஸ்ட்ரைப் கார்டுகள் மட்டுமே டிஆக்டிவேட் செய்யப்படும்.

05. ஈ.எம்.வி சிப் கார்டை பெறாத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை மாற்றுவதற்கு ஹோம் பிரான்ச்சை அணுக வேண்டும்

06. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய கார்டுக்கு எஸ்பிஐ இணைய வங்கி வழியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, “eServices” டேப்பின் கீழ் http://onlinesbi.com இல் உள்நுழையவும். பின்னர் “ஏடிஎம் கார்டு சேவைகள்” என்பதைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

07. எஸ்பிஐ யோனோ ஆப் மூலமும் பயனர்கள் தங்களுக்கான புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

08. மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகளை மாற்றுவது முற்றிலும் இலவசமான ஒரு செயல்முறை ஆகும். அதாவது மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை ஈ.எம்.வி சிப் மற்றும் பின் அடிப்படையிலான கார்டுகளாக மாற்ற எந்த கட்டணமும் வசூலிக்கப்பட்ட மாட்டாது.

09. நாம் பேசும் ஈ.எம்.வி சிப் ஆனது டெபிட் கார்டின் முன் (மைய-இடது பக்கத்தில்) வைக்கப்பட்டுள்ளது. ஆக பயனர்கள் தங்கள் புதிய கார்டில் ஈ.எம்.வி சிப் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.


10. புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டு முகவரியை சரிபார்க்கச்சொல்லியும் எஸ்பிஐ பரிந்துரைக்கிறது. பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு மட்டுமே புதிய கார்டு அனுப்பப்படுவதால் வாடிக்கையாளர்களின் தற்போதைய வீடு முகவரி ஆனது வங்கி அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

திங்கள், 9 டிசம்பர், 2019

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

சம்மர் தொடங்கிடுச்சு, ஜில்லுன்னு இருக்க ஊருக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிப்போம். நானும் ஒரு டிரைலரா ஏற்காடு போய்ட்டு வந்தேன். 

அப்படியே சேலம் சைடு இருக்குற உணவுகளையும் மறக்காம டேஸ்ட் பண்ணிட்டு வந்தேன் (நான் போனதே அதுக்குத்தான் மக்களே). சேலம், ஈரோடு பகுதிகள்ல 'தண்ணீர் குழம்பு' ரொம்ப ஃபேமஸ்ன்னு தெரிய வந்துச்சு, உடனே ஜூட் விட்டுட்டேன்.

காய், கறின்னு எல்லாத்துலயும் இந்த குழம்ப செய்ய முடியும். கிரேவி கெட்டியா இல்லாம, முழுக்க முழுக்க தண்ணியா இருக்கும், ஆனா டேஸ்ட்ட அடிச்சுக்கவே முடியாது. நான் இந்த குழம்ப இது வரைக்கும் சாப்பிட்டதே இல்ல, அதனால நாட்டுக் கோழி தண்ணீர் குழம்ப ஆர்டர் பண்ணுனேன்

மிளகு, சீரகம், மசாலான்னு நாட்டுக் கோழி குழம்புல என்னல்லாம் இருந்த, எந்த மணம் வீசுனா நாக்குல எச்சில் ஊறுமோ, சந்தேகமே இல்லாம அப்படியே இருந்தது. மசாலாவோட அளவெல்லாம் கரெக்ட்டா இருந்ததால டேஸ்ட்டும் யம்மியா இருந்துச்சு. 

மசாலாவுல வெந்திருந்த எலும்பும் சதையுமான பீஸெல்லாம் எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரியல. பொதுவா நிறைய பேருக்கு நாட்டுக் கோழி கொஞ்சம் கடினமா இருக்கும்ன்னு, சாப்பிட மாட்டாங்க. ஆனா இந்த குழம்புல இருந்த கறி அப்படி இல்ல. நல்லா வெந்து, சாப்பிடும்போது இதமா இருந்துச்சு. சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் சாப்பிடலாம்.

கால் கிலோ குழம்பு 200 ரூபாய்.
இன்னொரு விஷயம் என்னன்னா, தண்ணீர் குழம்பு எப்படி எனக்கு ஃபர்ஸ்ட் டைமோ, அதே மாதிரி நாட்டுக் கோழி முட்டையோட பையையும் அப்போ தான் முதல் முறையா பார்த்தேன். முட்டையோட டேஸ்ட் ஒரே மாதிரி இருந்தாலும், பார்வைக்கு வித்தியாசமா இருந்துச்சு.

இனிமேல் யாராச்சும் ஈரோடு, சேலம் பக்கம் போனீங்கன்னா, மறக்காம இந்த தண்ணீர் குழம்ப டேஸ்ட் பண்ணிட்டு வாங்க!

தேங்காய் பன்


சேலத்தில் எனது தந்தையார் புகழ் பெற்ற ஸ்வீட் ஸ்டால் & ஓட்டல் வைத்திருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் தின்பண்டங்கள் வாங்கி வரவே மாட்டார்கள்.. அப்படி வந்தால் சாத்துக்குடியும் ஆப்பிளும் தான்.. முதன் முதலில் காவல் துறையில் பணிபுரிந்த எங்கள் அசோகன் அண்ணன் எங்களுக்கு ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருந்தார்!

அவரது சீருடை போன்ற காக்கி நிறத்திலேயே பெரிய காகிதப் பொட்டலம்..

இப்படியும் ஓர் உணவகம்



சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்தூர் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப்.
கடந்த வாரம் அந்த வழியாக போகும் போது அந்த காபி ஷாப் போயிருந்தேன்.

வாசலில் இருந்த ஒரு போர்டு வித்தியாசமாகப்பட்டது.அதில் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவை ரோட்டில் ஆபத்தான முறையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் எவ்வித கட்டணமுமின்றி உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடலாம், இங்குள்ள பிற வசதிகளையும் தாரளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது.

சனி, 7 டிசம்பர், 2019

உங்கள் கையில் ஆபாச வீடியோ இருப்பதால் மட்டும் நீங்கள் குற்றவாளி அல்ல

ஊர்கூடித் தேர் இழுப்போமா!

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். தயவு செய்து ‘ஆபாச வீடியோ பார்ப்போரின் பட்டியல் தயார்…அடுத்து கொத்துக்கொத்தாக கைதுதான்’ என்ற ரீதியில் வரும் செய்திகள்,யூ டியூப் செய்திகளைப் புறம் தள்ளுங்கள். அந்த செய்தியில் இருப்பது கொஞ்சூண்டு உண்மை மட்டுமே.

எங்களது  ‘செல்லமே’ குழந்தை வளர்ப்பு மாத இதழுக்காக காவல் துறை கூடுதல் இயக்குநர் (சிறார், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) திரு.ரவி, இ.கா.ப. அவர்களை இன்று சந்தித்தேன். அந்த நேர்காணல் சிறிது நேரத்தில் இணையத்தில் வெளியிடப்பட இருக்கிறது. 
நான் பேசியமட்டில் தெரிந்த விஷயங்கள் இவைதாம்:

*அவரது சிறப்புப்பிரிவு, பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே செயல்படுகிறது.

*குழந்தைகளைத்துன்புறுத்தி, வசீகரித்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீடியோக்களைத்தான் இப்பிரிவு கவனம் எடுத்துப் பார்க்கிறது. அதனை உருவாக்கியோர், தவறான நோக்கத்துடன் பரப்புவோர் ஆகியோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதில் மாற்றமில்லை.

*குழந்தைகளை அவ்வாறு சிந்தித்துப்ப்பார்க்கவே சிலரால்தான் முடியும். மனப்பிறழ்வு கொண்டவர்கள் அவர்கள். அதற்குத்தான் சிகிச்சையோ/தண்டனையோ தேவை.

ஞாயிறு, 20 மே, 2018

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே
எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதயே பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

மா இலை ஏன் மத/சமயம் சம்பந்தமான நிகழ்வுகள்,கொண்டாட்டங்களுக்கு உபயோகிக்கிறோம் ?




இதற்க்கு முக்கிய காரணம் மா இலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு, மா இலைகள் மரத்தில் இருந்து பறிக்கப் பட்ட பிறகும் கரியமில வாயு (கார்பன் டை ஒக்ஸ்ய்ட்) எடுத்துக் கொண்டு உயிர் வாயு(ஒக்ஜெயின்) தரக்கூடிய ஆற்றல் உடையது, எனவே தான் நம் முன்னோர்கள் மா இலைகளை மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்களில் பயன்படுத்தினார்கள். மேலும் மா இலைகள் அனைத்து காலங்களிலும் எளிதில் கிடைக்கக் கூடியது.

நம் முன்னோர்கள் அனைத்தையும் அறிவியல் கண்ணோடு

நம் முன்னோர்கள் கிணறு வெட்டுன டெக்னாலஜி ???


நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு. நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர்  சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்

குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் போடுவதில் உள்ள அறிவியல் காரானம்


பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன்?

 

ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.

சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார்.

மாணவனும் 'வெற்றிலை' என்றான். "அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க மாணவன் சொல்லத் தெரியாமல்

இடி இடிக்கும் போது அர்ஜுனா_அர்ஜுனா என்று கூறுவதில் உள்ள அறிவியல் காரானம்


>>நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

>>உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

>>இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள்.

>>உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

>>இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

>>இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.
#அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.

#ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவதின் உள்ள அறிவியல் காரானம்


இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!!
தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!


சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.


காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சனி, 19 மே, 2018

பிறந்த மாதமும் பெண்களின் குணமும் - ஆகஸ்டில் பிறந்த பெண்களிடம் உஷார் !

பொதுவாக அமாவாசையில் குழந்தை பிறந்தால் வீட்டுக்கு நல்லதல்ல என நாம் கேள்விப்பட்டிருப்போம், இன்றைய அறிவியல் உலகில் இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது என்றும் நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

ஆனால், இன்றளவும் ஜோதிடம் பார்த்து, நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து அந்த நாளை துவங்கும் நபர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிறந்த மாதத்தை வைத்து பெண்களின் குணங்களை கணிக்க முடியும் என்கிறது ஜோதிடம் .

ஜனவரி

ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாகவும், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள்.

பிப்ரவரி

காதலுக்கு உகந்த மாதம் . இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. இவர்கள் எண்ணம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையாகவும் , கவர்ச்சியாகவும் இருப்பார்கள் . இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள்

அப்பாக்களுக்கு - வயதிற்கு வரக்காத்திருக்கும் மகள்கள்.


எனக்கு தெரிந்த ஒருவருடைய மகள் இப்போது 7ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அவ்வப்போது வீசிங்க் பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதற்கு அவர்கள் மருத்துவம் பார்த்து மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர்.

5ம் வகுப்பு வரை 80 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் வாங்கி வந்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பிக்கிறாள். 70 சதவீதம் 60 சதவீதம் என குறைகிறது.

அவளது தந்தை , எப்பவும் 90 எடுக்க முடியுமா , குழந்தைதானே டேக் இட் ஈஸி என மகளைத் திட்டும் மனைவியை அடக்குகிறார்.

ஒரு கட்டத்தில் ஒன்றிரண்டு பாடங்களில் ஃபெயில் ஆகிறாள்.நீ கொஞ்சம் பொண்ணுக்கு ஒழுங்கா சொல்லிக்கொடு என்று மனைவியைத் திட்டுகிறார் அப்பா.
குழந்தை பள்ளியில் இருக்கும்போது தந்தைக்கு ஒரு போன்கால் வருகிறது. குழந்தை மயக்கம் அடித்து விழுந்து விட்டாள். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என அழைத்துச் செல்கிறார்கள். மருந்துகள் கொடுக்கப்பட்டு வைத்தியம் பார்த்ததும் வீட்டுக்கு வருகிறாள்.

இது நடந்து சில நாட்களிலேயே மீண்டும் வகுப்பில் மயக்கம் அடித்து விழுகிறாள். மீண்டும் அரசு மருத்துவமனை. அது ஒரு சின்ன டவுன் தான். இந்த முறை தலைமை நர்ஸ் , குழந்தையின் அப்பாவுடன் பேச வேண்டும் என்கிறார்.அப்பாவும் சென்று பேசுகிறார்.

“இவளுக்கு என்னென்ன பிரச்சனை ?”

ஊழல்

கடந்த வாரம் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். எதிரில் அமர்ந்து ஒருவர் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். 

முழு போதையிலிருந்தார். நான் ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினேன். "அதை கொண்டு வா.. இதை கொண்டு வா.." என அரட்டி கொண்டிருந்தார். திடீரென அவரை காணவில்லை. சப்ளை செய்த பெண் ஓடி வந்து "சார் இங்க சாப்பிட்டு இருந்தவர பார்த்திங்களா?" என்றார்.

நான் "இல்லையே என்னாச்சு?" என்றேன். "பில் கொடுக்காம போய்ட்டாரு சார். செம போதைல இருந்தாரு. கிச்சன் வரை போய்ட்டு வந்து பார்த்தா காணோம்" என்றார் பரிதாபமாக. "மறந்துட்டு போயிருப்பாரு, திரும்ப வருவாரு" என ஆறுதல் சொன்னேன். 

"இல்ல சார் சாப்பிட்டத எப்படி மறப்பான், போய்ட்டான் சார்.. இந்த காசை என் சம்பளத்தில் தான் பிடிப்பாங்க" என சோகமாக சொன்னார்.

"பில் போட்டா தான பிரச்சனை? பில் போடாதீங்க. கண்டுக்காம விட்ருங்க" என்றேன். "இல்ல சார் இங்க டேப்ல(மொபைலில்) ஆர்டர் எடுத்துட்டு தான் பரிமாறுவோம். 

அது என் பெயருடன் பில் வந்துரும். கஸ்டமர் காசை கட்ற வரை என் பொறுப்பு, எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கூட எடுக்க முடியாது. இன்னைக்கு நேரம் சரியில்ல. அவ்ளோ தான்"

 என்று அவரை சுற்றி தேடியபடி பதட்டமாக பதில் சொன்னார்.
எனக்கு அவன் மீது செம கோவம். அந்த உணவு விடுதியில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 200ரூ வரும் சாப்பாடு. அந்த பெண்ணிற்கு சம்பளம் 500ரூ இருக்கலாம். அவளுக்கு

வெள்ளி, 18 மே, 2018

எதை வைத்து நமக்கு மரியாதை கிடைக்கும்?

1]* எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]
3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்*

வியாழன், 29 மார்ச், 2018

நுங்கு சீசன் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது


லாரி பிடித்து ஏற்றிக்கொண்டு போய் வியாபாரம் செய்கிற அளவுக்கு நுங்கு சீசன் களை கட்ட ஆரம்பித்திருக்கிறது. முன்பைக் காட்டிலும் நுங்கு மீதான ஆர்வமும் இன்றைய தலைமுறையினரிடம் பெருகத் தொடங்கி இருக்கிறது. வரவேற்கத்தக்க மகத்தான மாற்றம்.

நுங்கு சர்பத்


நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பயணிக்கையில், சாலை ஓரங்களில் இந்த பானம் விற்பனை. விசாரித்தால் நுங்கு சர்பத் என்றார்கள். அருமையான சுவை; அவ்வளவு குளிர்ச்சி.

பனை ஓலை வாசனை நுகர்ந்திருக்கிறீர்களா?


இயற்கையின் அற்புதமான வரம். அதில், நுங்குகளைப் போட்டோ, பதநீர் ஊற்றியோ பருகினால் அமிர்தம். வயற்காடுகளில் பனை மட்டையில் பழைய சோறு போட்டு சாப்பிடுவார்கள். வாசனை அப்படியிருக்கும்.