எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 டிசம்பர், 2019

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

சம்மர் தொடங்கிடுச்சு, ஜில்லுன்னு இருக்க ஊருக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிப்போம். நானும் ஒரு டிரைலரா ஏற்காடு போய்ட்டு வந்தேன். 

அப்படியே சேலம் சைடு இருக்குற உணவுகளையும் மறக்காம டேஸ்ட் பண்ணிட்டு வந்தேன் (நான் போனதே அதுக்குத்தான் மக்களே). சேலம், ஈரோடு பகுதிகள்ல 'தண்ணீர் குழம்பு' ரொம்ப ஃபேமஸ்ன்னு தெரிய வந்துச்சு, உடனே ஜூட் விட்டுட்டேன்.

காய், கறின்னு எல்லாத்துலயும் இந்த குழம்ப செய்ய முடியும். கிரேவி கெட்டியா இல்லாம, முழுக்க முழுக்க தண்ணியா இருக்கும், ஆனா டேஸ்ட்ட அடிச்சுக்கவே முடியாது. நான் இந்த குழம்ப இது வரைக்கும் சாப்பிட்டதே இல்ல, அதனால நாட்டுக் கோழி தண்ணீர் குழம்ப ஆர்டர் பண்ணுனேன்

மிளகு, சீரகம், மசாலான்னு நாட்டுக் கோழி குழம்புல என்னல்லாம் இருந்த, எந்த மணம் வீசுனா நாக்குல எச்சில் ஊறுமோ, சந்தேகமே இல்லாம அப்படியே இருந்தது. மசாலாவோட அளவெல்லாம் கரெக்ட்டா இருந்ததால டேஸ்ட்டும் யம்மியா இருந்துச்சு. 

மசாலாவுல வெந்திருந்த எலும்பும் சதையுமான பீஸெல்லாம் எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரியல. பொதுவா நிறைய பேருக்கு நாட்டுக் கோழி கொஞ்சம் கடினமா இருக்கும்ன்னு, சாப்பிட மாட்டாங்க. ஆனா இந்த குழம்புல இருந்த கறி அப்படி இல்ல. நல்லா வெந்து, சாப்பிடும்போது இதமா இருந்துச்சு. சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் சாப்பிடலாம்.

கால் கிலோ குழம்பு 200 ரூபாய்.
இன்னொரு விஷயம் என்னன்னா, தண்ணீர் குழம்பு எப்படி எனக்கு ஃபர்ஸ்ட் டைமோ, அதே மாதிரி நாட்டுக் கோழி முட்டையோட பையையும் அப்போ தான் முதல் முறையா பார்த்தேன். முட்டையோட டேஸ்ட் ஒரே மாதிரி இருந்தாலும், பார்வைக்கு வித்தியாசமா இருந்துச்சு.

இனிமேல் யாராச்சும் ஈரோடு, சேலம் பக்கம் போனீங்கன்னா, மறக்காம இந்த தண்ணீர் குழம்ப டேஸ்ட் பண்ணிட்டு வாங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக