எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 10 டிசம்பர், 2019

வருகிறது வைஃபை 6 (Wi-Fi 6): மிக வேகமனதா? எவ்வளவு வேகமானது ?



அடுத்த தலைமுறை வைஃபை - Wi-Fi 6, இப்போதைய வேகத்தை விட அதிக வேகத்தைக் கொண்டுவருகிறது. வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் (Wireless Technology) ஒன்றான Wi-Fi இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான Wi-Fi 6 அதிகபட்ச வேகமாக 9.6 Gbps இனை கொண்டுள்ளது.

விரைவான Wi-Fi , இது நல்ல செய்தியாகும்: வேகமான இணையம் (Internet)
என்பது தொடர்ந்து தேவைப்படுகிறது, குறிப்பாக மடிக்கணினிகள் (Laptop) மற்றும் கைபேசிகளுக்கும், மேலும் அலைவரிசை-கோரிய பயன்பாடுகள், விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களை நாம் விரைவில் காண்பதற்கு பயன்படுத்துகிறது.

Wi-Fi 6 என அறியப்படும் அடுத்த தலைமுறை Wi-Fi ஒரு வேக ஊக்கத்தை அதிகரிப்பது அல்ல. அதன் தாக்கம் மிகவும் நன்மையாக விளங்கும். காலப்போக்கில் Wi-Fi 6 இனால் அதிக நன்மைகள் பார்க்க இயலும்.  

 

வைஃபை 6 (Wi-Fi 6) என்றால் என்ன ?

Wi-Fi 6 என்பது அடுத்த தலைமுறை Wi-Fi ஆகும். இது அடிப்படை அம்சத்தைச் தருவதுடன்- இணையத்துடன் வேகமாக இணைக்க - கூடுதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இணைப்புகளின் செயல்பாட்டில் வேகத்தை அதிகரிக்கச் செய்ய இது உதவும்.

வைஃபை 6 (Wi-Fi 6) எவ்வளவு வேகமானது ?

எளிய ஆனால் முழுமையற்ற பதில்: 9.6 Gbps. இது Wi-Fi 5 இல் பெறப்படும் 3.5 Gbps விட மிக அதிகமானது.

Wi-Fi 5 விட அதி வேகத்தைக் கொண்டிருப்பதால் இது ஒரு கணினிக்கென்பதில்லை. 9.6 Gbps என்பது ஒரு முழு நெட்வொர்க்கிலும் (Group of devices) பிரிக்கப்படலாம். ஒவ்வொரு இணைக்கப்பட்ட கருவிக்கும் அதிகமான வேகத்தை தருகிறது. ஆக எளிதில் தரவுகள் (Data) அனுப்பப்பட்டு பெறவும் படும்.

இன்றைய நாட்களில் ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 5 கருவிகளை வைஃபையால் இணைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். இரு கைபேசிகள், கைபேசி, தொலைக்காட்சி, கணினி, டேப்லட் என வரிசை படுத்திக்கோண்டே போகலாம். அடித்த தலைமுறை வைஃபை ஆன வைஃபை 6 (Wi-Fi 6) மக்களிடம் வந்தடையும் போது உலகமானது அதிவேகமான கணினிமயத்தால் மாயையாய் மாறக்கூடும்.
நன்மைகள் அதிகமாய் இருந்தாலும், அதற்கேற்ப தீமைகளும் அதிகமானதாய் காணப்படும். எளிய பாஸ்வேர்டுகள், ஆன்லைன் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுங்கள். முடிந்தவரை மூளையை பயன்படுத்துவதில் சிறிதேனும் கடந்த நூற்றாண்டின் மனிதனாய் இருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக