.
பிள்ளையாருக்கு பல விரதங்கள் கடைபிடித்தாலும்,இந்த கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் விரதம் மிக சிறப்பு வாய்ந்தது!
இதை "குமார சஷ்டி"விரதம் என்பார்கள்.
இந்த விரதம் வரும் பௌணர்மிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி அன்று முடிக்க வேண்டும்.
விரதம் இருக்க ஆரம்பிப்பவர்கள்,கைகளில் 21 இழைகள் வருமாறு மஞ்சள் தோய்ந்த நூலை கட்டிக்கொள்ளவேண்டும்.
மற்ற விரதங்களை எப்படி பிடிப்பீர்களோ அதேபோல் கடைபிடித்தால் போதும்.
மார்கழி வளர்பிறை சஷ்டி அன்று விரதத்தை முடித்துவிட்டு,கையில் கட்டியிருக்கும் மஞ்சள் நூலை பால் சொம்பில் போட்டு விரதம் முடிக்கலாம்.
இந்த விரதத்தால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்,இன்னல்கள் தீரும்,மகிழ்ச்சி உண்டாகும்,இல்லத்தில் மங்கல காரியங்கள் நடந்தேறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக