எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 10 டிசம்பர், 2019

சனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருகின்றன‌. அமெரிக்காவின் ‘கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் சனிக்கிரகத்தில்
ஆய்வின்போது இதனை கண்டறிந்துள்ளனர்.


கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸில் (Carnegie Institution for Science ) அமைப்பில், ஸ்காட் எஸ். ஷெப்பர்ட் தலைமையிலான குழுவினரால் ஹவாயில் உள்ள‌ Mauna Keaஇல் நிறுவப்பட்ட‌ சுபாரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த‌ சந்திரன்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 



சூரிய மண்டலத்தில் ஆறாவதாக‌ கருதப்படும் சனி கிரகத்தினை தற்போது மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக சனி விளங்குதிறது. இதனால் அதிக‌ எண்ணிக்கையிலான‌ நிலவுகளை உடைய‌ கிரகமாக‌ திகழ்ந்து வந்த வியாழனை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி, சனி கிரகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.
புதிதாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகளுக்கு பெயர் வைப்பதற்காக பொதுமக்களுக்கு ஓர் போட்டி அறிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக