எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி
சமையல் ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் ஸ்பெஷல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மார்ச், 2020

மீன் உருண்டை / கேக்!


தேவையான பொருட்கள்:

900 கிராம் மீன்
3 முட்டை
1 தே.க மஞ்சள்
1/2 மே.க மிளகாய்த்தூள்
1/2 மே.க முளகுதூள்
உப்பு
1/2 மே.க தேசிப்புளி
300 மி.லீட்டர் பால்
3 மே.க உருளைக்கிழங்குமா/ கோதுமை மா
1 தே.க வெட்டுத்தூள்
3 மே.க மல்லிஇலை
மாஜரின்/ எண்ணை


செய்முறை:

மீனிலிருந்து தோல் மற்றும் முள்ளை அகற்றி, சுத்தம் செய்யவும்.
மீனை சிறு சிறு தண்டுகளாக வெட்டி, அதனை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் முட்டை, மஞ்சள், மிளகாய்த்தூள், முளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து, பசைத்தன்மையாக நன்கு அரைக்கவும்.

அதனுடன் பால் மற்றும் உருளைக்கிழங்குமா/ கோதுமை மா சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும் (களிப்பதம்). அதனுடன் வெட்டுத்தூள் மற்றும் மல்லிஇலை சேர்த்து நன்கு கலந்து, குறைந்தது 30 நிமிடங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
ஒரு தாச்சியில் சிறிது மாஜரின்/ எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

உள்ளங்கையை ஈரமாக்கி, அதில் சிறிது மீன் கலவையை வைத்து விரும்பிய அளவில் உருட்டி / தட்டி சூடான தாச்சியில் போட்டு, பொண்ணிறமாக பொரித்து எடுக்கவும். சுடச் சுட தக்காளி சோஸ்ஸுடன் பரிமாற, சுவையாக இருக்கும்.

குறிப்பு:
இரவு குழைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, காலையில் பொரித்து, பிள்ளைகளுக்கு பாடசாலை உணவாக கொடுத்து விடலாம்.
மசாலாக்களை உங்கள் ருசிக்கேற்ப கூட்டிக் குறைக்கவும்.
உருளைக்கிழங்குமா/ கோதுமை மாவிற்று பதிலாக அவித்த உருளைக்கிழங்கு சேர்க்கலாம்.

சொக்லேட் கேக்! (முட்டை, பால் தவிர்த்தது)



 தேவையான பொருட்கள்:

250 கிராம் மா
250 கிராம் சீனி (-/+)
3 மே.க கொக்கோ (-/+)
1/2 மே.க வனிலா (-/+)
1 தே.க பேக்கிங்சோடா
1/2 தே.க பேக்கிங்பவுடர்
1 சிட்டி உப்பு
200 மி.லீ தண்ணீர்
50 மி.லீ கோப்பி
100 மி.லீ எண்ணை
1/2 மே.க தேசிப்புளி / வினாகிரி

சொக்லேட் கிறீம்:
250 கிராம் ஐசிங்சுகர் (-/+)
3 மே.க கொக்கோ (-/+)
1/2 தே.க வனிலா (-/+)
2 மே.க கோப்பி
100 கிராம் பட்டர்

செய்முறை:

கேக்:
ஒரு பாத்திரத்தில் மா, சீனி, கொக்கோ , வனிலா, பேக்கிங்சோடா, பேக்கிங்பவுடர் மற்றும் உப்உ ஆகியவற்றை ஒன்றாக அரித்து வைக்கவும்.
தண்ணீர், கோப்பி, எண்ணை மற்றும் தேசிப்புளி / வினாகிரியை மாக்கலவையினுள் விட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
பேக்கிங் தட்டில் (22 x 22 செ.மீ ) அல்லது 26 செ.மீ வட்ட தட்டில் கேக் கலவையை விட்டு சம்பபடுத்தவும்.
கேக்கை 175˚C ல் அண்ணளவாக 35 - 40 வேக விடவும். கேக்கை பேக்கிங் தட்டஉடனேயே ஆற விடவும்.

சொக்லேட் கிறீம்:
ஒரு பாத்திரத்தில் சொக்லேட் கிறீமில் குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப கேக்கை அலங்கரிக்கவும்.

குறிப்பு:
கோப்பி சேர்க்காமல் செய்வதென்றால், மேலதிகமாக 50 மி.லீ தண்ணீர் சேர்க்கவும் ( 200 மி.லீ தண்ணீர்+
50 மி.லீ தண்ணீர் = 250 மி.லீ தண்ணீர்)
கேக்கை அலங்கரிக்கும் போது கேக்கின் அடியில் எல்லா பக்கமும் பேப்பர் வைத்து, பக்கங்கள் முழுவதும் ஐசிங் பூசி சமப்படுத்தி, அதன் பின் பேப்பர்அகற்றினால், கேக் தட்டில் ஐசிங் வராது.

திங்கள், 9 டிசம்பர், 2019

ஆம்பூர் பிரியாணி





1. மட்டன் கறி – 1 கிலோ
2.வெங்காயம் – 1/4 கிலோ
3.தக்காளி – 1/2 கிராம்
4.இஞ்சி பூண்டு விழுது
5.பச்சை மிளகாய்
6. எலுமிச்சை
7.நறுமணப்பொருட்கள்
8. தயிர்
9.பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி
10.கடலை எண்ணெய்
11.கொத்தமல்லி – புதினா
12.உப்பு
13. மிளகாய் தூள்
14. கரம்மசாலா தூள்
15.தனியா தூள்
16. சிவப்பு மிளகாய் தூள்
 

செய்முறை:
 
1. முதலில், குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும்.
 
2. பின்பு அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
 
4. பின்பு, அதில் மட்டனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
 
5. இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
 
6. அதன் பின்பு, மிளகாய் தூள், கரம்மசலா தூள், தனியா தூள், நிறம் தரும் வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
 
7. பின்னர், தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.
 
8. இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.
 
9. இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து , குக்கரை மூடி அதன் ஓரத்தில் ஈரத்துணியை சுட்டி கட்ட வேண்டும்.
 
10. இப்படியே சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும்.
 
11. அப்புறம் திறந்து, நெய் தூவி மணக்க மணக்க பரிமாறினால் சுவையான வேலூர் ஸ்பெஷல் ஆம்பூர் பிரியாணி தயார்.

சென்னா மசாலா

தேவையான பொருட்கள்.     :
வெள்ளை கொண்டக்கடலை.   : 100 கிராம்.

வெங்காயம்.       : 2
தக்காளி.         : 2
பச்சை மிளகாய்.  :2
இஞ்சி பூண்டு விழுது.  : 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்.    : 1 டீஸ்பூன்

கொங்கு கிராமியத்து பூண்டு ஊறுகாய்


இந்த ஊறுகாயை எனது தாத்தி அடிக்கடி செய்து வைத்து விடுவார்கள்.

இந்த ஊறுகாயை தயிர் சாதத்துடன் சாப்பிடுவதற்கு அமிர்தத்தை உண்பது போல் தோன்றும்.

தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் 250 கிராம்
புளி 100 கிராம்
மரசெக்கு நல்லெண்ணெய் 70 மில்லி
வரமிளகாய் தூள் 3 தேக்கரண்டி
உப்புதூள் தேவையான அளவு
பெருங்காயம் 1 சிட்டிகை
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
வெதுவெதுப்பான தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

1. ஒரு வடசட்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உரித்த பூண்டு பற்களை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

2. பூண்டு பற்களை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

3. இப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் ஊறிய பின்னர் அதை கரைத்து நல்ல கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது நன்றாக ஆறிய பூண்டு பற்களில் பாதியை எடுத்து நன்றாக விழுதாக நைசாக அரைத்து கொள்ளவும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் மீதமுள்ள மரசெக்கு நல்லெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும். அதில் பெருங்காயத்தை சேர்த்துகோங்க , பின்பு அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

7. அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதையும் , வறுத்து வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் வரமிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.  இந்த கலவையை 15 நிமிடங்கள் வரை சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.

9. பிறகு அடுப்பை அணைத்து விட்டு பூண்டு ஊறுகாயை நன்றாக ஆற வைத்து. பின்பு அதை ஈரமில்லாத, காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்து கொள்ளவும்.

பச்சை பட்டாணி மசாலா

தேவையான ப்பொருட்கள்.    :

வேகவைத்த 
பச்சை பட்டாணி.    : 250 கிராம் கிராம்
வெங்காயம்.      : 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி.     : 1 (பொடியாக நறுக்கவும்)
கடுகு.      : 1 தேக்கரண்டியளவு
உளுந்து.   :1 தேக்கரண்டியளவு
மஞ்சள் தூள்.    :1/2 தேக்கரண்டியளவு
மிளகாய்த்தூள். : 1 டீஸ்பூன்
பூண்டு.    : 3 பல்(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை.  : சிறிது
கொத்தமல்லி.    : சிறிது

செய்முறை.    :
1.ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு பூண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

3.பிறகு வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

4.மஞ்சள்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

5.கெட்டிபதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

செவ்வாய், 19 நவம்பர், 2019

கிராமத்து கோழிக் குழம்பு

சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம். இப்போது அதில் பாரம்பரிய கிராமத்து முறையில் செய்வது எப்படி என்பதைத் தான் படிக்கப் போகிறோம். இந்த குழம்பின் ஸ்பெஷல் சிக்கனை நன்கு ஊற வைத்து சமைப்பது தான். 

மேலும் இதில் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். ஓகே இப்போது அந்த சிக்கன் குழம்பை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ளலாமா..




தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்

திங்கள், 21 மே, 2018

பலாக்கொட்டை பொரியல்


வேகவைத்து நறுக்கிய பலாக்கொட்டை - 20
வேகவைத்த கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

ஞாயிறு, 20 மே, 2018

வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ் செய்யலாமா?



தேவையான பொருட்கள்:
வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு - 2 அல்லது 3
சமையல் எண்ணெய் - பொறித்தெடுக்கத் தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
மிளகாய்த்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை- 1 கைப்பிடி

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு



தேவையான பொருட்கள்:

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தேங்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி வர மிளகாய் – 5
ஜாதிக்காய் – 1
கசகசா – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ்பூன்

கொள்ளு பருப்பு வடை


முளைகட்டிய கொள்ளு பருப்பு - 1 கப்,
வெங்காயம் - 4,
பச்சைமிளகாய் - 2, உப்பு,
எண்ணெய்-தேவைக்கு,
பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

கொள்ளு பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

சுவையான காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு...!

                                      


தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர்
பச்சைப் பட்டாணி - ஒரு கப்,
தக்காளி - 1,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய்,
தேங்காய் துண்டுகள் - தலா 2,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
தனியாத்தூள்,

மாங்காய் இனிப்பு பச்சடி

மாங்காய் - 1,
துருவிய வெல்லம் - 1/2 கப்,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
தாளிக்க...
கடுகு, எண்ணெய், உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?

மாங்காயை தோல் சீவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் மாங்காய், 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் வெல்லத் துருவல் போட்டு 2 கொதி விடவும். பின்பு தேங்காய்த்துருவல் சேர்த்து, மற்றொரு கடாயில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை தாளித்து மாங்காய் கலவையில் கொட்டி கலந்து இறக்கவும்.

நாக்கில் எச்சி வடிய வைக்கும் கொங்கு பாய் வீட்டு நாட்டுக்கோழி பிரியாணி..



செய்முறை:

1. இப்பொழுது அடுப்புல கெனமான அகன்ற பிரஷர் குக்கரை வைத்து அதில் நாட்டு பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக சூடானதும் அதில் பிரிஞ்சி இலை , மராட்டிய மொக்கு , அண்ணாச்சி மொக்கு , பட்டை , கிராம்பு , காஜ்சுபத்திரி , ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே வதக்க வேண்டும்.

2. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா



தேவையான பொருட்கள்:

மட்டன் – 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது)
வெங்காயம் – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/4 கப்
க்ரீம் – 1/4 கப்
கோவா – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சுண்ட காய்ச்சிய பால் – 1/4 கப்
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

சனி, 19 மே, 2018

விருதுநகர் ஸ்பெஷல்… சுடச்சுட கரண்டி ஆம்லெட்!!!


ஆம்லெட்டை பல வெரைட்டிகளில் தயார் செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை தரும் அதிலொன்று தான் கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி 

ஆம்லெட் ஜோரான டிஷ்.

சிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கும். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட் டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். இப்படி முட்டையை வைத்து 100 மெனுவை கொடுக்கலாம்.

சுவையான இறால் 65



தேவையான பொருட்கள்:

இறால் – 1/2 கிலோ
அரிசி மாவு – 2 ஸ்பூன்
கான்ப்ளார் – 1 ஸ்பூன்
மைதா – 1 ஸ்பூன்
முட்டை – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செட்டிநாடு உப்பு கறி

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 20 (நறுக்கியது)
பூண்டு – 20 பற்கள் (தட்டிக் கொள்ளவும்)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
குண்டு வரமிளகாய் – 10
தக்காளி – 1 (நறுக்கியது)
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

வெள்ளி, 18 மே, 2018

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சுவையான கம்மங்கூழ் ரெசிபி!


வாட்டும் வெயிலிலிருந்து பாதுகாத்து, உடலுக்கு குளிர்ச்சையை ஏற்படுத்தும் சுவையான கம்மங்கூழ் நம் வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.


கம்பு - கால் கிலோ, மோர் - அரை லிட்டர், உப்பு - தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 20, தண்ணீர் - தேவையான அளவு.

வியாழன், 17 மே, 2018

Food டெக்கரேஷன் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

காய்ச்சல் வந்தால் கஞ்சியும் துவையலும், ஜலதோஷத்துக்கு மிளகு ரசம், வயிற்று வலிக்கு ஓமம் என உணவில் மருத்துவத்தை ஒளித்து வைத்திருந்தது நம் பாரம்பரியம். கூடவே, எந்த உணவை எதனுடன் சேர்க்க கூடாது என்றும் சொல்லித் தந்தனர். ஆனால், இன்று  ‘ஃபுட் காம்பினேஷன்’, ‘ஃபுட் டெக்கரேஷன்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவைக்கூட, பல நிறங்களைச் சேர்த்து, ஆரோக்கியமற்றதாக்குகிறோம்.

நம்முடைய உணவு, சுவை (ரச), தன்மை (குண), திறன் (வீரியம்), செரிமானம் (விபாக) மற்றும் செயல்பாடு (பிரபாவம்) ஆகிய குணங்களைக்கொண்டது. இத்தனை குணங்களும் சரியான அளவில் இருந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதனால்தான், எந்தெந்தக் காலத்தில் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று