எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 20 மே, 2018

முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா



தேவையான பொருட்கள்:

மட்டன் – 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது)
வெங்காயம் – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/4 கப்
க்ரீம் – 1/4 கப்
கோவா – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சுண்ட காய்ச்சிய பால் – 1/4 கப்
ஜாதிக்காய் பொடி – 1 சிட்டிகை

ஜாதிபத்திரி பவுடர் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் சேர்த்து 5-6 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.அடுத்து அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்பு தயிரை நன்கு அடித்து அத்துடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, க்ரீம், கோவா மற்றும் சுண்ட வைத்த பாலை ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20-30 நிமிடம் மட்டனை நன்கு வேக வைக்க வேண்டும்.மட்டனானது நன்கு வெந்ததும்,அதில் ஜாதிக்காய் பொடி மற்றும் ஜாதிபத்திரி பவுடர் தூவி கிளறி இறக்கினால்,முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக