வாஸ்து
வீடுகட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் .முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவடையக்கூடாது . அது போல முன் பாகம் விரிந்து பின் பாகம் குறுகி இருக்ககூடாது .
வீட்டிற்கு 4 பக்கமும் இடம் விடு இருக்க வேண்டும். வடக்கு வட கிழக்குப்பகுதியில் இடம் அதிகமாக விட வேண்டும் .
தெற்கு,தென்மேற்கு பகுதியில் காலி இடம் இருக்க கூடாது .கிணறு போர்வெல் வடகிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும் .
சமையல் அறை தென் கிழக்கு பகுதியில் நலம் முடியாத பட்சத்தில் வட மேற்குப் பகுதியில் ( திசையில் )சமையல் அறை அமைக்கலாம் .
வீட்டின் பால்கனி வடக்கு கிழக்குப்பகுதியில் அமைப்பது உத்தமம் முடியாத பட்சத்தில் வடகிழக்கு திசை அமைக்கலாம் .வட கிழக்கு பகுதிகளில் கதவுகள் நிறைய வைப்பது.வென்டலேட்டர் குறைவாக உத்தமம்
.
மேற்கு திசையில் ஜன்னல்,வென்டிலேட்டர் குறைவாக வைப்பது நன்மை தரும்.தெற்கு,மேற்குபகுதியில் அகலமாக அமைப்பது உத்தமபலனை
உண்டாக்கும்
வடக்கு , வட கிழக்கு திசையில் கதவுள்ள வீடுகள் அமோகமாகஇருப்பதை பார்க்கலாம் .மேற்கு திசையில் படுக்கை அறை அமைக்கலாம் .
குளிக்கும் அறை வடக்கு திசையிலோ, தென்கிழக்கு ( அ ) வட மேற்கு திசையிலோஅமைப்பது கூட உத்தம பலனை ஏற்படுத்தும் .
வடமேற்கு வாயு மூலை அறை அமைக்கலாம்.அதை படுக்கைஅறையாகவும் பயன்படுத்தலாம்.பொருட்கள் வைத்து பூட்டும் செயல்படுத்தவும் .
பூஜை அறையை வடகிழக்கில் அமைக்க வேண்டும் . கிழக்கு பார்த்து சாமி விக்ரங்களை பூஜிக்க வேண்டும் .
வீட்டிற்கு தண்ணீர்த்தொட்டி தெற்கு , தென்மேற்குதிசையில் உத்தம பலன் கொடுக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக