மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் வாக்கு. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்கத் தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி அமைவார்கள்.
ஒருவருக்கு ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் கட்டம் கட்டாமலேயே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம். அதாவது, ஏழாம் இடத்தில் சுபர் இருந்தால். ஆண்கள் ஜாதகத்தில் மனைவியால் யோகம் ஏற்பட ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
• சந்திரன் 7-ல் பலமாக அமைந்தால் அழகான மனைவி அமைவார். இவர்கள் எப்போதும் மனைவியிடம் பாசமாக இருப்பர். அவ்வளவு ஏன் இவர்களுக்கு மனைவி சொல்லும் சொல் தான் மந்திரம்.
• சந்திரன், ஆட்சி, உச்சம் பெற்றாலும் மனைவியின் மூலம் அதிர்ஷ்டம் கொட்டுமாம்.
• சந்திரன் 10-ல் சுபருடன் இருப்பதும் மனைவியால் யோகம் ஏற்படும்.
• சந்திரன், சூரியன் 7-க்கு 7-ஆக அமைந்துவிட்டால் இவர்களைக் கையில்
பிடிக்கமுடியாதாம். இவர்களுக்கு அமையும் மனைவி, நல்ல குணம், ஒழுக்கம் மட்டுமில்லை வசதியாகவும் இருப்பார்களாம்.
• சந்திரன், குரு இணைப்பு, சம்பந்தம் திருமண வாழ்வு சிறப்படையும். அன்பான, அழகான மனைவி அமையும் யோகம் இந்த ஜாதககாரர்களுக்கு அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக