எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 18 மே, 2018

குட்டியோண்டு சாப்பாட்டுக்கடைகள்

பவன் ஹோட்டல்கள் வெறுத்துப்போய் , பல காலமாக நான் ஏதேனும் குட்டியூண்டு ஆயா ஹோட்டல் , தாத்தா ஹோட்டல்களைத்தான் தேடித்தேடி சாப்பிட்டு வருகிறேன்.
சுகாதாரம் படு மோசமாக இருக்கும். அடுப்பை எட்டிப்பார்த்தால் மயக்கம் வந்து விடும். அந்த ஆயாவோ , தாத்தாவோ ரெண்டு விரலை டம்ப்ளருக்குள் விட்டு தண்ணீர் கொண்டு வந்து வைக்கும் அழகைக் காண வயிற்றுக்குள் எல்லாம் கண்கள் விழிக்கும்.
இந்த சிக்கல்கள் எல்லாம் இருந்தாலும் சுவை இருக்கும்.ஆயா வோடு பேச்சு கொடுத்தால் செம சுவாரசியமாக இருக்கும். வயிற்றுக்கு ஒன்றும் செய்ததில்லை. ஐயா மார்களே , எனக்கு வயிற்றுக்கு ஒன்றும் செய்ததில்லை. இதைப்படித்து விட்டு , நீங்கள் குடும்பத்தோடு சென்று ஏதேனும் ஆயா கடையில் சாப்பிட்டு ஐசியூ வில் அட்மிட் ஆனால் நான்
பொறுப்பல்ல !
இப்போது ஒரு ஃபேஷன் கிளம்பியுள்ளது.
50 சதுர அடியில் அழுக்காக இருக்கும் குட்டி தெருக்கடை கூட தனக்கென ஒரு வரலாறு உருவாக்கிக்கொண்டது.
3 தலைமுறையா நடத்தறோம், முண்டாசு கடை , பேபி கடைன்னா தெரியும். கொண்டைக்கிழவி கடை , கோவண தாத்தா கடை , கூன் பாட்டி கடை என்று சரித்திரம் சொல்கிறார்கள்.
டேரக்டர் சுந்தர் ராஜன் வந்தா , காரை நிறுத்திட்டு எங்க ஜட்டி தாத்தா கடையிலதான் இட்லி சாப்புடுவார் ....
பாரதிராஜா , இங்கேர்ந்துதான் பிரியாணி வாங்குவார் என்று டெம்போ ஏத்துகிறார்கள்.
எது எப்படியோ , சின்ன சின்ன குட்டி கடைகளும் பிராண்டிங்க் தேவை என்பதை உணர்ந்து விட்டார்கள். அந்த பிராண்டிங்கையும் லோக்கல் டச்சோடு செய்வது ரசிக்கத் தக்கதாக உள்ளது.
சொல்ல முடியாது எதிர் காலத்தில் ....
மொலை அக்கா கடை , கொட்டை தாத்தா கடை , இடுப்பு சுந்தரி கடை என எகிடு தகிடாக கிளம்பலாம். டிரிப் அட்வைசரில் படித்து விட்டு நம் வீட்டு பக்கத்து தெருவில் இருக்கும் கடைகளை அறிந்து கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட கொஞ்சம் "கிக்" ஆக சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக