எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 11 மே, 2018

இருளாயி-சிறுகதை


இருளாயி இன்னைக்கும் பள்ளிக்கூடம் வரவில்லை. குறிப்பாய் தேடும் அளவிற்கு அவளொன்றும் கெட்டிக்காரியோ, மற்ற பிள்ளைகளைப் போல படிப்பில் பஸ்ட் ரேங் எடுப்பவளோ அல்ல

பக்கத்து கிராமத்திலிருந்து ,சரிவர எண்ணைய் தேய்க்காமல் அவசர அவசரமாய் பின்னப்பட்ட தலையுடன் அரசு கொடுக்கும் யூனிபாமை சரியா துவைக்காமல்  அருவருப்பாய் போட்டு வருபவள்தான்

அவளது தோற்றத்தினால் ஏற்பட்ட  அவமதிப்பு கடந்த மூன்று வாரங்களாய் நேரம் பிந்தி அவள் பள்ளிக்கு வந்ததால் இன்னும் வலுவடைந்திருந்தது.ஒவ்வொரு நாளும் வகுப்பாசிரியரால் முட்டி போட வைத்ததால் இன்னும் பிரபல்யமடைந்திருந்தாள் என்றும் சொல்லலாம்.அதனால் தான் அவளை தேடினோமோ என்னவோ தெரியவில்லை.

இன்றுடன் ஐந்தாவது நாளாய் பள்ளிக்கு வரவில்லை.தொடர்ந்து ருசித்த தண்டனைகளின் அவமானங்கள் அவளை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கலாம் என நினைத்தோம்.

திங்கட்கிழமை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்
நேரத்துடனே பள்ளிக்குவந்து வகுப்பறையில் உட்கார்ந்திருந்தாள்
கடந்த ஒரு வார காலமாய் பள்ளிக்கு வராததற்காக ஒரு பாடவேளை வெளியே  நிறுத்தாமல் நேரகாலத்துடன் வந்ததால் ஆசிரியரால் உற்சாகமளிக்கப்பட்டு பாடத்தில் இணைந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்ட அந்த நொடியில், " சார் கொஞ்சம் பேச வேண்டுமென அனுமதி கேட்டாள்.
அனுமதியளிக்கப்பட்டது.

"எனக்கு அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி என்று யாரும்  இல்லை.நானும் அம்மாவும் மட்டும் தான்.மூன்று வாரங்களுக்கு முன் அம்மா உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஒவ்வொரு நாள் காலையிலும் அவருக்கான காலை,மதிய சாப்பாடு ரெடிப்பன்னி  பள்ளிக்கூடம் வரும் வழியில் ஆஸ்பத்ரியில் அவரிடம் கொடுத்து விட்டு வருவேன்.கடந்த வாரம் உடல் நிலை மோசமடைந்து புதன் கிழமை இறந்து போய்விட்டார்.வியாழக்கிழமை அடக்கம் செய்தோம்.அதனால் கடந்த வாரம் பள்ளிக்குவர முடியவில்லை.இன்னைக்கு அவருக்கென சாப்பாடு செய்றதோ ஆஸ்பத்ரி போகும் தேவையோ  இல்ல,அதனால் நேர காலத்துடன் வர முடிந்தது. இனிமேல் லேட்டா வரமாட்டேன் என சொல்லிவிட்டு சாதாரணமாக
அவள்அமர்ந்தாள்,

வகுப்பறையில் சில விசும்பல் சத்தங்கள் மட்டும்  கேட்டப்படி அமைதி,,,,

இப்படித்தான் நாமும்.அவசரமாய் மற்றவரை எடைபோட்டு விடுகிறோம்.

*எப்போது திருமணம்?*
*இன்னும் பிள்ளையில்லையா?*
*இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறீங்களா?*
*கல்யாணத்திற்கு சொல்லியும் வரவில்லையா.?*
*சாவுக்கு சொல்லியும் வரலியா,,,?*
*போனே பண்றதில்ல,*
*இத்தனை வரசமா கவிதை எழுதுற இன்னுமா ஒரு நூல் வெளியிடல.*

இப்படி ஆயிரம் ஆயிரம் வினாக்கள்,விடைகள்,அங்கலாய்ப்புகள்.
ஆனால் ஒரு முறையேனும் மற்றவர் எதிர்கொள்ளும்  சந்தர்ப்ப சூழ்நிலையை புரிய முயற்சிப்பதே இல்லை.
தோற்றத்தைக் கொண்டு எடைபோட்டே பழக்கப்பட்ட  நாம் ஒரு முறையும், அவர்கள் நிலையிலிருந்து அவர்களை எடைபோடவும் முனையவில்லை.

மற்றவர் வாழும்  சூழ்நிலைகள் நாம் கடந்து வந்த அதே பாதைகளில் இல்லை.  நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை.
காணும் காட்சிகளை வைத்து மற்றவர்களை எடைப்போடாமல் அடுத்தவர்களுக்கும் நம்மைப்போல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் என்பதை உணர்ந்து

*எல்லோரையும் மனிதராக மதிக்க கற்றுக்கொள்வோம் கற்றல் நமக்கு கல்லறைவரை பல பாடங்களை சொல்லிதரும்.*
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக