மொபைலில் மேப்பைப் பார்த்தபடியே காரை ஓரம் கட்டினாள் நட்சத்திரா . வீட்டு நம்பரைப் சரி பார்த்து கேட்டைத் திறக்க முயற்சிக்கையில் , நட்சத்திரா , நட்சத்திரா என்று யாரோ கூப்பிடுவது கேட்டது.
கேட்டிலிருந்து கை எடுக்காமலேயே அக்கம் பக்கம் பார்த்தாள். ஸ்லீவ் லெஸ் டாப்ஸும் , ஜீன் நிக்கரும் அணிந்து கொண்டு முடி காற்றில் பறக்க , அதை ஒதுக்கி விட்ட படி , கை ஆட்டியபடி கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள் மெல்லிசை.
மெல்லிசையை போட்டோவில் பார்த்து இருக்கிறாள் நட்சத்திரா. வாட்ஸ் அப் “ப்ரொஃபைல் போட்டோ”வை விட அழகாகவும் இளமையாகவும் தெரிந்தாள் மெல்லிசை.
முதன் முதலில் சிகரன் ,மெல்லிசை நம்பரை கொடுத்த போது , அதை சேமித்துக்கொண்டு , அவளின் வாட்ஸ் அப் ப்ரொஃபைல் போட்டோவை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருந்தாள் நட்சத்திரா.
சிகரன் மெல்லிசையை முத்தமிடுவது ,
மெல்லிசை சிணுங்கிக்கொண்டு சிகரனை மடியில் போட்டுக்கொள்வது என கலைந்து கொண்டேயிருக்கும் நினைவுகளை கலைத்தே விடுவது அவ்வளவு சுலபமாக இல்லை நட்சத்திராவுக்கு.
ஷீ ஈஸ் அக்ரெஸிவ் இன் செக்ஸ் என்று சிகரன் ஒருமுறை சொல்லி இருந்தான். ஷாரன் ஸ்டோன் , செக்ஸ் அண்ட் தி சிட்டி கிம் கேட்ரல் போல மெல்லிசையை சிகரன் உடன் ஒரு போர்ன் ஷார்ட் ஃபிலிம் ஓட்டிப் பார்த்து இருந்தாள் நட்சத்திரா. டூ பீ ஹானஸ்ட் , ஐ ஏம் டோட்டலி சேட்டிஸ்ஃபைட் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் வித் இசை , ப்ராப்ளம் ஈஸ் சம்வேர் எல்ஸ் என்றும் சொல்லி இருந்தான் சிகரன். செக்ஸுக்காக உன்னிடம் வரலை நட்சத்திரா என்று சொல்ல வந்து இப்படி சொல்லி இருந்தான். எப்படி இருப்பினும் சிகரனின் ஸ்டேட்மெண்ட் எரோடிக் சிந்தனைகளையே உண்டு பண்ணியது நட்சத்திராவிடம்.
பதிலுக்கு மெல்லிசைக்கு கை அசைத்த நட்சத்திரா மெல்லிசை இருந்த கேட்டை நோக்கி சென்றாள்.
ரெண்டும் ஒரே வீடுதான். ட்வின் ஹவுஸ். அங்க அப்பாம்மா இருக்காங்க என்றபடி கேட்டைத் திறந்தாள் மெல்லிசை. மென்மையாக அணைத்துக்கொண்டாள் மெல்லிசை.
உள்ளே கூட்டிப்போனாள். நட்சத்திரா வருகிறாள் என்பது தெரிந்து ஃப்ரெஷாக போட்டு வைத்திருந்த மாதுளம் ஜூஸை எடுத்து வந்து கொடுத்தாள். பக்கத்திலேயே ஐஸ் க்யூப்ஸ்.ஐஸ் வேணும்னா போட்டுக்கோங்க , சுகர் தேவைப்படாது , ரா ஜூஸ் , கோல்ட் க்ரஷ் என்று சொன்னாள் மெல்லிசை.
கைப்பையில் பத்திரப்படுத்தி இருந்த சின்ன மலர் பொக்கேவை எடுத்து மெல்லிசையிடம் கொடுத்தாள் நட்சத்திரா.
தேங்க்யூ என்றபடி அதை வாங்கி ஒரு காலி கப்பில் சொருகி வைத்தாள். பிரம்மாண்டமான ப்ளோ அப்பில் சிகரனும் மெல்லிசையும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள். கேண்டிட் ஷாட். அற்புதமாக பதிவாகி இருந்தது.அந்த புகைப்படத்தில் இருந்து அறை முழுக்க தெறித்துக்கொண்டு இருந்தது உறைந்த காதல்.
மாதுளம் ஜூஸை எடுத்து குடித்தாள் நட்சத்திரா.
நட்சத்திராதான் ஆரம்பித்தாள். நான் வந்தது உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே ?
ச்சே ..ச்சே …அதெல்லாம் ஒண்ணுமில்லை. சாரி , நான் மறந்தே போயிட்டேன். கங்கிராஜுலேஷன்ஸ் நட்சத்திரா என்றாள் மெல்லிசை.
தேங்க் யூ , தயக்கமாக சொல்லிய நட்சத்திரா , நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்றாள்.
ஓஹ் …தேங்க் யூ , தேங்க்யூ , யூ ஆர் ஆல்சோ சோ க்யூட் என்றாள் மெல்லிசை.
“அப்புறம் , நீங்க டிவேர்ஸ் பேப்பர்ஸ் ஃபைல் பண்ணதுக்கு அப்புறம்தான் , எனக்கு சிகரனே இண்ட்ரடியூஸ் ஆனார்”
“எனக்கே தெரியும் நட்சத்திரா , கூல். நீங்க சங்கடப்பட வேணாம். எங்க டிவேர்ஸுக்கு நாங்க தான் காரணம். சிகரன் லைஃப்ல டிவேர்ஸ் அப்ளை பண்றதுக்கு முன்னால யாரும் இல்லைன்னு எனக்கே தெரியும்”
“ஓஹ் , ஓக்கே , எனக்கு சின்ன கில்டியா இருந்திச்சி, அதான் “
“இல்ல இல்ல , எனக்கு நல்லா தெரியும். சும்மா சில பேர் கூட ஃப்ளிர்ட் பண்ணுவாரு , பட் நோ ரிலேஷன்ஷிப் வித் எனி ஒன்”
“ஃபிளிர்ட் பண்ணுவாரா ? நிறைய பேர் கூடவா “
“ ஓஹ் ..கமான் , நான் ஏதோ ஃப்ளோல சொல்லிட்டேன். ஃபர்கட் இட். அவர் என்ன சொல்றாரோ , அதை மட்டும் நீங்க எடுத்துக்கிறதுதான் நல்லது”
சொல்லி விட்டு ஆர்டிஃபீஷியல் புன்னகை பூத்தாள் மெல்லிசை.
“ம்ம்…ஓக்கே , ஆரம்பத்துல இல்ல , இப்ப கொஞ்ச நாளா , சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுறாரு, அதான் பயமா இருக்கு”
“ ஓப்பனா சொல்லிடறேன் நட்சத்திரா , அவருக்கு கோபப்படுவது இயல்பு. அடிக்கடி கோபப்படுவாரு. நெஞ்சில பழுக்கக் காச்சின ராடை சொருவுற மாதிரி திட்டுவாரு. அதுக்கு யாரும் வருத்தப் படக்கூடாதுன்னும் நினைப்பாரு. அதை அவரால மாத்திக்கவே முடியாது. அடிக்க மாட்டாரு , ஆனா வெர்பல் வயலன்ஸ் ஜாஸ்தி. ஆரம்பத்துல உலக ஜெண்டில் மேனா நடந்துப்பாரு. அப்புறம்தான் இந்த கோபம் தெரிய வரும். ஆனா நிஜத்தில் நல்லவரு. கெட்டது ஏதும் பண்ண மாட்டாரு, கெட்டது நினைக்க மாட்டாரு. ஆனா கோபம் எப்ப , எதுக்கு வரும்னே தெரியாது. அவர் மேல அதீத அன்பு வச்சி , அவர் கோபத்தை கண்டுக்காம இருக்கற மாதிரி மைண்ட் செட் இருந்தா , நல்ல லவ்வர் , நல்ல புருஷன். நம்மளோட சுரணை உணர்ச்சியை கொஞ்சம் குறைச்சிக்கணும். எனக்கு அது முடியலை. அது மட்டும் தான் எங்க பிரிவுக்கு காரணம்னு நினைக்கிறேன். நானும் கத்துவேன், அது சண்டையை எங்கயோ கொண்டு போய் விட்டுடும். ரெண்டு பேருக்கும் மன உளைச்சலா ஆயிடும். பித்து பிடிச்ச மாதிரி இருப்போம்.
நார்மல் கப்புள்ஸா இருந்தாலும் பராவாயில்லை. செம ரொமாண்டிக் , ஈருடல் ஓருயிர்னு பழகிட்டு , இப்பிடி அடிக்கடி சண்டை வந்து பிரிஞ்சி இருந்தா , மெண்டலா ரொம்ப டிஸ்டர்பன்ஸ் ஆயிட்டோம். பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடும்.ரெண்டு பேருக்கும் ஈகோ. யாரும் விட்டு குடுக்க மாட்டோம். ஒரு கட்டிப்பிடித்தலில் முடியும் விஷயம் தான். ஆனா அதுக்கு ஆகும் ஒரு வாரம். அது வரைக்கும் செம பிரஷர்ல இருப்போம். புரியிதா ? உங்களால விட்டுக்கொடுத்து போக முடியும்னா , சிகரன் செம ஜோடி உங்களுக்கு”
சொல்லிவிட்டு , தலைமுடியை ஒதுக்கிக்கொள்வது போல , இயல்பாக முயன்றாள் மெல்லிசை.
விட்டுக் குடுப்பது ரெண்டு பக்கமும் இருக்கணும் இல்லையா என்றாள் நட்சத்திரா.
சிரித்த மெல்லிசை , அதுல ஈக்குவேஷன் எல்லாம் இல்லீங்க. உண்மையில் விட்டுக்கொடுத்தல் என்பது ஒரு பக்கம் மட்டும் தான் இருக்கு எல்லா இடத்திலும். எல்லாத்தையும் தாண்டிய அதீத காதல் ஒருத்தர் மேல இருந்தா மட்டும் தான் அது முடியும் என்றாள் மெல்லிசை.
கரக்ட்தான் என்ற இழுத்த நட்சத்திரா , எனக்கும் கொஞ்சம் தயக்கமா இருக்கு , பயமாவும் இருக்கு. அதான் உங்களைப் பாத்து பர்மிஷனும் வாங்கிட்டு , அப்படியே அட்வைஸும் கேட்டுட்டு போலாம்னு வந்தேன். இப்ப வேண்டாம்னு தான் தோணுது.
ஓஹ் சாரி , நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா ? என்று மெல்லிசை லேசாக பதற
இல்ல இல்ல , யூ ஆர் ஹானஸ்ட் …..ஒண்ணு கேக்கலாமா ?என்றாள் நட்சத்திரா.
ம்ம்.. ப்ளீஸ் ..என்று மெல்லிசை புன்னகை புரிய ,
நீங்க இன்னும் சிகரனை லவ் பண்றீங்கதானே ? என்று கேட்டாள் நட்சத்திரா.
மெல்லிசை புருவத்தை சுருக்க …
லவ் யூ சோ மச் இசை. மிஸ் யூ டூ என்று சிகரன் அனுப்பி இருந்த வாட்ஸப் மெசேஜ் , மெல்லிசையின் மொபைலில் நோட்டிஃபிகேஷனில் ஒளிர ஆரம்பித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக