எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 19 ஏப்ரல், 2018

இனி தியேட்டரில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 150: விஷால்

இனி தியேட்டரில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 150 ரூபாய் என்றும் அதற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது: 
நாளை முதல் (ஏப்ரல் 20) புது படங்கள் ரிலீஸ் ஆகும். இது வரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகளும் நாளை முதல் தொடங்கும். 

திரையுலகதத்தினரின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு முதலாவதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்க்குரி திரைப்படம் வெளிவரவு
ள்ளது. 


இனி வரும் ஜீன் மாதம் முதல் திரைத்துறையை கணினிமயமாக்கப்படவுள்ளோம். டிக்கெட் கட்டணம் செலுத்துவதற்காக தயாரிப்பாளர் சங்கமே, பிரத்யேக இணையதளம் தொடங்க உள்ளது. ரசிகர்கள் அந்த இணையதளம் மூலம் பணம் செலுத்தி தியேட்டரில் படம் பார்க்கலாம். அதிகபட்ச டிக்கெட் கட்டணமாக 150 ரூபாய் வரையறுக்ப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக எங்கும் டிக்கெட் விற்கப்டாது.

ஒரு வேளை 150 ரூபாய்க்கு அதிகமாக டிக்கெட்டுக்களை விற்றால், அவற்றை தடுக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பறக்கும் படைகள் அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக