எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 26 பிப்ரவரி, 2015

நின்று கொண்டு வேலை பார்க்கும் அமைப்பு யாருக்கு ?

லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது.
சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள்.
சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக