விஷால்-லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். ராஜ்கிரண், மலையாள நடிகர் லால் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது இதே கூட்டணி மீண்டும் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இவர்கள் இணையும் புதிய படம் மே 1-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. லிங்குசாமி ‘அஞ்சான்’ படம் தோல்விக்குப் பிறகு நீண்ட நாட்களாக புதிய படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னும் கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், ராஜ் கிரண் மட்டும் விஷாலுக்கு அப்பாவாக நடிக்கவிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
விஷால் தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக