எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 பிப்ரவரி, 2015

சுக்கிரன் ஒருபார்வை ஜோதிடக்குறிப்பு




ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனுக்கு 4ம் இடத்தோனும் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அல்லது ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டாலும் ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் ஏற்ப்படும். ஜாதகர் ஆன்மீகத்தில், ஞானமர்கத்தில், சாதனை செய்ய வேண்டும் என்று நினைப்பர். சித்த புருஷர்களாக இருப்பர்.
 
சுக்கிரன் லக்கினத்திற்கு 2ம் இடத்திலாவது, 11 ம் இடத்திலாவது இருப்பது சிறப்பானதாகும். வீடு, வாகன வசதிகளை ஏற்ப்படுத்தும்.       சுக்கிரன் 4ம் இடத்திலோ அல்லது 4ம் இடத்துக் காரனுடன் சேர்ந்து வலுத்துக் காணப்பட்டாலோ வீடு, வாகன யோகம், நல்ல புகழ் ஏற்படும்.
 
சுக்கிரனுடன் 2ம் இடத்ததிபதி மற்றும் 7ம் இடத்ததிபதி சம்பந்தம் ஏற்பட்டு வலுத்துக்காணப்பட்டால் நல்ல, குணமான, தீர்க்க ஆயுளுடன் கூடிய மனைவி வாய்ப்பாள்.

சுக்கிரன் 12ம் இடத்துடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் நல்ல சயன சுகம் ஏற்படும்.
 
சுக்கிரனுக்கு 10ம் இடத்துடன் அல்லது 10க்கதிபதியுடன் சம்பந்தம் ஏற்பட்டு வலுத்தால் கலைத்துறையின் மூலம் ஜீவனம் ஏற்படும்.

லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல புகழ், நல்ல மனைவி, வீடு, வாகனம் எல்லாம் ஏற்படும்.
 
சுக்கிரன் 5ல் இருந்தால் பாக்கியசாலி, மனைவி சொல்லைத்தட்டாதவர்.
சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் தொழில்த்துறை படிப்பு ஏற்படும், பற்றற்ற வாழ்வை விரும்புபவர்களாக இருப்பர்.
 
 சந்திரனுக்கு 4 அல்லது 10ல் சுக்கிரன் இருந்தால் நிலம், வீடு, வாகனம் அமையும். 

 சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை எழுத்தார்வம் ஏற்படும், எழுத்தாளர்களாக இருப்பர்.

சுக்கிரன் செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் இருந்தால் நிலம், வாகனம், வீடு அமையும்.

சுக்கிரன் 7ல் தனித்து இருந்தால் திருமணம் தடை. ஆனால் சுக்கிரனும் அவர் நின்ற வீட்டுக்குடையவரும் சஷ்டாஷ்டகம் ஆனால் திருமணம் நடைபெறும்.

சுக்கிரன் சந்திரனுடன் இனைந்து எந்த‌ இடத்தில் நின்றாலும் திருமணம் தடை. ஆனால் அதுவே  கடகம், ரிஷ‌பம், துலாத்தில் இருந்தாலும், 6, 8, 12ல் இருந்தாலும், அம்சத்தில் இருவரும் சஷ்டாஷ்டகம் பெற்றால் திருமணம் நடைபெறும்.

துலா லக்கினத்திற்க்கு சுக்கிரன் ஆட்சி பெற்ற சனியுடன் கூடி 4ம் இடத்தில் இருந்தால் பொது ஜனத்தொடர்பு ஏற்படும். புகழ் பெறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக