எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

அரசியலில் ஈடுபட்டு வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் கண்டிப்பாக பலம் பெற்று இருக்கவேண்டும்.

பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் அல்லது தர்ம கர்மாதிபதி யோகம் அல்லது பஞ்ச மகா புருஷ யோகம் அல்லது நரேந்திர ராஜ யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.

செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.

1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.

மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.

6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக