கிரக சேர்க்கை
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும் பகைக் கிரகங்கள் புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet)
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும் பகைக் கிரகங்கள் புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet)
2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக் கிரகங்கள் ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக் கிரகங்கள்
3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக் கிரகங்கள் சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள்
4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக் கிரகங்கள் சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும் சமக் கிரகங்கள்
5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம் மூன்றும் நட்புக் கிரகங்கள். புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள் சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்
6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்த நான்கும் நட்புக் கிரகங்கள் சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள் செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள்
7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது இந்நான்கும் நட்புக் கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் குரு மட்டும் சமக் கிரகம்
8. இராகுவுக்கும், கேதுவுக்கும்: சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் பகைக் கிரகங்கள் புதனும், குருவும் சமக் கிரகங்கள்
சுபக் கிரகங்களும், அசுபக் கிரகங்களும்! Malefics andbenefics: சில கிரகங்களை இயற்கையான சுபக்கிரகம் என்பார்கள்: அவைகள் முறையே சந்திரன், சுக்கிரன் & குரு சில கிரகங்களை இயற்கையான அசுபக்கிரகம் என்பார்கள்: அவைகள் முறையே சனி, ராகு, கேது & செவ்வாய் சூரியன் 50% + 50% (Mixed) புதன் நடுநிலை. சேர்க்கைகளை வைத்து அதன் தன்மை மாறும் புதன் சுபனோடு சேர்ந்தால் சுபன், அசுபனோடு சேர்ந்தால் அசுபன் ஒவ்வொரு லக்கினத்திற்கும் நன்மை தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்களைப் பட்டியல் அடிப்படை வலிமை உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.
1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்: நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம் (நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)
2. வலிமை: பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak) கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு.
அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:
1 சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்: பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்!
1 -A சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்: பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!
2 தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்: பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு!
2 -A தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்: பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்! சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும். உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள் கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்! கிரகங்களின் மதிப்பெண்கள்:
தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்:
உச்சம் - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை சம வீடுகள் - 50% வலிமை பகை வீடுகள் - 40% வலிமை நீச வீடுகள் - 10% வலிமை இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள். 40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில். ஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.
1. மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள் சந்திரனின் ஆதிக்கம்: ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருக்கும் ஜாதகனுக்குத்தான் நல்ல தாய் கிடைப்பாள். முழுமையான தாயன்பும்,அரவணைப்பும் அவனுக்குக் கிடைக்கும். குழந்தைப் பருவத்தில் இது முக்கியம்!
2 பத்து முதல் இருபது வயதுவரை புதனின் ஆதிக்கம்: புதன் நன்றாக இருக்கும் ஜாதகன்தான், முழுமையாகக் கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறுவான். அதற்கான அஸ்திவாரம் அமையப் பெறும் காலம் இது
3 இருபது முதல் முப்பது வயது வரை சுக்கிரனின் ஆதிக்கம் காதல் மற்றும் மெல்லிய உணர்வுகள் நிறைந்த காலம். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், அவள் அழகாகத் தோற்றமளிக்கும் காலம். எதிலும் அழகைக் காணும் காலம். காதல் மற்றும் திருமணத்திற்கு உரிய காலம். சுக்கிரன் நன்றாக அமையப்பெற்ற ஜாதகனுக்கு அது கூடி வரும். தேடி வரும்!
4 முப்பது முதல் நாற்பதுவயது வரை செவ்வாயின் ஆதிக்கம்: முக்கியமான காலம். மனிதன் தன் திறமைகளை, ஆற்றல்களை வெளிப்படுத்தி, வேலை அல்லது தொழிலில் உயர்ச்சி பெறும் காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் செவ்வாய் வாழ்க்கையில் உயர்வதற்கு உதவி செய்வான்.
5 நாற்பது வயதுவரை சூரியனின் ஆதிக்கம்: பெயரும், புகழும் பெறுவதற்கு உரிய காலம். ஜாதகத்தில் நன்றாக இருக்கும் சூரியன் அவற்றைக் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து சேர்ப்பார். இதற்குப் பிறகுதான் - அதாவது 50 வயதிற்குப் பிறகுதான் மனிதன் பெட்டியைத் தூக்கும் காலம். என்ன பெட்டி என்று கேட்காதீர்கள். உணருகிறவர்கள் உணர்ந்து கொள்ளுங்கள். உணராதவர்களுக்குக் காலம் உணர்த்தட்டும்
6. 50 to 60 வயது வரை சனியின் ஆதிக்கம்: தன் கணக்கைக் கூட்டிக் கழித்து லாப நஷ்டங்களை, ஐந்தொகையை (balance sheetஐ) மனிதன் பார்க்கும் காலம். பிள்ளைகளின் கல்விக்கடன், மகளின் திருமணச் செலவு, மனைவின் நச்சரிப்பால் வாங்கிய வீட்டுக் கடன் (housing loan) வாகனக் கடன் (car loan) சிலருக்கு இதய அறுவை சிகிச்சை போன்ற அறுவைக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம். சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும், கவலையிலுமே கழியும்!
7. 60 to 70 5 வயது வரை ராகுவின் ஆதிக்கம்: ஏமாற்றங்கள், துரோகங்கள், ரோகங்கள் இருக்கும் காலம். தான் இதுவரை பாடுப்பட்ட மனைவி, மக்கள், உற்றார் உறவினர் என்று பலரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே, நமக்கு உரிய மதிப்பும், மரியாதையும் இல்லையே - பலரும் உதாசீனப்படுத்துகிறார்களே எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் என்று அலுப்புத் தட்டக்கூடியகாலம். அதோடு பல்விதமான உடல் உபாதைகள் (மூட்டு வலிகள் போன்றவை) நோய்கள் வந்து நட்புக் கொள்ளும் காலம். பலமான ஆறாம் வீடும், பலமான ராகுவும் அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பி விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்
8 70ற்குப் பிறகு கேதுவின் ஆதிக்கம்: மனிதன் ஞானம் பெறும் காலம். குரு , சுக்கிரன் , வளர்பிறை சந்திரன் , நல்ல சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் சுபக்கிரகங்கள் ஆவார் . சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது , தேய்பிறை சந்திரன் கெட்ட சேர்க்கையுடன் கூடிய புதன் இவர்கள் பாபகிரகங்கள். இது பொதுவான விதி. ஆனால் எந்த ஒரு பாபகிரகம் ஒரு குறிபிட்ட லக்னத்திற்கு ஆதிபத்தியம் மூலம் 5 மற்றும் 9 வீடுகளுக்கு அதிபதியானால் அவர்கள் சுபக்கிரகங்கள் போல் நன்மை செய்கின்றன.
கிரகங்கள் சேர்க்கை பலன்கள்
* லக்னத்திற்கு 4,7 ஆகிய கேந்திரங்களில் சுபக் கிரகங்கள் சேர்ந்து நிற்கப் பிறந்த ஜாதகன் பொன் பொருள் மற்றும் கோடி ரூபாய் சம்பாதிக்கும் திறம் பெற்று சிறப்புடன் வாழ்வான். பலவித வாகனம் பெற்று பெருமை அடைவான்.
* லக்னத்திற்கு 4ம் இடம் சர ராசியாக அமைய அதில் ஒரு கிரகம் நின்றால் அந்த ஜாதகன் அரசனுக்குரிய ஆடம்பர வாழ்க்கை பெற்று யோகவானாக விளங்குவான். பெரியவர்களின் தொடர்பு பெற்று அரசாங்கத்தால் விருது மற்றும் பொருள் பெறுவான். இனிய மனைவி அமைந்து சுக ஜீவனம் செய்வான்.
* செவ்வாய், சனி, ராகு இவர்கள் ஒரே வீட்டில் கூடி நின்றால் பெண்களால் தன லாபம் உண்டாகும். வீடு கட்டை சுகத்துடன் வாழ்வான். எனினும் தீய தசைகள் நடக்கும் போது இந்த சேர்க்கையினால் சிற்சில துன்பங்களும் உண்டாகும்.
* பத்தாம் இடத்தில் 3 கிரகங்கள் இருக்கப்பெற்ற ஜாதகன் உலகம் புகழும் சன்னியாசியாக விளங்குவான். இரண்டு கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகன் தபசியாகவும் ஞானியாகவும் யோகியாகவும் இருந்து மக்களுக்கு அருள் புரிவான்.
* 4ம் வீட்டிற்கு அதிபதியும் சந்திரனுக்கு நான்கிற்குடையோனும் எந்த ராசியில் கூடி நின்றாலும் மேலும் சுக்கிரன் பலம் பெற அந்த ஜாதகன் தேவி பராசக்தியாகிய துர்கையின் மீது பற்று கொண்டு பூஜை செய்து தேவி அனுக்கிரகம் பெறுவான். கொடியவர்களில் சூழ்ச்சிகள் இவனிடம் பலிக்காமல் இவன் வெற்றி கொள்வான்.
* ஒரு ராசியில் சுபக்கிரகத்துடன் 4 கோள்கள் நிற்க அதற்கு 4லில் இன்னொருவன் இருக்க அந்த ஜாதகன் தீர்க்க ஆயுளுடன் சுகமாக வாழ்வான். குதிரை, யானை பெற்ற அரசனைப் போல அனேகர் புகழ பொன் பொருள் பெற்று சிறப்பான்.
* 8க்குடையவன் 12க்குடையவன் செவ்வாய் ஆகிய மூவரும் எந்த இடத்தில் கூடி நின்றாலும் அந்த ஜாதகன் அன்னிய தேசம் செல்வான். அதே சமயத்தில் இவர்களை சந்திரன் பார்த்தால் சில காலம் வெளிநாட்டில் அதிக பணம் ஈட்டி பின்னர் சொந்த தேசத்திற்கு வந்து சுகமுடன் வாழ்வான்.
* சனி, செவ்வாய், ராகு இவர்கள் லக்னத்திற்கு இரண்டாம் இடத்தோனுடன் கூடி நின்றால் அந்த ஜாதகன் சிவ பூஜையில் பிரசித்தி பெற்றவனாவான். மேலும் ஐயனார், காளி, வீரபத்திரன் போன்ற தெய்வங்களை வணங்கி தேவதை அருள் பெற்று வசியம் செய்யும் வித்தையும் அறிந்தவனாவான்.
* குருவும் சனியும் ராகுவும் சரம் மற்றும் உபய ராசிகளில் நின்றால் அந்த ஜாதகன் சொந்த இருப்பிடத்தை விட்டு தேச சஞ்சாரம் செய்வான். அதே சமயத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தால் சொந்த ஊரிலேயே பலகாலம் வசிப்பான்.
* சிம்ம ராசியில் அசுர குருவான சுக்கிரனும் செவ்வாயும் கூடியிருந்தால் அந்த ஜாதகன் வித்தைகளில் தேர்ச்சி பெற்று சிற்ப சாஸ்திரத்தில் வல்லமையும் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடுபவனாகவும் இருந்து அதிக பொருள் சேர்ப்பான். அன்றியும் அவன் விதவைக்கு வாழ்வளிப்பவனாய் விளங்குவான்.
* குருவுடன் செவ்வாயும் சுக்கிரனும் சேர அந்த ஜாதகன் நிறைந்த தனங்கள் பெற்று அரசாங்க மரியாதையும் புகழும் அடைவான். செவ்வாயும் புதனும் இணைந்தால் அவன் செல்வச் செழிப்பு மிக்க பண்டிதனாக விளங்குவான். ஆனால் செவ்வாய் புதன் இவர்களுடன் சுக்கிரன் செர்ந்து எங்கு இருந்தாலும் அவனுக்கு அங்க குறைபாடு ஏற்படும்.
* குரு, சந்திரன், புதன் இவர்கள் சேர்ந்து எங்கு இருந்தாலும் நல்ல அழகும் ஆயுளும் பெற்று செல்வந்தனாகத் திகழ்வான். சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர் சேர துஷ்டனாகவும் காமியாகவும் விளங்குவான்.
* இரண்டாம் இடத்தில் விரய ஸ்தானதிபதி நின்றால் அந்த ஜாதகன் மாட மாளிகை ஆகிய வீடுகள் கட்டி சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதியாக குரு, சந்திரன், புதன், சுக்கிரன் இவர்கள் சுபஸ்தானங்களில் நிற்க பொன், பொருள் சேரும். இவர்கள் தசா, புக்தியில் நற்பலன்கள் தருவார்கள்.
* சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஓரிடத்தில் நிற்க அவன் தனவானாகவும் மனைவியிடம் அன்பு கொண்டவனாகவும் இருப்பான். சூரியனும் குருவும் சேர அரசாங்க செல்வாக்கு பெற்று ஐஸ்வர்யத்துடன் வாழ்வான். சூரியனும் சுக்கிரனும் சேர நல்ல மனைவி அமையப்பெற்று தாம்பத்தியம் அனுபவிப்பதில் சிறந்து விளங்குவான். சனியுடன் சுக்கிரன் கூடினால் கணவன் பேச்சை கேட்காத மனைவி வாய்ப்பாள்.
* சந்திரன், செவ்வாய், புதன், சூரியன், குரு ஆகியோர் சேர்ந்து இருந்தால் தீய பலன்களே உண்டாகும். அவன் பிறரையும் கெடுப்பான். மேலும் சூரியன், செவ்வாய், சனி, சுக்கிரன் ஒரே வீட்டில் கூடினாலும் ஜாதகன் வறுமையில் உழன்று பிச்சை எடுத்து உண்ணும் கதிக்கு ஆளாவான்.
* புதன், குரு இவர்களுடன் சந்திரன், சுக்கிரன் இவர்கள் பலம் பெற்று சேர்ந்து நிற்க அதிக செல்வமும் பூமியும் பொன்னும் பொருளும் பெற்று சுகமுடன் வாழ்வான். மேற்கண்ட கிரகங்களுடன் சனி சேர அங்க குறைவு ஏற்படும்.
* குரு, சுக்கிரன், சூரியன், புதன் இவர்கள் இணைந்து நின்றவன் அதிக திரவியங்கள் பெற்று சுக போகங்களை அனுபவிப்பான். குரு, சுக்கிரன், சூரியன், செவ்வாய் இவர்கள் சேர அவனும் செல்வாக்கு படைத்த தலைவனாகவும் தீர்க்க தரிசியாகவும் செல்வம் மிகுந்து வாழ்வான்.
* செவ்வாய்க்கு 4, 7 ஆகிய இடங்களில் சுக்கிரன் நின்றாலோ அல்லது சுக்கிரனுக்கு 5,7,11 ஆகியவற்றில் செவ்வாய் நின்றாலோ அந்த ஜாதகன் பூமியில் சிறந்து விளங்குவான். மேலும் லக்னாதிபதி கேந்திர, கோணத்தில் இருக்க வாகன சேர்க்கையும் சொந்தத் தொழில் மூலம் அனைத்து பாக்கியங்கள் அடைதலும் உண்டாகும். விளை நிலங்களும் சேரும். இதனை இவர்களின் தசா, புக்தி காலங்களில் கொடுப்பார்கள்.
* குரு, சனி, செவ்வாய், புதன் சேர்ந்து நிற்க சந்திரன், சுக்கிரன் இவர்கள் இணையப்பெற்ற ஜாதகன் புவியியல் சாஸ்திரங்கள் அறிந்தவனாக விளங்குவான்.
* சந்திரன், சுக்கிரன் ஒன்றுசேர குரு, புதன், செவ்வாய் ஒரிடத்தில் நிற்க அந்த ஜாதகன் பாக்கியசாலி ஆவான். அனேக திரவியமும் செல்வாக்கும் அடைவான். பலரை ஆதரித்து எல்லோராலும் புகழப்படுவான்.
* குரு, புதன், சனி, செவ்வாய், சந்திரன் ஆகியோர் ஒரே இடத்தில் நிற்கப் பிறந்தவன் துன்பங்களை அனுபவித்து கஷ்ட ஜீவனம் செய்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக