தினமும் உறங்க போகையில்
நீ ஒரு மிஸ்டு கால் பண்ணு ..
நானும் ஒரு மிஸ்டு கால் பண்றேன்.
மாசக்கடைசியில் பேசிக்குவோம்.
ஒவ்வொரு மாசமும் இப்படியே போகட்டும்
ஒவ்வொரு வருசமும் கூட.
செல் போனில் பேசாமல்
சேகரித்த பணத்தைக்கொண்டு
அடகு வைத்த உன் தாலிக்கொடிக்கு
வட்டி பணத்தை கட்டி விடலாம்.
முழுவதையும் மீட்ட பிறகு
முத்தத்தோடு தொடங்குவோம் பேச்சை
ஒவ்வொரு நாளும்
- இப்படிக்கு வெளிநாடு வாழ் தமிழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக