எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

வடிவேல் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்


ஒரு வெற்றி படத்திலும், 2 தோல்வி படங்களிலும் நடித்தபின் வடிவேல், மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தமிழ் பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேல், -இம்சை அரசன் 23-ம் புலிகேசி' என்ற படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார்.

இந்த படம் வெற்றி பெற்றதால், மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிப்பதை அவர் தவிர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பது என்ற முடிவுக்கு அவர் வந்தார். இதைத்தொடர்ந்து,-இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' என்ற படத்திலும் வடிவேல் கதாநாயகனாக நடித்தார். இந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை.

என்றாலும், சில வருட இடைவெளிக்குப்பின் வடிவேல், 'தெனாலிராமன்' என்ற படத்தில் மீண்டும் கதாநாயகன் ஆனார். -தெனாலிராமன்' படம், தோல்வி அடைந்தது. இந்த தோல்வி, வடிவேலுவை பாதித்தது. இதனால், சில மாதங்கள் சினிமாவை விட்டு அவர் ஒதுங்கியிருந்தார்.

புதிய படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தும், அவர் அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் வடிவேல், 'எலி' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இது, நகைச்சுவையான கதையம்சம் கொண்ட படம். 'தெனாலிராமன்' படத்தை இயக்கிய யுவராஜ் டைரக்டு செய்கிறார். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படம் வளர்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக