எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி
2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மீனம்: 2020

மீனம்:



மீன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு கூடுதல் நன்மைகளை தரும் வருடமாக இருக்கும்.

மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனி 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் பதினொன்றாமிடத்தில் சனி இருப்பது மீனத்திற்கு மேன்மைகளைத் தருகின்ற

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கும்பம்: 2020

கும்பம்:

கும்ப ராசிக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு எதிர்காலத்திற்கான மாற்றங்களை தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
கும்பத்திற்கு தற்போது ஏழரைச்சனி அமைப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் 24-ம்தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனி உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து விரையச்சனி எனும் நிலை பெறுகிறார்.

ஏழரைச்சனி நடக்கும்போது வேலை, தொழில் விஷயங்களில் சாதகமான பலன்கள் நடக்காது என்பது ஜோதிட விதி. ஆயினும் இது போன்ற நேரங்களில் பலன்கள் இரண்டு விதமாக சொல்லப்பட வேண்டும். உங்களில் முப்பது

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் மகரம்: 2020

மகரம்:




மகர ராசிக்கு இந்த வருடம் ஜென்மச் சனி ஆரம்பித்திருக்கும் நிலையில் 2020 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

உங்கள் ராசிக்கான பலன்களை இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லுவேன். அதாவது இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு ஜென்மச் சனி அமைப்பு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்றுக்கான நன்மைகளைச் செய்யும். எனவே இளைய பருவத்தினர் எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - தனுசு: 2020

தனுசு:


கடந்த ஐந்து வருடங்களாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் தனுசு ராசிக்காரர்கள் முடங்கிப் போயிருக்கிறீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் சங்கடங்களைத் தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தனுசு ராசிக்காரர்களில் மூலம் நட்சத்திரக்காரர்களின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், பூராடம் நட்சத்திரக்காரர்கள் இன்னும்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்: 2020

விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக கடந்த சில ஆண்டுகளாக, உங்களுடைய சிந்தனை, செயல்திறன் ஊக்கம் ஆகியவற்றை முடக்கிப் போட்டு உங்களை பாடாய்ப்படுத்திய ஏழரைச்சனி இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரி 24 முதல் முழுமையாக விலக இருப்பதால் 2020 நல்ல வருடமே.

கடந்த காலங்களில் பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய மனக் கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். விருச்சிகத்தின் கடந்த

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - துலாம்: 2020

துலாம்:



துலாம் ராசிக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். இந்த வருடம் இருக்கும் கிரக நிலைகள் உங்களுக்கு ஆனந்தத்தையும், லாபத்தையும் தரும் என்பதால் உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.

ஏறத்தாழ வருடம் முழுவதும் கேது மிகவும் நல்ல பலன்களை தரும்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி: 2020

கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2020-ம் வருடம் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் இருப்பதால் உங்களுடைய தொழில்துறை

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்: 2020


சிம்மம்:



சிம்ம ராசிக்காரர்களுக்கு 2020-ம் வருடம் நல்லபலன்களைத் தரும் வருடமாக இருக்கும். குறிப்பாக சென்ற வருடத்தை விட பொருளாதார மேன்மைகளும் நல்ல பணவரவும் நிலையான வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளும் இந்த வருடம் இருக்கும்.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் நடந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்லவிதமாக அமைந்துள்ள நிலையில், வருட ஆரம்பத்தில் ஜனவரி 24ம் தேதி நடக்க விருக்கும் சனிப்பெயர்ச்சியும் உங்களுக்கு மிகப் பெரிய

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- கடகம்: 2020

கடகம்:



கடக ராசிக்காரர்களுக்கு 2020ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம்ப நாளிலும், வருடம் முழுமையும் கிரக நிலைமைகள் நன்றாக இருப்பதால் 2020 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
ஒரு முக்கிய பலனாக வருட ஆரம்பத்தில் இளம் பருவத்தினருக்கு திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் இந்த ஆண்டு துவக்கத்திலேயே

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- மிதுனம்: 2020

மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2020 புத்தாண்டு நிதானமான பலன்கள் நடக்கும் ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின் நிறைவேறும் வருடம் இது.

இந்த வருடத்தின் கிரகநிலைகளை எடுத்துக் கொண்டால் சுபக்கிரகமான குரு வருடம் முழுவதும் ஏழாமிடத்தில் இருப்பது ராசியைப் பார்ப்பது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. இன்னுமொரு சிறப்பு அம்சமாக அவர் சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருக்கிறார் என்பதால் வருடம் முழுவதுமே குருவின் மூலமாக நல்ல பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- ரிஷபம்: 2020


ரிஷபம்:



ரிஷப ராசிக்காரர்களுக்கு 2020ம் வருடம் நல்லபலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த மூன்று வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான ரிஷபத்தினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் 24ம் தேதி உங்கள் ராசிக்கு

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்: 2020

-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

 மேஷம்:



மேஷ ராசிக்காரர்களுக்கு 2020 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த வருடம் கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத மேஷத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

வருட ஆரம்பமே ஒன்பதாமிடத்தில் குரு அமர்ந்து அமர்க்களமாக ஆரம்பிப்பதால் இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு. உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக