எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 மே, 2018

டி.ராஜேந்தர் ‘வீராசாமி’ படத்துக்குப்பின் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் ‘வீராசாமி’. அதன்பின் அவர் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்துவந்தார். கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சினிமா விழாக்களில் அவர் பேசும் பேச்சு பலரையும் ஈர்க்கும். 

இந்நிலையில் டி.ராஜேந்தர் மீண்டும் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். ‘வீராசாமி’ படத்தை இயக்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுதான் அவர் கடைசியாக இயக்கிய படம். அதன்பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் டி.ராஜேந்தர். 

வியாழன், 19 ஏப்ரல், 2018

நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலியின் அழகிய படங்கள்!

இனி தியேட்டரில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 150: விஷால்

இனி தியேட்டரில் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 150 ரூபாய் என்றும் அதற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது: 
நாளை முதல் (ஏப்ரல் 20) புது படங்கள் ரிலீஸ் ஆகும். இது வரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு பணிகளும் நாளை முதல் தொடங்கும். 

திரையுலகதத்தினரின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு முதலாவதாக, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்க்குரி திரைப்படம் வெளிவரவு

ஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் – திரிஷா

படங்களில் ஓய்வில்லாமல் நடிக்கும் திரிஷா வெளிநாடுகளுக்கும் அடிக்கடி சுற்றுப்பயணம் சென்று விடுகிறார். சுற்றுலா செல்வது அவருக்கு பிடித்த விஷயம். சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்று வந்தார். இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-


“சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு ஊருக்கோ அல்லது நாட்டுக்கோ கிளம்பி விடுவேன். நியூயார்க் எனக்கு விருப்பமான சுற்றுலா தளம். அங்கு நிறைய தடவைகள் போய் இருக்கிறேன். துபாய், லண்டன், நியூயார்க் ஆகியவை ஷாப்பிங் செய்ய சிறந்த இடங்கள்.
நான் நிறைய பொருட்களை வாங்கி

செவ்வாய், 3 ஏப்ரல், 2018

வடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி – ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh is the happiest I am in Vada Chennai


மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை தனுசும், வெற்றி மாறனும் இணைந்து தயாரித்தனர்.
இப்போது, மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இணைந்துள்ள ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது பற்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்…

“தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த போது, எதிர்காலத்தில் அவருடன் எப்படியாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்தது போல அது உடனே நடக்கவில்லை.

தனுசுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது. இப்போது, ‘வடசென்னை’ படம் மூலம் அது நனவாகி இருக்கிறது. நான் நடிக்கும் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு சமந்தா நடிப்பதாக இருந்தார்.

அஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி

Gobi, who shared things  about Ajith

மெட்ராஸ்’, ‘பைரவா’, ‘கபாலி’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மைம் கோபி. தன்னுடைய தனித்துவமான நடிப்பால், பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இவர் நடிகர் அஜித்துடன் நடித்ததில்லை. ஆனால், அவரைப் பற்றி பல விஷயங்களை கேள்விப்பட்டும், தெரிந்தும் வைத்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரிய கூடாது என்று சொல்லுவார்கள். அதுபோலதான் அஜித். அவர் செய்யும் நல்ல விஷயங்கள் பல பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அஜித் மிகவும் சிறந்த மனிதர். அவரைப்போல் ஒருவரை பார்ப்பது அரிது. தமிழ் நாட்டில் மட்டுமில்லை. மலேசிய மக்களுக்கு அஜித் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அங்குள்ள மக்களே என்னிடம் சொன்னார்கள்.

சென்னை மழை வெள்ளத்தின் போது, திருமண மண்டபம், வீடு, முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களை மக்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தார். இதுகூட பல பேருக்கு தெரியாது. நான் இதுவரை அஜித்துடன் நடிக்க வில்லை. ஆனால், விரைவில் அவருடன் நடிப்பேன்’ என்றார்.

சனி, 31 மார்ச், 2018

மீண்டும் இயக்குனர் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்


GV Prakash who joins the director Vijay again

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவரது நடிப்பில் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதனை பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ஏ.எல்.விஜய் இயக்கிய 7 படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஆனால், இந்த முறை கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். விரைவில் இப்படம் பற்றிய முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி

Yoga can be better if you do not wear clothes - Shilpa Shetty

இந்தி நடிகை ஷில்பாஷெட்டி தற்போது தொழில் அதிபராக இருக்கிறார். யோகா நிபுணராகவும் உள்ளார். 2 புத்தகங்களும் எழுதி இருக்கிறார்.


இவருடைய 2-வது புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ஷில்பாஷெட்டி, விழாவுக்கு வந்தவர்கள் முன்பு யோகா செய்து காட்டினார். அப்போது கூறிய அவர், “விழாவுக்கு நான் அணிந்து வந்திருக்கும் உடையில் யோகா செய்வது கஷ்டம்.

ஆடை அணிந்து யோகா செய்தால் கால் வழுக்கி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்” என்றார்.


அவருடைய இந்த பேச்சால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. “விழாக்களுக்கு செல்லும் போது அணியும் ஆடை இல்லாமல், யோகா செய்வதற்குரிய ஆடை அணிவதை தான், அவர் இந்த ஆடை இல்லா விட்டால் தன்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும் என்று குறிப்பிட்டார். தவறான எண்ணத்துடன் அவர் அப்படி சொல்லவில்லை” என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 30 மார்ச், 2018

திரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்

50 Movies to wait for the screen
பட அதிபர்கள் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 27 நாட்களாக போராட்டத்தை தொடர்கிறார்கள். இதனால் திரையுலகம் முடங்கி உள்ளது. புதிய படங்கள் இல்லாமல் தியேட்டர் அதிபர்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த பழைய படங்களையும் ஏற்கனவே திரையிட்டு நிறுத்திய விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால் உள்ளிட்டோர் படங்களையும் மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.
திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. சில தியேட்டர்களில் 10 பேர், 5 பேர் மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி கொடுத்து காட்சிகளை ரத்து செய்கின்றனர்.
அநேக தியேட்டர்களில் இரவு காட்சிகளும் காலை காட்சிகளும் நடக்கவில்லை. தியேட்டர்களில் உள்ள கேன்டீன் உணவு பண்டங்கள் விற்பனை ஆகவில்லை. பார்க்கிங் பகுதியும் வெறிச்சோடி கிடக்கிறது. திரையுலகுக்கு

எனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்? கவுதம் மேனன் விளக்கம்

Why is the Ennai Nooki Payum  delayed? 

தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கி படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார்.
கவுதம் மேனனும் துருவ நட்சத்திரம் படத்தில் பிசியானார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் நடந்தது. எனினும் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லை.
இந்நிலையில், ‘நரகாசுரன்’ படம் விஷயமாக கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நரகாசூரன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு விரைவில் படம் ரிலீசாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல், தனுஷ் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படமும்

விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடிக்கும் அஜித் ரசிகர்


Ajith Fan who plays villain in Vishwamam

விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி துவங்க இருந்த நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

நிஜத்தில் அஜித் ரசிகரான ஆர்.கே.சுரேஷ், பில்லா பாண்டி படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? கவுதம் மேனன் தகவல்


When is the Dhuruva Nachathiram release? Gautham Menon reported

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில், ‘நரகாசுரன்’ படம் விஷயமாக கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை

பிரிட்டனில் மெர்சல் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது! ரசிகர்கள் கொண்டாட்டம்

Mersal Movie Get Greatest award in Britain fan are celebrated 
சர்ச்சைகள் பல சந்தித்தாலும், நடிகர் விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் 'சிறந்த வெளிநாட்டு படம்' பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. பல நாட்டின் திரைப்படங்கள் போட்டியில் இருந்தாலும் இறுதியில் மெர்சல் படத்திற்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இதற்காக மெர்சல் படக்குழு மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வியாழன், 29 மார்ச், 2018

அரசியலில் ரஜினி, கமல் யாருக்கு ஆதரவு- சிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில்


Sivakarthikeyan Spokes about Rajini & Kamal In Politics
சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.
அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல்இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது தன் குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

Actor vijay fulfill his family dreams

நடிகர் விஜய் தற்போது தன் குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.

நடிகர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை வீட்டில் தான் பல வருடங்களாகக் வசித்து வருகிறார். தற்போது இந்த வீட்டை இடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் மார்டனாக கட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆசைப்படுகிறார்களாம்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எப்போதும் மரியாதை தரும் கொடுக்கும் நடிகர் விஜய், அவர்கள் ஆசைப்படிய வீட்டை மார்டனாக கொஞ்சம் பெரிதாக கட்ட சொல்லிவிட்டாராம். எனவே, நடிகர் விஜய்யின் குடும்பம் தற்போது பனையூரில் உள்ள பழைய வீட்டுக்கு மாறியுள்ளனராம் மேலும், தான் இதுவரை பயன்படுத்தி வந்த ஸ்விப்ட் காரை மாற்றிவிட்டு தற்போது புதிதாக வாங்கிய இன்னோவா காரில்தான் படப்பிடிப்புககு சென்று வருகிறாராம்.

திங்கள், 16 மார்ச், 2015

“தமிழ் சினிமாவின் புதிய கூட்டணி?”



லிங்கா படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த மாபெரும் வெற்றிப்படமான "கத்தி" படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை இயக்கவுள்ளார்.


இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இம்மூவரின் புதிய கூட்டணி தான் இப்பொழுது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இப்படத்தின் வேலைகள் மிகவும் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

ஞாயிறு, 15 மார்ச், 2015

மூன்று தோற்றங்களில் ஜீவா நடிக்கும் புதிய படம், ஜோடி நயன்தாரா?


1398497402-1616

















யான் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த ஜீவா, இயக்குனர் ராம்நாத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் ஜீவா முன்றுவித கெட்டப்புகளில் தோன்றுகிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஏற்றுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, விடி விஜயன் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்கம் சீனு.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்துக்கு அம்பாசமுத்திரம் அம்பானிஃபேம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவுடன் மீண்டும் பிரபுதேவா – அட, இவங்க சேட்டையைப் பாருங்க

1426309052-2913





















முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள் என்றதுமே, இது நம்ம ஆளு படத்தின் சந்தை மதிப்பு சடாரென்று எகிறிது.
ஜோடியை வைத்தே கோடிகள் அள்ளலாம் என்ற சூத்திரம் அறியாதவர்களா திரையுலகினர்?
தெலுங்கு, தமிழில் தயாராகும் த்ரில்லர் படத்தில் பிரபுதேவாவை நடிக்க கேட்டிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ஒருவர். யுஎஸ்ஸில் நடப்பதாக இந்த த்ரில்லரின் கதை எழுதப்பட்டுள்ளது.
இதில் நயன்தாரா பிரபுதேவாவுடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகியதாக தகவல். ஆனால், அப்படியொரு ஆஃபருடன் யார் வந்தாலும் கதவடைப்பு என்பதில் உறுதியாக உள்ளார் நயன்தாரா.
சிம்புவுடனான காதல் முறிவை ஜீரணித்துக் கொண்டவரால் பிரபுதேவா ஏற்படுத்திய ரணத்தை இன்னும் மறக்க முடியவில்லையாம். கடைசிவரை என்னோட ஒரே வில்லன் மாஸ்டர்தான் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.
நியாயம்தானே.

ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி

'வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழே தெரியாமல் மும்பையில் இருந்து வந்து.. தமிழ் நாட்டு மருமகள் ஆகி.. இப்பொழுது ஆசிரியர் படிப்பை முடித்து சென்னையின் பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" (ஜெயலலிதா படித்த பள்ளி) ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி ஒரு ஆச்சரியம் தான்'

வாழ்த்துக்கள் ஆசிரியை தேவயானி (y) (y)

via Page பெண்கள் Women.'

வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில், தமிழே தெரியாமல் மும்பையில் இருந்து வந்து.. தமிழ் நாட்டு மருமகள் ஆகி.. இப்பொழுது ஆசிரியர் படிப்பை முடித்து சென்னையின் பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" (ஜெயலலிதா படித்த பள்ளி) ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி ஒரு ஆச்சரியம் தான்  
'

கண்டுகொள்ளபடாத கலைஞர் திரு.கவுண்டமணி ;



'கண்டுகொள்ளபடாத கலைஞர் திரு.கவுண்டமணி ;

நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன்
'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம்.

ஆனால் #கவுண்டமணியின் பெயர் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு. 

ஆனால் விவேக்கைப் போல
பகுத்தறிவு என்னும் பெயரில்
இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக்
கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி.
வெளிப்படையான அரசியல்
நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும்
தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளைக்
கவிழ்த்துப்போட்டவர்.

வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும்
நொறுக்கியவர்.
'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க
விரும்பாத பல அடித்தட்டுமக்களின்
வேடங்களை ஏற்றவர் கவுண்டமணி அவர்கள் ..

தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்து தான் இருக்க வேண்டியது இல்லை, இவருகென்று தமிழ் மக்களிடம் என்றும் தனி இடம் இருக்கும்..!

(y) (y)

via Page நக்கல் மன்னன் கவுண்டமணி'

நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன்
'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம்.
ஆனால் ‪#‎கவுண்டமணியின்‬ பெயர் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு.
ஆனால் விவேக்கைப் போல
பகுத்தறிவு என்னும் பெயரில்
இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக்
கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி.
வெளிப்படையான அரசியல்
நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும்
தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளைக்
கவிழ்த்துப்போட்டவர்.
வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும்
நொறுக்கியவர்.
'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க
விரும்பாத பல அடித்தட்டுமக்களின்
வேடங்களை ஏற்றவர் கவுண்டமணி அவர்கள் ..
தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்து தான் இருக்க வேண்டியது இல்லை, இவருகென்று தமிழ் மக்களிடம் என்றும் தனி இடம் இருக்கும்..!