எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 30 மார்ச், 2018

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? கவுதம் மேனன் தகவல்


When is the Dhuruva Nachathiram release? Gautham Menon reported

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துருவ நட்சத்திரம். கவுதம் மேனனின் கனவு படமான இதில் விக்ரம் ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2017 ஜனவரியில் துவங்கி நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
கடந்த ஆண்டே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம், படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போயுள்ளது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னமும் படப்பிடிப்பு முடிவடையாததால் படம் ரீலீஸ் மீண்டும் தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில், ‘நரகாசுரன்’ படம் விஷயமாக கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய இரு படங்களும் நடிகர்களின் தேதி ஒதுக்கீட்டை வைத்தே உருவாகி வருகிறது.

இதுவரை 70 நாட்கள் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பும், 45 நாட்கள் எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும், இந்த இரு பெரிய படங்களுமே இந்த ஆண்டுக்குள் ரிலீசாகும். இதில் துருவ நட்சத்திரம் படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன, எனவே படத்தை குறுகிய இடைவெளியில் முடிக்க முடியவில்லை. இந்த இரு படங்களுமே இருவேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இருபடங்களிலுமே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான அளவிலேயே படத்திற்கு தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக