எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 27 மார்ச், 2018

சட்டை பட்டன் ஏன் பெண்களுக்கு இடதுபக்கமும் ஆண்களுக்கு வலதுபக்கமும் இருக்கு?... தெரியுமா உங்களுக்கு....

Did You Know Shirt Button Why is there to women on the left and to men right?

நாம் தினசரி பயன்படுத்தும் பல செயல்களில் நாம் கவனிக்கத் தவறுகிற சின்னச்சின்ன விஷயங்களில் கூட ஏராளமான சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கும். எப்போதாவது அது நமக்குத் தெரிய வரும்போதோ அல்லது வேறு யாராவது சொல்லும்போதோ தான் அட ஆமால்ல என்று நமக்கு வியப்பாக இருக்கும்.



அப்படி ஒரு விஷயம் தான் நாம் தினமும் அணிகிற சட்டையில் உள்ள பட்டன். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியாது. நாம் தினமும் அணியும் சட்டையில்
ஆண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன் வலதுபுறமாகவும் பெண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன்கள் இடதுபுறமாகவும் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும்.


அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க...

விக்டோரியா மகாராணி காலத்திலேயே ஆண், பெண் இருவருமே சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. குறிப்பாக, பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் பட்டன் வைத்த சட்டையை அதிகம் அணிந்தனர்.

ஆரம்ப காலத்தில் அவர்கள் அணியும் சட்டையில் பின்புறத்தில் தான் பெரிதும் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது. அவர்களுடைய வீடுகளில் உள்ள பணிப்பெண்கள் தான் அவர்களுக்கு பட்டன் போட்டுவிடுவார்கள்.

அவ்வாறு பட்டன் போட்டுவிடும்போது, பெண்களுக்கு வலதுபக்கம் கையிலிருந்து இடப்பக்க பட்டன் ஓட்டையில் மாட்டிவிடுவார்கள். இந்தமுறையே பட்டன் போடுவதற்கு மிக சுலபமாக இருந்ததால் அதுவே தொடர்ந்து பழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆண்களுடைய சட்டையைப் பெரும்பாலும் அவர்களே அணிந்து கொள்வதால் அவர்களுக்கு வலது புறத்தில் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக