தேவையானவை : மீன் – 1 கிலோ (முள் இல்லாதது), பொட்டுக் கடலை மாவாக அரைத்த்து அல்லது அரிசிமாவு – 4 டீஸ்பூன், (2 ஸ்பூன் மீனோடு பிசைய அடுத்த 2ஸ்பூன் தேவையிருந்தால்) முட்டை – 2, உருளைக் கிழங்கு – 150 கிராம், மிளகாய் தூள் -3 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 100 கிராம், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவைக்கேற்ப...
செயல் முறை : மீனை நன்கு சுத்தம் செய்து உப்பு, மசாலாதூள் சேர்த்து வேகவைத்து தோலை நீக்கி மிக்சியில் 40 விநாடிகள் மசித்த பதத்தில் அடிக்கவும் (கூழ் போல அடித்துவிடக் கூடாது) பின்பு உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்றாக மசிக்கவும்.
பச்சை மிளகாய் & வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கவும் இப்போது மீனோடு மசித்த உருளைக் கிழங்கு, அரிசி மாவு, பச்சை மிளகாய், உப்பு, வெங்காயம், மற்றும் முட்டை சேர்த்து நன்கு பிசையவும் இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் சூடாக்கி பொறித்து எடுக்கவும்.
சுவையான மீன் கோலா உருண்டை தயார்.. எல்லா சாப்பாடுக்கும் தொட்டுக் கொள்ள மட்டுமின்றி அப்படியே ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்.. இதே பொரித்த உருண்டைகளை குழம்பில் சேர்த்தால் சுவையான மீன் உருண்டைக் குழம்பு ரெடி.!
டூ இன் ஒன் இன் மீன்..!
உருண்டை பிடிக்க வராவிட்டால் கொஞ்சம் அரிசிமாவு சேர்க்கவும் அரிசிமாவுக்கு பதில் பொட்டுக் கடலை மாவை பயன்படுத்தலாம் சுவை இன்னும் அலாதியாக இருக்கும்.
உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் பொறிப்பதற்கு முன் வாழை நார் சுற்றி பிறகு பொரித்தால் மணமாக இன்னும் சுவையாக இருக்கும்..
ஸ்நாக்சுக்கு மட்டும் இதை செய்தால் பொடித்த முந்திரிகளை உருண்டையில் சேர்க்கலாம் சுவையாக இருக்கும்.
மைனீஸ் சாஸ் போன்றவை சுவை சேர்க்கும் தான் ஆனால் புதினா சட்னியுடன் இந்தக்கோலா சாப்பிட்டுப் பாருங்களேன்... டிவைன்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக