Ajith Fan who plays villain in Vishwamam
விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி துவங்க இருந்த நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
நிஜத்தில் அஜித் ரசிகரான ஆர்.கே.சுரேஷ், பில்லா பாண்டி படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக