எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 30 மார்ச், 2018

எனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்? கவுதம் மேனன் விளக்கம்

Why is the Ennai Nooki Payum  delayed? 

தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கி படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார்.
கவுதம் மேனனும் துருவ நட்சத்திரம் படத்தில் பிசியானார். இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு சுமார் 10 நாட்கள் நடந்தது. எனினும் படப்பிடிப்பு முழுவதுமாக முடியவில்லை.
இந்நிலையில், ‘நரகாசுரன்’ படம் விஷயமாக கவுதம் மேனனும், கார்த்திக் நரேனும் டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நரகாசூரன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விரைவில் சரிசெய்யப்பட்டு விரைவில் படம் ரிலீசாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல், தனுஷ் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படமும் இந்த ஆண்டே ரிலீசாகும் என்று உறுதியளித்திருக்கிறார். இதுவரை எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய இரு பெரிய படங்களிலும், இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நடிகர்களின் தேதி ஒதுக்கீட்டை வைத்தே இரு படங்களும் உருவாகி வருகிறது. இந்த இரு படங்களுமே, இருவேறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு படங்களிலுமே எந்த பிரச்சனையும் இல்லை. சரியான அளவிலேயே படத்திற்கான தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விரைவில் படப்பிடிப்பு முடிந்து இந்த ஆண்டுக்குள் படம் ரிலீசாகும் என்று கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக