இன்றைய இயந்திர கதி வாழ்க்கையில் கிட்டத்தட்ட அனைவருமே அவ்வவ்போது மனஉளைச்சலுக்கு ஆளாகிறோம்..இதற்கு யோகா , தியானம் என பல வடிகால்களை தேடுகிறோம்.
ஆனால் எளிதாக நம் சமையல்கட்டில் இருக்கும் ஒன்று தீர்வாகிறது..ஆமாம் அது தான் பிரியாணி இலை
இது , சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.
இதை கண்டிபிடித்தவர் ரஷ்ய ஆய்வாளர் கென்னடி. இவரின் கூற்றுப்படி பிரியாணி இலை மன அழுத்தத்தைக் குறைப்பதாக கூறியுள்ளா
முதல் கட்டமாக ,மனதை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.
இவாறாக செய்வதால் ,பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.
மேலும்,பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக