எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 டிசம்பர், 2019

தேவதைகளின் தேரோட்டம்-சிறுகதை



   
சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் இரயிலில்   நானும் சென்னைக்கு கிளம்பினேன் அலுவலக பணிக்காக.நான் அமர்ந்திருந்த கம்பார்ட்மெண்ட் நிரம்பி வழிந்தது பயணிகளால் .

இரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எனக்கு இரண்டு விஷயம் நன்றாய் புரிந்தது .என்னை சற்றிலும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் புரிந்தது .ஜன்னல் ஓரத்தில் ஒரு பெரியவர் மட்டும் அமைதியா உக்காந்துட்டு இருந்தார் .மற்ற அனைவரும் செல்போன் சகிதம் தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் அந்த குடும்பம் உணவு பொருட்களை சாப்பிட தொடங்கியதும் நானும் என்னையும் அவர்களுக்குள்

பிடித்த மீன் குழம்பு

மனைவி ஒருநாள் தன் கணவனுக்குப்

பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்.

இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை.

கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட

அமரச் சொன்னாள்,

மனைவி சாப்பாடு பரிமாறினாள்.

" என்னங்க குழம்பு எப்படி இருக்கு ?

" நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா

கைப் பக்குவம் உனக்கு இல்ல.... ....

எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு

தெருவே மணக்கும்... அப்பப்பா.......ருசி

சூப்பரா இருக்கும்.

அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார்.

மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது

தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து.

எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.

அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.

அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது.

உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான்.

அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று.

நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே

உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான். என்று புரிந்து கொண்டாள்.

புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு

செவ்வாய், 19 நவம்பர், 2019

லட்சுமி-சிறுகதை

புருசன் செத்துட்டான்
பொட்டப்புள்ளையை காப்பாற்ற 
புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது லெட்சுமி

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான்
பர்மிசன் யார்கிட்ட கேட்ட
மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு
எதையாவது சொல்லிதினமும் 
ஓசியில வயிறுமுட்ட தின்பான்

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள்
இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும்....
அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் லெட்சுமி

ஆனால் இந்த
ஓசிபோலீஸ் ஒருதோசை
குறைவாக சாப்பிடமாட்டானா
என நினைத்தால் 
அவன்தான் ஆறஅமர உட்கார்ந்து
நிறைய தின்னுட்டு 
பார்சலும் வாங்கிட்டு போவான்....

சனி, 19 மே, 2018

மனசு- சிறுகதை

அந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது. 


உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஒருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார். 

 "ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?" யாராவது வரப்போகிறார்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி "சூ" "சூ" என்றபடி அதை விரட்டினார். 

அந்த காக்கையும் அவருக்கு பயந்தது போல் அமர்ந்திருந்த அந்த கிளையிலிருந்து பறந்து மறுபடி வேறொரு கிளையில் போய் அமர்ந்து கொண்டது. 

"அப்படி யராவது வந்தாலும் பரவாயில்லை நாலு சுவத்தை பாத்துட்டு பொழுது போகமே தவிக்கிறதுக்கு நாலு நாள் பொழுதாவது நல்லாபோகும்" என்று முணுமுணுத்த அந்த முதியவர் தன்னுடைய மிரட்டலுக்கு காகம் கட்டுபட்டு விட்டது என்ற திருப்தியுடன் உள்ளே சென்றார்.

சிறிது நேர அமைதிக்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. 

அதன் ஓயாத கரைதலுக்கு செவிமடுத்து வீட்டின் உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளிவந்து கண்ணை இடுக்கியபடி மரத்திலிருந்த அந்த காக்கையை உற்று நோக்கினாள். 

"ஏன் இப்படி காலையிலிருந்து கத்திகிட்டேயிருக்கு? காக்கா ஒயாம கத்தினா

வெள்ளி, 18 மே, 2018

சிறிய பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது?

சிறிய பிரச்சினைகள் - புத்த துறவி ஒருவர் சொன்ன ஒரு அருமையான கதை

இதில் புதைந்துள்ள உண்மையை நாம் புரிந்து கொண்டு மனதில் நிறுத்தி விடவேண்டும். அதன் பிறகு நமது வாழ்கையின் மகிழ்ச்சியை குவிக்கிறோமோ இல்லையோ, துயரங்களை கணிசமாக குறைக்கலாம்.

ஒரு பெரிய சக்ரவர்த்திக்கு ஓரே ஒரு மகள். அதாவது ராஜகுமாரி. இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது. கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது. போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள். அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, இந்த சிறுமி ஒத்துழைக்கவில்லை. கண்ணை கசக்கியும் அழுதும் தொடர்ந்ததால் காயம்

வெள்ளி, 11 மே, 2018

மயிலிறகு வார்த்தைகள்.. (4 நிமிட சிறுகதை)

என்ன ஆச்சி இவளுக்கு..? ஒண்ணும் புரியல எனக்கு.

காலையில நான் வேலைக்கி போறப்ப கூட வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி ‘வர்றப்ப சாந்தியக்கா கடையில பூ வேங்கிட்டு வாங்க.. அவங்கதான் நல்ல நெருக்கமா கட்டிருப்பாங்க..’ன்னு சொல்லி , ப்ரியா வாரியார் மாதிரி கண்சிமிட்டி , விரலால சுட்டாளே..

”ஒன்ன நெனைச்சிக்கிட்டே பைக் ஓட்டி சிக்னல்ல யெல்லோ லைன தாண்டி நிப்பாட்டி , பின்னாடி வர்றதுக்காக ரிவர்ஸ் கியர தேடி அசடு வழிஞ்சேன் டிராஃபிக் கான்ஸ்டபிள்கிட்ட..”ன்னு ஃபோன்ல சொன்னப்ப  அவ சிரிச்ச சிரிப்பு , சாயங்காலம் வாங்கப்போற மல்லிய ஞாபகப் படுத்திச்சி.

வாழை இலையில சாந்தியக்கா பொதிஞ்சி குடுத்த பூவ , காலி டிஃபன் பாக்ஸுக்குள்ள வச்சி கொண்டு போயி குடுப்பேன். ஜாமெண்ட்ரி பாக்ஸ பல்லால திறந்து நெல்லிக்காய கடிச்ச ரெட்டச் சடை பருவத்த கண்ணுல காட்டுவா.
வழக்கமா ஓடுற படந்தான். இன்னிக்கி எந்த இடத்துல ரீல் அறுந்துச்சின்னு தெரியல. தூக்கி வச்ச முகத்தோட நங்குன்னு அவ கொண்டு வந்து வச்ச காஃபி , ஃபிகாவா கலங்கிடிச்சி.

‘டேய் பெரியவனே.. ஒங்க அத்தாவுக்கு நைட்டுக்கு தோச வேணுமா , சப்பாத்தி வேணுமான்னு கேட்டு சொல்லுடா..’

கல்யாணமாகி ஒரு வருஷமாச்சி. மூணு மாச புள்ளைய பெரியவனேன்னுதான் கூப்டுவா. பட்டுன்னு அடுத்த புள்ள வேணும்ங்குறத ஒத்த வார்த்தையில சொல்லிடுற ரசனைக்காரி. தோசையா , சப்பாத்தியான்னு எங்கிட்ட கேக்க வேண்டியத , தொட்டில ஈரம் பண்ணுறவங்கிட்ட கேக்குறாளே.. சுர்ர்ர்ருன்னு ஏறிச்சி

சிறுகதை : காத(லி)ல் ...!


சிவா ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். அவனிடம் எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால் ஏழையாய் பிறந்து விட்டோம் என்று அவன் கவலைப்பட்டதே இல்லை, விடாமுயற்சியுடன் வேலைக்கு சென்று கொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்தான்.  எல்லோரும் ஏதோ ஒரு தருணத்தில் காதலிக்கலாம்.  விதி சிவா-வையும் விடவில்லை.

அதே கல்லூரியில் படிக்கும் தீபிகாவை காதலித்தான். தீபிகா மிக பெரிய தொழிலதிபரின் மகள். தினமும் விலை உயர்ந்த காரில்தான் கல்லூரிக்கு வருவாள். ஆனால் சிவா அவளுடைய பணக்கார ஆடம்பரத்தை பார்த்து காதலிக்கவில்லை. காதலிக்க ஆரம்பித்து அவளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆராய்ந்த போதுதான் தீபிகா ஒரு பணக்கார தேவதை என்று தெரியும். அப்போது அவன்  கால் சிறிது பின் வாங்கினாலும் அவனது காதல் பின் வாங்க விடவில்லை. சிவா ஏழையாய் பிறந்து இது வரை அவன் எடுத்த எல்லா முயற்சிகளிலும் வென்று இருக்கிறான். அந்த தைரியத்தோடு தீபிகா-விடம் தான் காதலை சொல்ல போகும் சந்தேகம் கலந்த சந்தோசத்தோடு உறங்க போனான் ஆனால் காதல் அவனை

இருளாயி-சிறுகதை


இருளாயி இன்னைக்கும் பள்ளிக்கூடம் வரவில்லை. குறிப்பாய் தேடும் அளவிற்கு அவளொன்றும் கெட்டிக்காரியோ, மற்ற பிள்ளைகளைப் போல படிப்பில் பஸ்ட் ரேங் எடுப்பவளோ அல்ல

பக்கத்து கிராமத்திலிருந்து ,சரிவர எண்ணைய் தேய்க்காமல் அவசர அவசரமாய் பின்னப்பட்ட தலையுடன் அரசு கொடுக்கும் யூனிபாமை சரியா துவைக்காமல்  அருவருப்பாய் போட்டு வருபவள்தான்

அவளது தோற்றத்தினால் ஏற்பட்ட  அவமதிப்பு கடந்த மூன்று வாரங்களாய் நேரம் பிந்தி அவள் பள்ளிக்கு வந்ததால் இன்னும் வலுவடைந்திருந்தது.ஒவ்வொரு நாளும் வகுப்பாசிரியரால் முட்டி போட வைத்ததால் இன்னும் பிரபல்யமடைந்திருந்தாள் என்றும் சொல்லலாம்.அதனால் தான் அவளை தேடினோமோ என்னவோ தெரியவில்லை.

இன்றுடன் ஐந்தாவது நாளாய் பள்ளிக்கு வரவில்லை.தொடர்ந்து ருசித்த தண்டனைகளின் அவமானங்கள் அவளை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கலாம் என நினைத்தோம்.

திங்கட்கிழமை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில்

திங்கள், 30 ஏப்ரல், 2018

முத்தக்காற்று - சின்னஞ்சிறுகதை - அராத்து


மொபைலில் மேப்பைப் பார்த்தபடியே காரை ஓரம் கட்டினாள் நட்சத்திரா . வீட்டு நம்பரைப் சரி பார்த்து கேட்டைத் திறக்க முயற்சிக்கையில் , நட்சத்திரா , நட்சத்திரா என்று யாரோ கூப்பிடுவது கேட்டது.

கேட்டிலிருந்து கை எடுக்காமலேயே அக்கம் பக்கம் பார்த்தாள். ஸ்லீவ் லெஸ் டாப்ஸும் , ஜீன் நிக்கரும் அணிந்து கொண்டு முடி காற்றில் பறக்க , அதை ஒதுக்கி விட்ட படி ,  கை ஆட்டியபடி கூப்பிட்டுக்கொண்டு இருந்தாள் மெல்லிசை.
மெல்லிசையை போட்டோவில் பார்த்து இருக்கிறாள் நட்சத்திரா. வாட்ஸ் அப் “ப்ரொஃபைல் போட்டோ”வை விட அழகாகவும் இளமையாகவும் தெரிந்தாள் மெல்லிசை.
முதன் முதலில் சிகரன் ,மெல்லிசை நம்பரை கொடுத்த போது , அதை சேமித்துக்கொண்டு , அவளின் வாட்ஸ் அப் ப்ரொஃபைல் போட்டோவை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருந்தாள் நட்சத்திரா.

சிகரன் மெல்லிசையை முத்தமிடுவது ,