எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 22 மார்ச், 2015

மத்திய அரசாங்கத்தின் செல்வமகள் சேமிப்பு திட்டம்.::


ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்கலாம். 9.1% வட்டியுடன் உங்கள் சேமிப்பு எந்த வரி பிடித்தம் இல்லாமல் திரும்ப கிடைக்கும்.
ஒரு ஆண்டில் குறைந்தது ரூ 1000 இந்த திட்டத்தில் செலுத்த வேண்டும் - நாள் வாரம் மாதம் என்று எத்தனை தவணையாக வேண்டுமானாலும் செளுத்தாலம் அதிக பட்சம் ரூ 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
- இந்திய அஞ்சல் துறை சார்பில் “செல்வமகள் சேமிப்பு கணக்கு” திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
- இத்திட்டம் 11 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை உடையவர்களுக்கு மட்டும்.
-மாதம் ரூ.500 செலுத்துகிறோம் என்றால், 14 ஆண்டுகளுக்கு ரூ.84 ஆயிரம் செலுத்தி, 21-வது ஆண்டில் ரூ.3,03,564 பெற வாய்ப்பு உள்ளது.
- தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். முதிர்வு தேதி குழந்தையின் 18-வது வயது ஆண்டில் தொடங்குகிறது.
- கல்வி மற்றும் திருமணத் தேவைக்கு, கட்டிய தொகையில் இருந்து 50 சதவீதத்தை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது உங்கள் குழந்தை 18 வயது அடையும் தருவாயில் இந்த கணக்கு இடை நீக்கம் செய்ய முடியும் அல்லது குழந்தையின் 21 வயது வரை காத்து இருந்து முழு வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.
- இதற்கு வருமான வரி சலுகை உள்ளது.
- பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம்.
- விண்ணப்பத்துடன் குழந்தையின் பிறந்த தேதி சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்று, அவர்களது புகைப்படத்தை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
- உங்கள் குழந்தை இந்த கணக்கை அவர்கள் படிப்பு திருமணதிற்கு பின்பும் தொடரலாம்.
முகம் தெரியாத தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுத்து தலையில் துண்டு போட்டு கொள்வதற்கு பதில் அரசாங்க சேமிப்பு திட்டங்களை பயன்படுத்துங்கள்.
மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள இந்திய அஞ்சல் துறை அலுவலகத்தை அனுகவும்.
படித்தவர்கள் படிப்பரிவிலாத பாமர மக்களுக்கு இந்த திட்டம் குறித்து முடிந்தவரை பகிரவும். யாதுமாகி பக்கம் இந்த பதிவை தன் சொந்த செலவில் குறைத்து ஒரு லட்சம் பேரிடம் கொண்டு செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக