தெலுங்கில் தமன்னா நடித்த பாகுபலி படப்பிடிப்பு முடிந்துள்ளது. ‘பெங்கால் டைகர்’ என்ற இன்னொரு படத்தில் தற்போது நடித்து வருகிறார். தமிழிலும் ஒரு படம் கைவசம் உள்ளது.
நீச்சல் உடை, முத்த காட்சிகளில் நடிகைகள் நடிப்பது குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:–
சினிமாவில் நடிக்க வரும்போதே இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தேன். அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சியில் நடிக்க கூடாது. நீச்சல் உடையிலும் நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருந்தேன். இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன்.
நிறைய தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் கதைக்கு முத்த காட்சி, நீச்சல் உடை தேவை என்றும் அதில் நடிக்க வேண்டும் என்றும் என்னிடம் வற்புறுத்தி உள்ளனர். அதனை நான் ஏற்கவில்லை. முத்தம், நீச்சல் உடையில் நடிப்பதற்கு ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
இதர கதாநாயகிகள் முத்த காட்சிகளிலும், நீச்சல் உடையிலும் நடிக்கிறார்களே என்று கேட்கலாம். அவர்களை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
அப்படி நடிப்பது அவர்களது விருப்பம். என்னை பொறுத்தவரை அது போன்ற காட்சிகளில் நடிப்பது தவறாக படுகிறது. எனவேதான் அப்படி நடிக்க கூடாது என்று இருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக