* ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.
* தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.
* ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
* பத்து மிளகினை பொடி செய்து அதனுடன் பாகல் இலைச்சாறும், கரிசலாங்கண்ணி இலைச்சாறும் கலந்து 40 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும்.
* சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக