இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘கயல்’. சுனாமியை மையப்படுத்தி வெளிவந்த இப்படத்தில் அழகான காதலையும் சொல்லியிருந்தார் பிரபு சாலமன்.
இப்படத்தில் சந்திரன்-ஆனந்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனந்திக்கு இப்படத்தை தொடர்ந்து பல படவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனுக்கு, தனது அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த முறை பிரபு சாலமன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சந்திரன் நடிக்கவுள்ளார். இப்படத்தை அன்பழகன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே ‘சாட்டை’ என்ற படத்தை இயக்கியவர். இந்த படத்தையும் பிரபு சாலமன்தான் தயாரித்திருந்தார்.
மேலும், இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். பிரபு சாலமன் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு குறித்து நடிகர் சந்திரன் கூறும்போது,
பிரபு சாலமன் தான் இயக்கும் படங்களில் நடித்தவர்களுக்கு மீண்டும் அவரது படங்களில் வாய்ப்பு கொடுப்பது என்பது மிகவும் குறைவே. ஆனால், அவருடைய தயாரிப்பில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக