வறுமையிலும் நேர்மை
கணவர் கைவிட்ட நிலையில் குழந்தையோடு
வறுமையில் போராடினாலும் நேர்மை மட்டும் மாறவில்லை
கேரள மாநிலம் மூணாறு அருகே பழைய துணி சேகரிப்பின்போது கிடைத்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை, உரியவரிடம் ஒப்படைத்த கோவையைச் சேர்ந்த லட்சுமியை போலீசார் உட்பட பலரும் பாராட்டினர்.
கோவையைச் சேர்ந்தவர் லட்சுமி, 24. கணவர் கைவிட்டதால் 7 வயது மகளுடன் கேரள மாநிலம் திருச்சூர் அருகே வாடானப்பள்ளியில் சிறிய ஷெட்டில் வசித்து வருகிறார். அப்பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று பழைய துணிகளை சேகரித்து வாழ்க்கை நடத்துகிறார்.
இரு நாட்களுக்கு முன்பு அஞ்சேரி பகுதியில் துணிகளை சேகரித்தார். அவற்றை விற்கும் முன்பாக, தனது வீட்டுக்குச் சென்று ஒவ்வொரு துணியாக எடுத்து மடித்து வைத்தார். ஒரு சட்டையில் இருந்து ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி கீழே விழுந்தது. வியப்படைந்த லட்சுமிக்கு அது யாரிடம் பெற்ற சட்டை எனத் தெரியவில்லை.
ரூ. ஒரு லட்சத்துக்கும் மேல் விலை மதிப்புள்ள தங்கச்சங்கிலியை கண்டு ஆசைப்படாத அவருக்கு, அதை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமே என்ற கவலையே மேலோங்கியது. எனவே அதை வாடானபள்ளி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு, வீடு திரும்பினார்.
இதற்கிடையே அஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் மனைவி விஜி, தங்கச் சங்கிலியுடன் பழைய துணியை ஒரு பெண்ணிடம் கொடுத்ததை உணர்ந்து பதறினார். அப்பகுதி முழுவதும் தேடி அலைந்தும் அப்பெண்ணை காண முடியாததால் வாடானபள்ளி போலீசில் புகார் அளிக்கச் சென்றார்.
போலீஸ் ஸ்டேஷனில் தனது தங்கச்சங்கிலி இருந்ததைக் கண்டு அதிசயித்தார். விசாரித்தபோது லட்சுமியின் நேர்மை தெரிந்தது. வாடானப்பள்ளி எஸ்.ஐ., சஜின்சசி, ஏழைப் பெண் லட்சுமியை வரவழைத்து, அவர் மூலம் விஜியிடம் சங்கிலியை ஒப்படைத்தார். வறுமையிலும் நேர்மை அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. போலீசார் உட்பட அனைவரும் அவரை பாராட்டினர்.
உங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
இழந்தவர்களின் வலியை உணர்ந்ததால்தான் திரும்பி ஒப்படைத்துள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை
வாழ்க வளமுடன்-தமிழ் வாழ்க-தமிழன் வாழ்க
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)
இழந்தவர்களின் வலியை உணர்ந்ததால்தான் திரும்பி ஒப்படைத்துள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை
வாழ்க வளமுடன்-தமிழ் வாழ்க-தமிழன் வாழ்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக