எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 6 மார்ச், 2015

சனி தோஷத்தை போக்கும் பைரவர்


எமதர்மனும், சனியும் சூரியபகவானின் மகன்கள். இதில் எமதருமர் அழகானவர். சனி ஊனமானவர். இதனால் எமன் அவரை அலட்சியப்படுத்தினார். மன வேதனை அடைந்த சனி, தனது தாயார் சாயா தேவியிடம் சென்று வருத்தப்பட்டார்.
அவர், ‘நீ!பைரவரை உள்ளன்போடு வழிப்பட்டு வா!. அவர் நல்வழி காட்டுவார்’ என்றார். தாயாரின் அறிவுரைப்படி சனி பைரவரை வழிப்பட்டு வந்தார். இதனால் மனமகிழ்ந்த பைரவர் சனியின் பெருமையை உலகத்திற்கு எடுத்துக்காட்ட அவருக்கு ஈஸ்வரன் பட்டம் அளித்தார்.
மேலும் நவக்கோள்களில் சக்தி மிக்கவராக ஆக்கினார். ஆகவே சனீஸ்வரனின் குருநாதரான பைரவரை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த்தாஷ்டமச்சனி போன்ற தோஷங்கள் விலகி விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக