எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

செவ்வாய், 3 மார்ச், 2015

விஜய் படத்தில் மீண்டும் காமெடியனாகும் வடிவேலு…?



1425276808-1883



தெனாலிராமன் படத்தின் தோல்விக்குப் பிறகும் நாயகனாக நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறார் வடிவேலு. அவர் நாயகனாக நடிக்கும் எலி படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
காமெடியனாக நடிக்க பலர் அழைத்தும் ஒப்புக் கொள்ளாத வடிவேலு விஜய் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். படம் இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து தாணு தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதில் வடிவேலு காமெடியனாக நடிக்கயிருப்பதாக தகவல். ஆனால், அதிகாரப்பூர்வமாக இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக