லிங்கா படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த மாபெரும் வெற்றிப்படமான "கத்தி" படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டாரை இயக்கவுள்ளார்.
இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இம்மூவரின் புதிய கூட்டணி தான் இப்பொழுது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இப்படத்தின் வேலைகள் மிகவும் ஆரம்பகட்டத்தில் தான் உள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக