என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை
நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து
உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை
நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை
மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா!
பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்!
ஒன்று கடவுள் இல்லையென்பது
இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக