எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 5 மார்ச், 2015

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

திராட்சை நினைக்கும்போதேஇனிக்கும் பழங்களில் ஒன்று.இவற்றில் கறுப்பு திராட்சைபச்சைதிராட்சைபன்னீர் திராட்சைகாஷ்மீர்திராட்சைஆங்கூர் திராட்சைகாபூல்திராட்சை,
விதையில்லா திராட்சை என பலவகையுண்டு



குழந்தைகள் வளர்ச்சிக்குஇரத்தவிருத்திக்குஉடல் வலி குணமாக,கர்ப்பிணிப் பெண்களுக்கு,மாதவிலக்குக் காலங்களில்பெண்களுக்குமலச்சிக்கல் தீர,குடல்புண் ஆறஇதயத் துடிப்பு சீராகசுகமான நித்திரைக்கு என்று இதன் பயனைஅடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளதுகுழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை.இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இதுஎலும்புகள்நன்றாக உறுதியாக வளரவும்பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும்தேவையான சத்து கால்சியம்தான்.

கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளதுஇந்தப்பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சிபாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும்,பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்ததிராட்சை மிகவும் உதவுகிறதுஇந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம்கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம்சுரக்கும்மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்துஅருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும்இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்றுஇரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்துசத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும்தாயின் ஆரோக்கியமே முதலில்முக்கியம்அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்துகொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாகபிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சிலபெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும்இந்த பிரச்சனை தீரகைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறதுஇந்தப் பழத்தை நீரில்போட்டு காய்ச்சிகசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம்ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றனஇவர்கள் உலர்ந்த திராட்சைப்பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல்புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும்இவர்கள்எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள்இவர்கள் பாலில் இந்தப்பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சிபாலையும் பழத்தையும்சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்புபாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிபாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்தினமும் உலர்ந்ததிராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.

உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்குசளி பிடித்திருக்கும் போதும்காச நோய்உள்ளவர்களும்வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக்கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான்பதப்படுத்துகின்றனர்எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவதுமிகவும் தவறுஅதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம்ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாககழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.


ஒரு கொசுறு செய்தி!
புற்றுநோயை உண்டாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விளையாட்டாக 
தொடங்கி அதை விடமுடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.
மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக