கொத்தமல்லி வாசம்
அதிக உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்கள் கொத்தமல்லி விதையை இரவு ஊற வைத்து காலையில் அந்த நீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்துவர உஷ்ணம் குறையும். சுறுசுறுப்பு உண்டாகும். கொத்தமல்லி தழையில் சட்னி செய்து சாப்பிட்டுவர வாயுத்தொல்லை நீங்கும். காலையில்
வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலையை மென்று சாப்பிட்டு வர வெயிலால் ஏற்படும் மயக்கம், அடிவயிற்று எரிச்சல், வாய்ப்புண் போன்ற நோய்கள் குணமாகும். கொத்தமல்லிக் கீரையை சமையலில் சேர்த்துவர நல்ல பசி உண்டாகும். இது சிறுநீர் பெருக்கியாகும்.
கொத்தமல்லி இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தம்ளர் குடித்துவர உடலிலுள்ள கொழுப்புகள் குறையும்.
பனங்கிழங்கு
பனங்கிழங்கு குளிர்ச்சியினை தரக்கூடியது. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டாக நறுக்கி காய வைத்து கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிட உடலுக்கு தேவையான இரும்புச் சத்தானது கிடைக்கும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிடும்போது உடல் உறுப்புகள் பலம் பெறும். கர்ப்பப்பை பலம் பெறும். பனங்கிழங்கினை மாவாக்கி ஓட்ஸ் உடன் கலந்து சாப்பிட பசி தீரும். மலச்சிக்கலை போக்கும். ஆண்மை சக்தி அதிகரிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக