சில முந்திரி பருப்புகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, அவற்றை தவிர்த்து மற்ற முந்திரி பருப்புகள் மிகவும் நன்மை பயக்கும் என்று அதிகாரப்பூர்வ ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு தமிழ்நாட்டில் ( சென்னை ) நடத்தப்பட்டது. இந்திய அதிக முந்திரி பருப்பு விளைவிக்கும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும், ( எச்.டி.எல் ) நல்ல கொழுப்பு அதிகரிக்கிறது. இவை அனைத்தும் சென்னையில் மேற்கொண்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைத்து உணவு பொருட்களுக்கும் பொருந்தும், இவை முந்திரி பருப்புகளுக்கும் பொருந்தும். ஆனால் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் பல தீமைகள்
ஏற்படுகிறது என சில கைக்கூலிகள் வேலை பார்க்கின்றனர். முந்திரி பருப்பில் நல்ல கொழுப்பு எச்.டி.எல் தான் மிகுதியாக உள்ளது. கெட்ட கொழுப்புகள் எல்.டி.எல். மிகவும் குறைவுதான்.
இதற்கு முன் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால், உடல் எடை மற்றும் கொழுப்பு அதிகரிக்கிறது என நம்பப்பட்டது. பருப்புகள் தீமைகள் விளைவிக்கும் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள். இவற்றை நம்ப வேண்டாம்.
சென்னை மருத்துவர் வி. மோகன், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு முந்திரி பருப்புகள் சாப்பிட கொடுத்து ஆய்வு செய்தார்.
12 வாரத்திற்கு ( 30 கிராம் வாரத்திற்கு ) முந்திரி பருப்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. 12 வாரங்கள் கழித்து அவர்களை சோதனை செய்ததில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்துள்ளது மற்றும் நல்ல கொழுப்பு ( எச்.டி.எல் ) அதிகரித்துள்ளது. மேலும் அனைவரும் சாப்பிடும் உணவுகளை உட்கொள்ளலாம் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
குறிப்பு :
முந்திரி பருப்புகளை எண்ணெயில் வறுத்து, உப்பு சேர்த்து மற்றும் பதப்படுத்தி சாப்பிட கூடாது.
சுத்தமான முந்திரி பருப்புகளை தேர்ந்தெடுத்து, நன்றாக காய வைத்து சாப்பிடலாம்.
எண்ணெயில் போட்டு வறுக்கும் போது நல்ல கொழுப்புகள் கெட்ட கொழுப்புகளாக மாற்றமடைகிறது.
சூடு செய்தால் கூட நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்புகளாக மாற்றமடையும். வெயிலில் காய வைத்து சாப்பிட்டால் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக