எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

பொடுகு பிரச்சனையை விரைவில் விரட்ட ஆறு அற்புத டிப்ஸ்; பக்க விளைவு இல்லாத இயற்கை வழி...

பொடுகு

பொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.
இதனைப் போக்க வெங்காயச் சாறு இப்படி உபயோகப்படுத்தினாலே போதும். பொடுகை போக்கலாம். இதோ டிப்ஸ் உபயோகித்து பயன் பெறுங்கள்.

1.. புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு:
புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை
அலசவும்.


2.. பாசிப்பயிறு மற்றும் வெங்காயச் சாறு:
பாசிப் பயிறை பொடி செய்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.
3.. பீட்ரூட் சாறு மற்றும் வெங்காயச் சாறு:
பீட்ரூட் பொடுகை கட்டுப்படுத்தும். அதன் சாறு எடுத்து அதனுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கல் கழித்து தலையை அலசவும்.
4.. ஆப்பிள் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு:
ஆப்பிள் மற்றும் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கூந்தல் அடர்தியாகவும் பொடுகின்றியும் ஆரோக்கியமக திகழும்.
5.. கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு:
கற்றாழை சதைப் பகுதியுடன் வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள்.அரை மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை தரும்.
6.. வெந்தயம் மற்றும் வெங்காய சாறு:
இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து அதனுடன் வெங்காய சாறி அரை கப் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக