எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

காக்கி சட்டை- சினிமா விமர்சனம்


ஹீரோயின்  ஒரு நர்ஸ் .அவங்க வேலை  பார்க்கும்  ஹாஸ்பிடலில்  தலைமை  டாக்டரின்  கண்காணிப்பில்  ஒரு அக்ரமம்  நடக்குது. அதாவது  ட்ரீட்மெண்ட்க்கு வரும்  ஆதரவு அற்ற அனாதைகள்  உடல்  உறுப்புகளை  திருடி  ஃபாரீன்  செல்வந்தர்களுக்கு  விற்பது. இதுக்காக   செயற்கையா அவங்களுக்கு மூளைச்சாவு  ஏற்படும்  விதமா  கார்பன் மோனாக்சைடு  கொடுக்கப்படுது. இந்த  மேட்டரை  ஹீரோயின்  போலீஸ்  கான்ஸ்டபிளா  இருக்கும்  ஹீரோ  கிட்டே  சொல்லுது.

 சாதா  கான்ஸ்டபிளா  க்ரைம் பிராஞ்ச்சில் வேலை  பார்க்கும்   ஹீரோ  இந்த   கேசை  எப்படி  அர்விந்த்  கேஜ்ரிவால்  டில்லியை  கில்லி  மாதிரி   கைப்பற்றினாரோ  அப்படி  டீல்  செய்வது  தான்  கதை  
  
கதைக்கரு  என்னவோ  என்னை  அறிந்தால்  , ஆனஸ்ட் ராஜ்   போல்   கதை  தான். ஆனா  திரைக்கதை ட்ரீட்மெண்ட்  திருடன்  போலீஸ்  போல  .


 வழக்கமா  நாம    வால்டர்  வெற்றிவேல்  , சிங்கம் 1   சிங்கம்  2    மாதிரி   ஓவர்  ஹீரோயிச  போலீஸ்  ஸ்டோரியியையே  பார்த்துட்டு   இந்த மாதிரி   ஹீரோயிசம்  அதிகம்  இல்லாத  நார்மல்  ஸ்டோரி  பார்க்க  சந்தோசம் .


ஹீரோவா  பெண்களின்  மனம்  கவர்ந்த  , சுட்டிக்குழந்தைகளின்   அடுத்த  ரஜினி , விஜய்   ஆன  சிவகார்த்திகேயன்.  ஓப்பனிங்கில்   சூர்யா  போல்  கலக்கலா வந்து  பின்  தன்  பாணி   நடிப்பில்  அடக்கி  வாசிக்கிறார். ஹீரோயின்  உடன்  இவரது  காதல்  காட்சிகள்  கல  கல ரகம் பாடல்  காட்சிகளில்   விஜய்  பாதிப்பு .  ஆனால்  சிவாவின்  பாடி லேங்குவேஜ்   டான்ஸ்  மூவ்மெண்ட்சில்  நல்ல  முன்னேற்றம்., இதே  போல் தொடர்ந்து  நடித்தால்  இவர்  டாப்  ஹீரோ  ஆகிடுவார்


ஹீரோயினா  வாட்சப்  செல்ஃபி  புள்ள  ஸ்ரீ திவ்யா .  ரசகுல்லா ஜீராவில்   பால்கோவாவை  தொட்டு  எடுத்தது  போல் பள பள  கன்னம் . பீட்ரூட்  அல்வாவை   பஞ்சு  முட்டாயில்     முக்கி  எடுத்தது  போல்  சோ ஸ்வீட்  உதடு  (  இந்த  வர்ணணை  உத்தேசமா ,குத்து  மதிப்பா  எழுதுனது)கூந்த ல்  எப்போதும்   அலை  பாய்ந்து  கொண்டே  இருப்பது  கொள்ளை அழகு. பாடல்  காட்சிகளில்  கூட கண்ணியம்  காட்டும்  இவரது  ஜாக்கிரதைத்தனம்  டிரஸ்சிங்க் சென்ஸ்  அபாரம் . அடுத்த  நதியா  இவர் தான்  

காமெடிக்கு  இமான்  அண்ணாச்சி. கணீர்க்குரல்.  நல்ல  பாடி  லேங்குவேஜ். இவர் பெரிதாக   விட்  ஏதும் அடிக்கலைன்னாலும்  முன்  பாதி  கலகலப்பா  போக  இவரும்  காரணம்

அனிரூத்தின்   இசை  இந்தப்படத்தில்  பிரமாதப்படுத்தவில்லை  எனினும்   ஏமாற்றவில்லை . இண்ட்டர்வல்   ஃபைட்டின்போது  பிஜிஎம்  கலக்கல் ரகம். ஸ்ரீ திவ்யா  வைக்காப்பற்றும்  அந்த   ஃபைட்   காட்சியில்   ஒளிப்பதிவு  பின்னிப்பெடல்


பட்டுக்கோட்டை  பிரபாகர்  தான்  வசனம் . ஆங்காங்கே   இவரது   டச்   தெரிந்தாலும்   ஆஹா  அசத்திட்டார்ப்பா  என  சொல்லும்  அளவு   பெரிதாக   இல்லை.   


சிவகார்த்திகேயன்  படங்களில்   முன்  பாதி அளவு  பின் பாதி  ஒர்க் அவுட் ஆவதில்லை  என்ற பெயர்  இதிலும் உண்டு



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்  ,


1    ரஜினி  , அஜித்  விஜய்   ரசிகர்கள்    கை  தட்டலை  வாங்க  எல்லார்  படத்தில்  இருந்தும்   தலா  ஒரு  டயலாக்  வைத்தது



2   பெண்களைக்கவரும்  வகையில்   கண்ணியமான  காட்சிகள்  அமைத்தது 




3  இமான்  அண்ணாச்சி  , மனோபாலா  காமெடி  காம்போ   நல்லா  ஒர்க் அவுட்  ஆனது 


4  கட்டிக்கடி   பாட்டு    செம   டப்பாங்குத்து , அனிரூத்   ராக்கிங் 



5   சாது   மாதிரி  வரும்  ஸ்ரீதிவ்யா   குத்தாட்டப்பாட்டில்  போடும்  ஆட்டம்   செம . ஹாஸ்டல்  பொண்ணுங்க   ரூமை  சாத்திட்டு   சரக்கடிச்சா  மாதிரி  ஆடுவாங்க்ளே   அப்டி   ( கேள்வி அறிவு}




ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) = 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = ஓக்கே



 ரேட்டிங்  = 2. 75 / 5




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக