எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

என்னை அறிந்தால் படத்திற்கு விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய விமர்சனம்!…

என்னை அறிந்தால் படத்தை பார்க்க செல்வோர்களை விட, விமர்சனம் செய்ய செல்பவர்கள் தான் அதிகம். அந்த வகையில் சமூக வளைத்தளமான பேஸ்புக்கில் ஒரு விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய விமர்சனம் ஒன்று வெளிவந்துள்ளது.
தற்போது இந்த விமர்சனம் தான் அதிக ஷேர் ஆகி வருகிறது.

விஜய் ரசிகனின் விமர்சனம்:

என்னை அறிந்தால் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அஜித் என்றால் நம்பிக்கை, உழைப்பு, அபாரம், அழகு. பக்தன் கடவுள் மேலே வைத்துள்ள அன்பை விட ரசிகன் நடிகன் மீது வைத்துள்ள அன்பு பன்மடங்கு பெரியது, பக்தன் கூட கைமாறு கருதி அன்பு வைக்கிறான்… ஆனால் இவர்கள் எதையும் எதிர்பாராமல் வைக்கின்றனர்.

இந்த நடிகன், ரசிகனுக்கு இடையே உள்ள அன்பை புரிந்துகொள்ள நீங்கள் முதல் நாள் முதல் காட்சி போய் பாருங்கள் புரியும்.
நேற்று நான் பார்த்தேன் படத்தை மட்டுமல்ல அஜித்தின் பக்தர்களையும், படத்திற்க்கு மதிப்பெண் போடலாம். பக்தர்களின் அன்புக்கு முடியாது. சின்ன வேண்டுகோள், பாலபிசேகம் செய்து உங்கள் அன்பை காட்டாதிர்கள், பதிலாக அந்த பாலை அனாதை குழந்தைகளுக்கு கொடுங்கள். அஜித் அவர்களும் இதைதான் விருபுவார். இது விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்துதான்…இப்படிக்கு விஜய் ரசிகன்…. என்று தன் விமர்சனத்தை அட்வைஸுடன் முடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக